விரைவில் இந்தியா வரும் புதிய ஹல்க்வர்னா பைக்குகள்!

வடிவமைப்பில் மிக ஸ்டைலான ஹஸ்க்வர்னா பைக் மாடல்கள் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கின்றன. இதுபற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

விரைவில் இந்தியாவில் வரும் புதிய ஹல்க்வர்னா பைக்குகள்!

ஸ்வீடனை சேர்ந்த ஹஸ்க்வர்னா பைக் தயாரிப்பு நிறுவனம் ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஹஸ்க்வர்னா பைக்குகளை பஜாஜ் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் கேடிஎம் நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

விரைவில் இந்தியாவில் வரும் புதிய ஹல்க்வர்னா பைக்குகள்!

அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஹஸ்க்வர்னா பைக் மாடல்கள் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வாயிலாக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக மணிகன்ட்ரோல் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. ஹஸ்க்வர்னா விட்பிளேன் 401 மற்றும் ஸ்வர்ட்பிளேன் 401 ஆகிய இரண்டு பைக் மாடல்கள் முதலில் இந்தியா வர இருக்கின்றன.

விரைவில் இந்தியாவில் வரும் புதிய ஹல்க்வர்னா பைக்குகள்!

ஹஸ்க்வர்னா விட்பிளேன் 401 மற்றும் ஸ்வர்ட்பிளேன் 401 ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள்களும் ஆஸ்திரியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அங்கிருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

விரைவில் இந்தியாவில் வரும் புதிய ஹல்க்வர்னா பைக்குகள்!

இந்த நிலையில், ஹஸ்க்வர்னா பைக்குகளின் உற்பத்தியை முற்றிலுமாக இந்தியாவிற்கு மாற்றுவதற்கு பஜாஜ் - கேடிஎம் கூட்டணி திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஹஸ்க்வர்னா பைக்குகள் முதலில் இறக்குமதி செய்யப்பட்டாலும், அறிமுகம் செய்யப்பட்ட 6 மாதங்களில் இந்த பைக்குகள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.

விரைவில் இந்தியாவில் வரும் புதிய ஹல்க்வர்னா பைக்குகள்!

இதனால், சந்தையில் மிக சவாலான விலையில் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. கேடிஎம் பைக்குகள் எவ்வாறு இந்திய இளைஞர்களை வசியப்படுத்தியதோ, அதேபோன்று ஹஸ்க்வர்னா பைக்குகளும் இந்திய இளைஞர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், மிக வித்தியாசமான வடிவமைப்புடன் வருவது முக்கிய காரணம்.

MOST READ: டேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா...! உசுர விட பாத்தியே...!

விரைவில் இந்தியாவில் வரும் புதிய ஹல்க்வர்னா பைக்குகள்!

அடுத்து, இந்த இரண்டு பைக்குகளுமே கேடிஎம் ட்யூக் 390 பைக்கின் அடிப்படையிலான மாடல்கள்தான். எனவே, கேடிஎம் ட்யூக் 390 பைக்கின் எஞ்சின் உள்ளிட்ட பல முக்கிய உதிரிபாகங்களை இந்த இரண்டு மாடல்களும் பகிர்ந்து கொண்டுள்ளன.

விரைவில் இந்தியாவில் வரும் புதிய ஹல்க்வர்னா பைக்குகள்!

ஹஸ்க்வர்னா விட்பிளேன் 401 மற்றும் ஸ்வர்ட்பிளேன் 401 பைக் மாடல்களில் 373.3சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 43 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

விரைவில் இந்தியாவில் வரும் புதிய ஹல்க்வர்னா பைக்குகள்!

இந்த பைக்குகளில் முன்புறத்தில் 320 மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், எல்இடி ஹெட்லைட் இடம்பெற்றிருக்கும்.

விரைவில் இந்தியாவில் வரும் புதிய ஹல்க்வர்னா பைக்குகள்!

ஹஸ்க்வர்னா விட்பிளேன் 401 பைக் கஃபே ரேஸர் மாடலாக வருகிறது. இந்த பைக்கில் க்ளிப் ஆன் ஹேண்டில்பார் மற்றும் ஸ்போக்ஸ் வீல்கள் உள்ளன. ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 401 பைக்கானது ஸ்க்ராம்ப்ளர் ரக மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதில், அகலமான ஹேண்டில்பார் அமைப்பு மற்றும் ஸ்போக்ஸ் வீல்கள் இடம்பெற்றுள்ளன.

Most Read Articles

Tamil
மேலும்... #ஹஸ்க்வர்னா
English summary
Husqvarna India is all set to begin operations in the country soon. As per reports, the Austrian motorcycle manufacturer will debut in India by mid-2019. The new Husqvarna bikes will be sold in India by Bajaj Auto and now more details about the launch have been revealed. MoneyControl reports that the Husqvarna Vitpilen 401 and Svartpilen 401 will be launched in India as CBU units.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more