புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக்கிற்கு புக்கிங் ஆரம்பம்!

ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு கொண்டு வரப்பட்ட புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக்கிற்கு முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது.

By Saravana Rajan

ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு கொண்டு வரப்பட்ட ஹோண்டா நிறுவனத்தின் புதிய எக்ஸ்-பிளேடு 160சிசி பைக்கிற்கு முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக்கிற்கு புக்கிங் ஆரம்பம்!

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களில், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த மாடல் ஹோண்டா எக்ஸ்- பிளேடு 160 பைக். நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் கவர்ச்சிகரமான இந்த பைக் எப்போது விற்பனைக்கு வரும் என்று பைக் விரும்புவோர் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியது. அவர்களுக்கான நல்ல செய்தி ஹோண்டா மோட்டார்சைககிள் நிறுவனத்திடமிருந்து வந்துள்ளது.

புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக்கிற்கு புக்கிங் ஆரம்பம்!

புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக்கிற்கான முன்பதிவு இன்றுமுதல் துவங்கப்பட்டு இருப்பதாக ஹோண்டா நிறுவனம் அனுப்பி இருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் எல்லோர் மத்தியிலும் ஆவலை ஏற்படுத்தி இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக்கிற்கு புக்கிங் ஆரம்பம்!

புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக்கில் முழுவதுமான எல்இடி ஹெட்லைட் பொருத்தப்பட்டு இருக்கிறது. முகப்பு பார்ப்பதற்கு எந்திர மனிதனை பிரதிபலிப்பது போல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக்கிற்கு புக்கிங் ஆரம்பம்!

முகப்பில் மட்டுமல்ல, முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. வண்டியின் வேகம் தவிர்த்து கூடுதலாக சர்வீஸ் செய்வதற்கான கால இடைவெளியை தெரிவிக்கும் வசதி, கியர் இண்டிகேட்டர் போன்ற கூடுதல் வசதிகளையும் பெற முடியும்.

புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக்கிற்கு புக்கிங் ஆரம்பம்!

முகப்பு போலவே, பெட்ரோல் டேங்கின் வடிவமைப்பும் முறுக்கேறிய உடம்பு போல மிரட்டலாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் டேங்கின் கீழே கருப்பு வண்ண பேனலில் எக்ஸ்- பிளேடு என்ற பிராண்டு பெயர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக்கிற்கு புக்கிங் ஆரம்பம்!

பெட்ரோல் டேங்க், முன்புற மட்கார்டு, ஹெட்லைட் பேனல்கள் போன்றவை ஒரு வண்ணத்திலும், எஞ்சின் பாகங்கள் மற்றம் உடல் அமைப்பும், கருப்பு வண்ண அலாய் வீல்களும் இந்த பைக்கிற்கு இரட்டை வண்ணக் கலவையை அ்ளிக்கிறது.

புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக்கிற்கு புக்கிங் ஆரம்பம்!

பின்புறத்தில் புதிய டெயில் லைட் ஹவுசிங் பைக்கிற்கு கூடுதல் வசீகரத்தை அளிக்கிறது. பின்புறத்தில் இரண்டு கைப்பிடிகளுடன் கிராப் ரெயில் அமைப்பு இடம்பிடித்து இருக்கிறது. அகலமான பின்புற டயரும் மிரட்டலை கூட்டுகிறது.

புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக்கிற்கு புக்கிங் ஆரம்பம்!

ஹோண்டா ஹார்னெட் பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே 162.7சிசி எஞ்சின்தான் புதிய எக்ஸ்- பிளேடு பைக்கிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 13.93 பிஎச்பி பவரையும், 13.9 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக்கிற்கு புக்கிங் ஆரம்பம்!

புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக் டைமண்ட் ஃப்ரேம் சேஸீயில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. 17 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த பைக்கின் முன்புறத்தில் 80/110 R17 அளவுடைய டயரும், பின்சக்கரத்தில் 130/70 R17 அளவுடைய டயரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக்கிற்கு புக்கிங் ஆரம்பம்!

புதிய ஹோண்டா எக்ஸ் பிளேடு பைக்கின் முன்சக்கரத்தில் சிங்கிள் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் டிரம் பிரேக் அமைப்பு இருக்கிறது.

புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக்கிற்கு புக்கிங் ஆரம்பம்!

புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக் மாடலானது நீலம், சில்வர், சிவப்பு, கருப்பு மற்றும் பச்சை ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கும்.

புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக்கிற்கு புக்கிங் ஆரம்பம்!

புதிய ஹோண்டா எக்ஸ்பிளேடு பைக்கின் வடிவமைப்பும், தொழில்நுட்ப அம்சங்களும் இளைஞர்களையும், நடுத்தர வயது வாடிக்கையாளர்களையும் குறி வைத்து களமிறக்கப்பட இருக்கிறது.

புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக்கிற்கு புக்கிங் ஆரம்பம்!

அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய ஹோண்டா பைக் ரூ.79,000க்குள் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்படும் என்று உறுதியாகி இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 14, 2018, 18:15 [IST]
English summary
Honda X-Blade bookings open. Honda has confirmed that prices for the all-new X-Blade will start below Rs 79,000 ex-showroom and the new premium commuter motorcycle will be offered in 5 different colour options.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+