விற்பனையில் இமாலய சாதனை படைத்தது ஹோண்டா சிபி ஷைன்.. மிரண்டு கிடக்கும் போட்டி நிறுவனங்கள்..
ஹோண்டா சிபி ஷைன் மோட்டார்சைக்கிள் விற்பனையில் புதிய இமாலய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஹோண்டா சிபி ஷைன் மோட்டார்சைக்கிள் விற்பனையில் புதிய இமாலய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle and Scooter India-HMSI) நிறுவனத்தில் இருந்து வெளிவரும் முதன்மையான 125 சிசி மோட்டார்சைக்கிள்களில் ஒன்று சிபி ஷைன் (CB Shine).

இந்த சூழலில், சிபி ஷைன் மோட்டார்சைக்கிளானது 70 லட்சம் என்ற விற்பனை மைல்கல்லை தற்போது எட்டியிருப்பதாக ஹோண்டா நிறுவனம் பெருமிதத்துடன் அறிவித்துள்ளது.

இதுதவிர இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் டாப்-4 மோட்டார்சைக்கிள்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஒரே 125 சிசி மோட்டார்சைக்கிள் சிபி ஷைன் மட்டும்தான் எனவும் ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

125 சிசி மோட்டார்சைக்கிள் செக்மெண்ட்டின் தலைவனாக ஹோண்டா நிறுவனம் திகழ்கிறது. ஏனெனில் இந்த செக்மெண்ட்டின் 51 சதவீத மார்க்கெட் ஷேரை ஹோண்டா நிறுவனமே தன் கைவசம் வைத்துள்ளது. இதற்கு சிபி ஷைன் சீரிஸ் பைக்குகள்தான் மிக முக்கியமான காரணம்.

இந்த சூழலில், 125 சிசி மோட்டார்சைக்கிள் செக்மெண்ட் 2 சதவீத சரிவை சந்தித்துள்ளது. அப்படி இருந்தும் கூட ஹோண்டா சிபி ஷைன் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை 10 சதவீத வளர்ச்சியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.

இதுகுறித்து ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சிபி ஷைன் மோட்டார்சைக்கிள்களின் 70 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக இந்த மைல்கல்லை எட்டியுள்ளோம். இது எங்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா சிபி ஷைன் மோட்டார்சைக்கிளில், 124.73 சிசி, ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 10.16 பிஎச்பி பவர் மற்றும் 10.30 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது.

ஹோண்டா சிபி ஷைன் பைக் கடந்த 2006ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த 4 ஆண்டுகளில், அதாவது 2010ம் ஆண்டில், 10 லட்சம் என்ற விற்பனை மைல்கல்லை ஹோண்டா சிபி ஷைன் மோட்டார்சைக்கிள் எட்டியது.

அடுத்த 4 ஆண்டுகளில், அதாவது 2014ம் ஆண்டில், 30 லட்சம் என்ற விற்பனை மைல்கல்லை சிபி ஷைட் எட்டியது. இதன்பின் 2017ம் ஆண்டில், 50 லட்சம் என்ற விற்பனை மைல்கல்லை எட்டிய முதல் 125 சிசி மோட்டார்சைக்கிள் என்ற பிரம்மாண்ட சாதனையை ஹோண்டா சிபி ஷைன் படைத்தது.

எஞ்சிய 20 லட்சம் மோட்டார்சைக்கிள்கள் வெறும் ஒரே ஆண்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில், குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சிபி ஷைன் மோட்டார்சைக்கிள்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

ஹோண்டா சிபி ஷைன் மோட்டார்சைக்கிள்கள் 6 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த மோட்டார்சைக்கிளின் நீளமான இருக்கை, சௌகரியமான பயணத்திற்கு உதவி செய்கிறது.

மொத்தம் 3 வேரியண்ட்களில் சிபி ஷைன் மோட்டார்சைக்கிள்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில், சிபி ஷைன் ட்ரம் ப்ரேக் பைக்கானது 57,683 ரூபாய்க்கும், சிபி ஷைன் டிஸ்க் பிரேக் பைக்கானது 59,997 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுதவிர மூன்றாவது வேரியண்ட்டான சிபி ஷைன் (டிஸ்க் பிரேக் உடன் சிபிஎஸ்) பைக்கானது, 62,903 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.


Click it and Unblock the Notifications