மோடி ஊரு போலீசுக்கு ஹார்லி டேவிட்சன் பைக்.. நம்ம ஊரு போலீஸ் கொடுத்து வெச்சது இவ்ளோதான்..

மிகவும் விலை உயர்ந்த ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு குஜராத் போலீசார் மாறி விட்ட நிலையில், தமிழ்நாடு போலீசார் இன்னமும் டிவிஎஸ் பைக்குகளை பயன்படுத்தி வருகின்றனர்.

By Arun

மிகவும் விலை உயர்ந்த ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு குஜராத் போலீசார் மாறி விட்ட நிலையில், தமிழ்நாடு போலீசார் இன்னமும் டிவிஎஸ் பைக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். எந்தெந்த போலீசார் என்னென்ன பைக்குகளை பயன்படுத்துகின்றனர்? என்பது குறித்த சுவாரசிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இன்னமும் டிவிஎஸ் பயன்படுத்தும் தமிழ்நாடு போலீஸ்.. குஜராத் போல் ஹார்லி டேவிட்சனுக்கு மாறுவது எப்போ?

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 (Harley-Davidson Street 750)

குஜராத், கொல்கத்தா போலீஸ்

விலை உயர்ந்த ஹார்லி டேவிட்சன் பைக்குகளை, இந்தியாவில் முதன் முதலாக பயன்படுத்திய போலீஸ் படை என்ற பெருமை குஜராத் போலீசாரையே சாரும். அதன்பின்பு கொல்கத்தா போலீசாரும், ஹார்லி டேவிட்சன் பைக்குகளை பயன்படுத்த தொடங்கினர்.

இன்னமும் டிவிஎஸ் பயன்படுத்தும் தமிழ்நாடு போலீஸ்.. குஜராத் போல் ஹார்லி டேவிட்சனுக்கு மாறுவது எப்போ?

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்குகளை, குஜராத் மற்றும் கொல்கத்தா போலீசார் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பைக்குகளில் யுடிலிட்டி பாக்ஸ், பொது மக்களுக்கு ஏதேனும் அறிவிப்பை வெளியிடுவதற்காக பயன்படும் மைக் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

இன்னமும் டிவிஎஸ் பயன்படுத்தும் தமிழ்நாடு போலீஸ்.. குஜராத் போல் ஹார்லி டேவிட்சனுக்கு மாறுவது எப்போ?

ஆனால் குஜராத் மற்றும் கொல்கத்தா போலீசார், மிடுக்கான விஐபி கான்வாய் போன்ற ஏதேனும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே ஹார்லி டேவிட்சன் பைக்குகளை பயன்படுத்துகின்றனர். சாதாரணமாக ரோந்து செல்வதற்கு இந்த பைக்குகளை பயன்படுத்துவது கிடையாது.

இன்னமும் டிவிஎஸ் பயன்படுத்தும் தமிழ்நாடு போலீஸ்.. குஜராத் போல் ஹார்லி டேவிட்சனுக்கு மாறுவது எப்போ?

ராயல் என்பீல்டு (Royal Enfield)

மும்பை, கொல்கத்தா, டெல்லி, ராஜஸ்தான் போலீஸ்

இந்திய ராணுவத்தின் முதல் அதிகாரப்பூர்வ டூவீலர் என்ற பெருமையை ராயல் என்பீல்டு புல்லட் பெற்றுள்ளது. இந்திய ராணுவத்தில், புல்லட் பைக் தனது திறமையை நிரூபித்து காட்டிய பிறகு, இந்தியாவின் பல்வேறு மாநில போலீசாரும் ராயல் என்பீல்டு பைக்குகளை பயன்படுத்த தொடங்கினர்.

இன்னமும் டிவிஎஸ் பயன்படுத்தும் தமிழ்நாடு போலீஸ்.. குஜராத் போல் ஹார்லி டேவிட்சனுக்கு மாறுவது எப்போ?

மும்பை, கொல்கத்தா, டெல்லி, ராஜஸ்தான் போலீசார், இன்றும் கூட ராயல் என்பீல்டு பைக்குகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த பைக்குகளுக்கு பதிலாக, அதிக வேகமான, நம்பகத்தன்மை வாய்ந்த, பராமரிப்பு செலவு குறைந்த நவீன பைக்குகள் மாற்றப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்னமும் டிவிஎஸ் பயன்படுத்தும் தமிழ்நாடு போலீஸ்.. குஜராத் போல் ஹார்லி டேவிட்சனுக்கு மாறுவது எப்போ?

