இந்தியாவில் ரூ. 62,032 விலையில் விற்பனைக்கு அறிமுகமான 2018 ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி பைக்..!!
இந்தியாவில் ரூ. 62,032 விலையில் விற்பனைக்கு அறிமுகமான 2018 ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி பைக்..!!
இந்தியாவில் 2018 சிபி ஷைன் எஸ்பி மோட்டார் சைக்கிளை ரூ. 62,032 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது ஹோண்டா நிறுவனம்.

டெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற 2018 ஆட்டோ எக்ஸ்போவின் போது இந்த பைக்கை ஹோண்டா வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் விற்பனைக்கு வந்துள்ள இந்த பைக்கின் வேரியன்ட் மற்றும் அதன் விலை குறித்த விவரங்கள் கீழே...
| வேரியன்ட் | விலை |
| சிபி ஷைன் எஸ்பி (டிரம்) | ரூ. 62,032 |
| சிபி ஷைன் எஸ்பி (டிஸ்க்) | ரூ. 64,518 |
| சிபி ஷைன் எஸ்பி (சிபிஎஸ்) | ரூ. 66,508 |

2018 ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி பைக்கில் ஏர்-கூல்டு கொண்ட சிங்கிள் சிலிண்டர் 124.73சிசி எஞ்சின் உள்ளது. இது 10.16 பிஎச்பி பவர் மற்றும் 10.30 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் கூட்டணி அமைத்துள்ள இந்த எஞ்சின் சிறந்த செயல்திறனை வழங்கும். மேலும் இந்த பைக் 10.5 லிட்டர் எரிவாயு கொள்ளவு திறனை கொண்டுள்ளது.
Recommended Video


பைக்கின் முன்சக்கரத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்சக்கரத்தில் ட்வின் ஷாக் ஆகியவை சஸ்பென்ஷன் தேவையை பூர்த்தி செய்கின்றன.
2018 ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி பைக்கின் பேஸ் வேரியன்டில், முன்பக்க சக்கரத்தில் 130 மிமீ டிரம் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

அதேபோல மற்ற இரண்டு வேரியன்டுகளின் முன் சக்கரங்களில் 240 மிமீ டிஸ்க் இடம்பெற்றுள்ளன. 18 இஞ்ச் ஸ்போகிடு அலாய் சக்கரங்கள் இந்த பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளன.

புதிய தோற்றப்பொலிவுகள் மற்றும் சிறப்பம்சங்கள் தொடர்பான அப்டேட்டுகள் பல இந்த பைக்கில் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதன் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

பிளாக் அத்தலெட்டிக் ப்ளூ மெட்டாலிக், இம்பிரியல் ரெட் மெட்டாலிக், ஜெனி கிரே மெட்டாலிக் மற்றும் பியர் சைரன் ப்ளூ என மொத்தம் 5 வித வண்ணங்களில் 2018 ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி பைக் விற்பனைக்கு வருகிறது.

இந்தியாவில் பஜாஜ் டிஸ்கவர் 125 மற்றும் ஹீரோ கிளாமர் எஃப்.ஐ பைக்குகளுக்கு போட்டியாக களமிறங்கியுள்ள இந்த பைக், செயல்திறன் மற்றும் பயன்பாடு சார்ந்த தேவைகளில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications








