ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனையில் கலக்குவதற்கான காரணங்கள்!
ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனையில் கலக்குவதற்கான காரணங்களை இந்த செய்தியில் காணலாம்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் எளிமையாக ஓட்டிச் செல்வதற்கான சிறந்த சாதனமாக ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்கள் மாறி இருக்கின்றன. இந்த சூழலில், ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்று விரும்புபவர்களின் மனதில் முதல் தேர்வாக ஹோண்டா ஆக்டிவா நினைவில் வருகிறது. அந்தளவுக்கு இந்திய வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் தொடர்ந்து விற்பனையில் கலக்கி வருகிறது. அதற்கான சில காரணங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த 2001ம் ஆண்டு ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதுமுதல் மெல்ல மெல்ல இந்தியர்களின் நம்பகமான எளிய போக்குவரத்து சாதனமாக ஹோண்டா ஆக்டிவா மாறியது. ஸ்கூட்டர்கள் என்றால் இலக்காரமாக பார்த்த வாடிக்கையாளர்களை தனது டிசைன் மற்றும் செயல்திறன் மிக்க எஞ்சின் மூலமாக கவனத்தை ஈர்த்தது.

சராசரியாக மாதத்திற்கு 1.50 லட்சம் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகின்றன. நாள்தோறும் சராசரியாக 8,000 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகின்றன. இந்தளவு வாடிக்கையாளர்களை ஹோண்டா ஆக்டிவா சுண்டி இழுத்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் என்றாலே பெண்களுக்கான விஷயம் என்ற பிம்பத்தை தனது அதிரடி செயல்திறன் மூலமாக ஹோண்டா ஆக்டிவா மாற்றிக் காட்டியது. இந்த ஸ்கூட்டரில் இருக்கும் 109சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த எஞ்சினின் அதிரடியான செயல்திறன் இருபாலரையும் ஈர்த்து வருகிறது.

அசரடிக்கும் பிக்கப்பை தருவதோடு, லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் என்ற விஷயமும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த இரண்டும் சரி விகித கலவையாக இருப்பதால் ஹோண்டா ஆக்டிவாவுக்கான ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர

மார்க்கெட்டில் பல புதிய ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்கள் அறிமுகமாகி வந்தபோதிலும், தனது நேர்த்தியான டிசைன் மூலமாக வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. ஸ்கூட்டர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதுபோல ஒவ்வொரு பாகமும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு தக்கவாறு வசதிகளுடன் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது. எல்இடி ஹெட்லைட் உள்ளிட்ட அம்சங்களுடன் தற்போது ஹோண்டா ஆக்டிவா 5ஜி மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மொபைல்போன்சார்ஜர், பொருட்களை வைத்து எடுத்துச் செல்வதற்கான இடவசதி, வசதியாக அமர்ந்து செல்வதற்கான அகலமான இருக்கை என்பதும் இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களாக இருக்கின்றன.

அலுவலகம் செல்வோர், இல்லத்தரசிகள், கல்லூரி செல்வோர், முதியோர் என அனைத்து தரப்பட்ட வாடிக்கையாளர்களும் எளிதாக கையாளும் அம்சங்களை பெற்றிருக்கிறது. இதுவே விற்பனை நாளுக்கு நாள் கூடி வருவதற்கு காரணம்.

ரூ.52,460 எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் கிடைக்கிறது. இது மார்க்கெட்டில் உள்ள பல பட்ஜெட் பைக் மாடல்களைவிடை விலை குறைவானதாக இருக்கிறது.

மேலும், பிற பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களை காட்டிலும் புதிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் குறைவான பராமரிப்பு மற்றும் நம்பகத்தன்மையும் முக்கிய காரணமாக இருக்கிறது.

சில ஆண்டுகள் கழித்து விற்பனை செய்யும்போது எதிர்பார்ப்பைவிட அதிக ரீசேல் மதிப்பை கொண்ட வாகனமாகவும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விளங்குகிறது.

அத்துடன், தற்போது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் 110சிசி மாடல் மட்டுமின்றி, அதிக செயல்திறன் கொண்ட 125சிசி மாடலிலும் கிடைக்கிறது. ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் அந்தஸ்துக்கான அடையாளமுமாக விளங்குகிறது.


Click it and Unblock the Notifications








