கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.. 'மேட் இன் இந்தியா' ஹோண்டா நவி புதிய சாதனை..

1 லட்சம் நவி மோட்டோ ஸ்கூட்டர்களை விற்பனை செய்து ஹோண்டா நிறுவனம் சாதனை படைத்துள்ளது. இதுதவிர இந்தியாவில் இருந்து 2 புதிய நாடுகளுக்கும் நவி மோட்டோ ஸ்கூட்டர்கள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

By Arun

1 லட்சம் நவி மோட்டோ ஸ்கூட்டர்களை விற்பனை செய்து ஹோண்டா நிறுவனம் சாதனை படைத்துள்ளது. இதுதவிர இந்தியாவில் இருந்து 2 புதிய நாடுகளுக்கும் நவி மோட்டோ ஸ்கூட்டர்கள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.. 'மேட் இன் இந்தியா' ஹோண்டா நவி புதிய சாதனை..

இந்தியாவில் உள்ள இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மோட்டோ ஸ்கூட்டர் ஹோண்டா நவி. ஆக்டிவா ஸ்கூட்டரை அடிப்படையாக வைத்து, புதிய நவி மோட்டோ ஸ்கூட்டரை வடிவமைத்தது ஹோண்டா நிறுவனம். கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் நவி மோட்டோ ஸ்கூட்டர் லான்ச் செய்யப்பட்டது.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.. 'மேட் இன் இந்தியா' ஹோண்டா நவி புதிய சாதனை..

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தில் இருந்து, முழுக்க முழுக்க இந்தியாவிலேயே டெவலப் செய்யப்பட்டு வெளிவந்த முதல் டூவீலர் நவிதான். அதாவது இந்தியாவிற்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட (made in India) மோட்டோ ஸ்கூட்டர் நவி.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.. 'மேட் இன் இந்தியா' ஹோண்டா நவி புதிய சாதனை..

தற்போது 1 லட்சம் நவி மோட்டோ ஸ்கூட்டர்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது ஹோண்டா நிறுவனம். ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர் இந்த இலக்கை எட்ட சுமார் இரண்டரை ஆண்டுகளை எடுத்து கொண்டுள்ளது.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.. 'மேட் இன் இந்தியா' ஹோண்டா நவி புதிய சாதனை..

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டரின் வித்தியாசமான டிசைன், இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. எனவே லான்ச் செய்யப்பட்ட உடனேயே அதன் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியது. இதனால் லான்ச் செய்யப்பட்ட முதல் 8 மாதங்களுக்கு உள்ளாக, 50,000 நவி மோட்டோ ஸ்கூட்டர்கள் விற்பனையானது.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.. 'மேட் இன் இந்தியா' ஹோண்டா நவி புதிய சாதனை..

ஆனால் ஆரம்ப கட்ட எழுச்சிக்கு பின் ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டரின் விற்பனை திடீரென 'டல்' அடிக்க தொடங்கியது. இதனால் 2018ம் ஆண்டில், நவி மோட்டோ ஸ்கூட்டரில் சில மாற்றங்களை செய்தது ஹோண்டா நிறுவனம்.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.. 'மேட் இன் இந்தியா' ஹோண்டா நவி புதிய சாதனை..

இதன்மூலம் விற்பனை மீண்டும் சூடுபிடித்து, தற்போது 1 லட்சம் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர். தற்போதைய நிலையில் நவி மோட்டோ ஸ்கூட்டரை இந்தியாவில் இருந்து 10 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது ஹோண்டா நிறுவனம்.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.. 'மேட் இன் இந்தியா' ஹோண்டா நவி புதிய சாதனை..

இந்நிலையில் கோஸ்டா ரிகா மற்றும் டொமினிகன் குடியரசு உள்ளிட்ட 2 புதிய மார்க்கெட்களுக்கு, நவி மோட்டோ ஸ்கூட்டர்களை ஏற்றுமதி செய்யவுள்ளதாக ஹோண்டா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. நவி மோட்டோ ஸ்கூட்டரின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை 44,775 ரூபாய்.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.. 'மேட் இன் இந்தியா' ஹோண்டா நவி புதிய சாதனை..

பேட்ரியாட் ரெட், சாஸ்தா ஒயிட், ஸ்பார்கி ஆரஞ்ச், பிளாக், ரேஞ்சர் க்ரீன் மற்றும் லடாக் ப்ரவுன் என 6 வண்ணங்களில் நவி மோட்டோ ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது. இதில், 109 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.. 'மேட் இன் இந்தியா' ஹோண்டா நவி புதிய சாதனை..

புதிய ஹோண்டா ஆக்டிவாவில் இருக்கும் அதே இன்ஜின்தான் இது. இந்த இன்ஜின் 7,000 ஆர்பிஎம்மில் 7.89 பிஎச்பி பவர் மற்றும் 5,500 ஆர்பிஎம்மில் 8.96 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடிய சக்தி வாய்ந்தது. நவி மோட்டோ ஸ்கூட்டரின் 2 வீல்களிலும் டியூப் லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

More from DriveSpark

Article Published On: Friday, August 17, 2018, 11:05 [IST]
English summary
Honda Navi's New Record. Read in Tamil
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+