2018 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஹோண்டா பிசிஎக்ஸ் மின்சார ஸ்கூட்டர் காட்சிக்கு வெளியீடு..!!

Written By:

டெல்லி நொய்டாவின் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் புதிய பிசிஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்சிப்படுத்தியுள்ளது ஹோண்டா.

சர்வதேச அளவில் பல நாடுகளில் விற்பனையாகி வரும் பிசிஎக்ஸ் 150 ஸ்கூட்டரின் மின்சார வடிவம் தான் பிசிஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்று தெரிவித்துள்ளது ஹோண்டா.

ஹோண்டா பிசிஎக்ஸ் மின்சார ஸ்கூட்டர் காட்சிக்கு வெளியீடு..!!

2016ம் நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முறையாக பிஎசிஎக்ஸ் ஸ்கூட்டர் காட்சிப்படுத்தப்பட்டது. தற்போது இதனுடைய மின்சார வடிவம் இந்தாண்டு எக்ஸ்போவிற்கு வந்துள்ளது.

ஹோண்டா பிசிஎக்ஸ் மின்சார ஸ்கூட்டர் காட்சிக்கு வெளியீடு..!!

இந்தியா ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாக 2017ம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் பிசிஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் காட்சிக்கு வந்தது.

ஹோண்டா பிசிஎக்ஸ் மின்சார ஸ்கூட்டர் காட்சிக்கு வெளியீடு..!!

ஸ்போர்டி திறன் பெற்ற தோற்றத்தில் இருக்கும் இந்த ஸ்கூட்டரின் மொத்த அமைப்பு எதிர்கால வாகன கட்டமைப்புகளை பூர்த்தி செய்கிறது. இதுவே இந்த ஸ்கூட்டருக்கான தனி அடையாளமாக உள்ளது.

ஹோண்டா பிசிஎக்ஸ் மின்சார ஸ்கூட்டர் காட்சிக்கு வெளியீடு..!!

0.98 கிலோ வால்ட் மின்சார மோட்டார் கொண்ட ஹோண்டா பிசிஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கழட்டி மாட்டும் வசதிக்கொண்ட லித்தியம்-ஐயன் பேட்டரி உள்ளது.

Recommended Video - Watch Now!
Under-Aged Rider Begs The Policewomen To Spare Him - DriveSpark
ஹோண்டா பிசிஎக்ஸ் மின்சார ஸ்கூட்டர் காட்சிக்கு வெளியீடு..!!

அதுமட்டுமின்றி, இந்த பேட்டரியை ஸ்கூட்டரில் இருந்தவாறே சார்ஜ் செய்யலாம். அது வெளியே எடுத்தும் இதற்கு சார்ஜ் வழங்க முடியும்.

பிசிஎக்ஸ் மின்சார ஸ்கூட்டரின் பேட்டரியை கழட்டி சார்ஜ் செய்யும் போது, அதற்கான திறன் கூடுகிறது. மேலும் சார்ஜிங் நேரமும் குறைகிறது.

ஹோண்டா பிசிஎக்ஸ் மின்சார ஸ்கூட்டர் காட்சிக்கு வெளியீடு..!!

இதுதவிர இந்த புதிய மின்சார ஸ்கூட்டர் குறித்த எந்த தகவல்களையும் ஹோண்டா நிறுவனம் எக்ஸ்போவில் வெளியிடவில்லை.

அலாய் சக்கரங்கள், முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக் அமைப்பு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பெரிய விண்டுஸ்க்ரீன் என ஸ்கூட்டரின் அம்சங்கள் அசரடிக்கின்றன.

ஹோண்டா பிசிஎக்ஸ் மின்சார ஸ்கூட்டர் காட்சிக்கு வெளியீடு..!!

பிசிஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்சக்கரத்திலும் டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின் சக்கரத்தில் டூயல் ஷாக் அப்ஸபர்கள் சஸ்பென்ஷன் தேவையை பூர்த்தி செய்கின்றன.

ஹோண்டா பிசிஎக்ஸ் மின்சார ஸ்கூட்டர் காட்சிக்கு வெளியீடு..!!

இரண்டு வித முகப்பு விளக்குகள் கொண்ட ஏப்ரன், எல்.இ.டி திறன் பெற்ற டெயில் விளக்குகள் மற்றும் ஸ்போர்டி வடிவிலான இருக்கை அமைப்பு என இந்த ஸ்கூட்டரின் ஒவ்வொரு உருவாக்கத்தையும் ஹோண்டா பார்த்து பார்த்து வடித்துள்ளது.

ஹோண்டா பிசிஎக்ஸ் மின்சார ஸ்கூட்டர் காட்சிக்கு வெளியீடு..!!

பிசிஎக்ஸ் மின்சார ஸ்கூட்டரின் தயாரிப்பு பணிகளை ஹோண்டா விரைவில் மேற்கொள்ளவுள்ளது. இந்தாண்டு இறுதியில் இந்தியா உட்பட பல்வேறு ஆசிய நாடுகளில் பிசிஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும்.

ஹோண்டா பிசிஎக்ஸ் மின்சார ஸ்கூட்டர் காட்சிக்கு வெளியீடு..!!

வெளிநாடுகளில் விற்பனையாகி வரும் பிசிஎக்ஸ் பயணிகள் ரக ஸ்கூட்டரின் மாடலில் தான் ஹோண்டா இந்த மின்சார திறன் பெற்ற வாகனத்தை உருவாக்கியுள்ளது.

ஹோண்டா பிசிஎக்ஸ் மின்சார ஸ்கூட்டர் காட்சிக்கு வெளியீடு..!!

எதிர்கால வாகன தேவையை பூர்த்தி செய்யும் அமைப்பு, ஸ்போர்டி அம்சங்கள் என பிசிஎக்ஸ் மின்சார ஸ்கூட்டரின் ஒவ்வொரு கட்டமைப்பும் கவர்கிறது.

ஹோண்டா பிசிஎக்ஸ் மின்சார ஸ்கூட்டர் காட்சிக்கு வெளியீடு..!!

இந்தாண்டு முதல் இந்த ஸ்கூட்டருக்கான உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டு, 2018 இறுதியில் பிசிஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஹோண்டா விற்பனைக்கு கொண்டு வருகிறது.

English summary
Read in Tamil: Honda PCX Electric Concept Showcased - Specifications, Features & Images. Click for Details...
Story first published: Sunday, February 11, 2018, 15:01 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark