IMOTY 2019 விருதை வென்றது ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார்!

இந்த ஆண்டின் சிறந்த மோட்டார்சைக்கிளுக்கான விருதை (IMOTY 2019) ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் வென்றுள்ளது. இந்திய ஆட்டோமொபைல் பத்திரிக்கை துறையை சேர்ந்த 16 பேர் கொண்ட நடுவர் குழு இந்த விருதுக்கு இன்

இந்த ஆண்டின் சிறந்த மோட்டார்சைக்கிளுக்கான விருதை (IMOTY 2019) ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் வென்றுள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

IMOTY 2019 விருதை வென்றது ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார்!

இந்த ஆண்டின் சிறந்த காருக்கான விருதை (ICOTY 2019) கடும் போட்டிக்கு மத்தியில் புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் வென்றுள்ளது. அதேபோன்று, மோட்டார்சைக்கிள்களுக்கான பிரிவிலும் கடும் போட்டி நிலவியது.

IMOTY 2019 விருதை வென்றது ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார்!

சிறந்த மோட்டார்சைக்கிளை தேர்வு செய்யும் பொறுப்பை, இந்திய ஆட்டோமொபைல் பத்திரிக்கை துறையை சேர்ந்த 16 பேர் கொண்ட நடுவர் குழு ஏற்றது. இந்த ஆண்டில் அறிமுகமான 12 புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் இறுதி பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பிரிவுகளின் ஆய்வுகள் செய்யப்பட்டு சிறந்த மோட்டார்சைக்கிளை தேர்வு செய்யும் பணி நடந்தது.

IMOTY 2019 விருதை வென்றது ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார்!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர், யமஹா ஆர்15 வி3, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310, பிஎம்டபிள்யூ ஜி310ஆர், பிஎம்டபிள்யூ ஜி 310ஜிஎஸ், ஹோண்டா சிபிஆர் 650எஃப், சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி, சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் எஸ்750, டிரையம்ஃப் டைகர் 800, எஸ்டபிள்யூஎம் சூப்பர்டியூவல் டி மற்றும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 ஆகிய மாடல்கள் போட்டி போட்டன.

IMOTY 2019 விருதை வென்றது ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார்!

இறுதியில் பல்வேறு தரவுகளின் அடிப்படையில் இந்த ஆண்டின் சிறந்த மோட்டார்சைக்கிளுக்கான விருதை (IMOTY 2019) ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் பெற்றிருக்கிறது. இந்த பெருமைமிகு விருதை நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தவரும், ஜேகே டயர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான ரகுபதி சிங்கானியாவிடமிருந்து ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சிஇஓ சித்தார்த் லால் பெற்றுக் கொண்டார்.

IMOTY 2019 விருதை வென்றது ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார்!

கடந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாக இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிளாக வந்ததுடன், இரட்டை சிலிண்டர் கொண்ட மாடலாகவும் அறிமுகம் செய்யப்பட்டது.

IMOTY 2019 விருதை வென்றது ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார்!

இந்த மோட்டார்சைக்கிளில் 649சிசி ஏர் / ஆயில் கூல்டு பேரலல் ட்வின் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

IMOTY 2019 விருதை வென்றது ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார்!

மேலும், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இந்த மோட்டார்சைக்கிளில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மாடர்ன் கிளாசிக் ரகத்தில் இதற்கு இணையான நேர் போட்டியாளர்கள் இப்போது இல்லை. இது தனித்துவமான மாடலாக மிக சிறந்த பட்ஜெட்டில் கிடைக்கும் மோட்டார்சைக்கிள் மாடலாக விளங்குகிறது.

Most Read Articles
English summary
Royal Enfield Interceptor 650 wins the prestigious Indian Motorcycle Of The Year (IMOTY 2019) award. Launched in November 2018 at a compelling price tag of Rs 2.50 lakh ex-showroom (Delhi), the new Interceptor 650 is one of the two first 'modern' twin-cylinder motorcycles from the British-origin brand in India; the other one being the Continental GT 650.
Story first published: Saturday, December 22, 2018, 10:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X