ஹோண்டா சிபிஆர் 250 ஆர் (Honda CBR 250R)

உத்தரபிரதேச போலீஸ்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சியில், சிபிஆர் 250ஆர் பைக்கின் போலீஸ் எடிசனை, ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனம், காட்சிக்கு வைத்திருந்தது. அதன்பின் உத்தரபிரதேச போலீசார் இந்த பைக்கை பயன்படுத்த தொடங்கினர்.

இன்னமும் டிவிஎஸ் பயன்படுத்தும் தமிழ்நாடு போலீஸ்.. குஜராத் போல் ஹார்லி டேவிட்சனுக்கு மாறுவது எப்போ?

பாதுகாப்பு கண்காட்சியில் ஹோண்டா நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்த சிபிஆர் 250 ஆர் போலீஸ் எடிசன் பைக்கில், எல்இடி லேம்ப், பீகான் லைட்ஸ், பப்ளிக் அநௌவ்ன்ஸ்மெண்ட் சிஸ்டம், ஹேண்ட்ஸ்ப்ரீ மைக்ரோபோன் உடன் கூடிய பிரத்யேக ஹெல்மெட் ஆகியவை இடம்பெற்றிருந்தது.

இன்னமும் டிவிஎஸ் பயன்படுத்தும் தமிழ்நாடு போலீஸ்.. குஜராத் போல் ஹார்லி டேவிட்சனுக்கு மாறுவது எப்போ?

ஆனால் இதில் ஒரு வசதி கூட, உத்தரபிரதேச போலீசார் பயன்படுத்தும் ஹோண்டா சிபிஆர் 250 ஆர் பைக்கில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இது மிகவும் சௌகரியமான, அதிசெயல்திறன் வாய்ந்த பைக் என்பதால், உத்தரபிரதேச போலீசார் இதனை மிகவும் விரும்புகின்றனர் என நம்பலாம்.

இன்னமும் டிவிஎஸ் பயன்படுத்தும் தமிழ்நாடு போலீஸ்.. குஜராத் போல் ஹார்லி டேவிட்சனுக்கு மாறுவது எப்போ?

பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar)

டெல்லி, பஞ்சாப் போலீஸ்

இந்தியாவின் தலைநகர் டெல்லியில், சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் என இருவரும் பஜாஜ் பல்சர் பைக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பல்சர் பைக்குகள் பெரும்பாலும் 180 சிசி வேரியண்ட்களாகதான் உள்ளன.

இன்னமும் டிவிஎஸ் பயன்படுத்தும் தமிழ்நாடு போலீஸ்.. குஜராத் போல் ஹார்லி டேவிட்சனுக்கு மாறுவது எப்போ?

பல்சர் 180 பைக்கின் அதிசெயல்திறன் வாய்ந்த இன்ஜினும், குறைவான பராமரிப்பு செலவும் போலீசாருக்கு மிகவும் உதவி செய்யும் என நம்பலாம். பஞ்சாப் மாநில போலீசாரும் கூட பஜாஜ் பல்சர் பைக்குகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இன்னமும் டிவிஎஸ் பயன்படுத்தும் தமிழ்நாடு போலீஸ்.. குஜராத் போல் ஹார்லி டேவிட்சனுக்கு மாறுவது எப்போ?

டிவிஎஸ் அப்பாச்சி (TVS Apache)

தமிழ்நாடு, கேரளா, டெல்லி, நொய்டா போலீஸ்

பஜாஜ் பல்சரை போன்று, டிவிஎஸ் அப்பாச்சி பைக்கும் ஃபன் டூ ரைட் பைக்தான். தமிழ்நாடு, கேரளா, டெல்லி, நொய்டா போலீசார், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 மற்றும் ஆர்டிஆர் 160 பைக்குகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இன்னமும் டிவிஎஸ் பயன்படுத்தும் தமிழ்நாடு போலீஸ்.. குஜராத் போல் ஹார்லி டேவிட்சனுக்கு மாறுவது எப்போ?

ஹூரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor)

கோவா போலீஸ்

மிகவும் எளிமையான ஹூரோ ஸ்பிளெண்டர் பைக்குகளை, கோவா போலீசார் பயன்படுத்தி வருகின்றனர். குறுகலான பாதைகளை கொண்ட கோவாவில், ரோந்து செல்ல ஏற்ற பைக் ஹூரோ ஸ்பிளெண்டர்தான். நகர்ப்புற பகுதிகளில் மிகவும் மெதுவாக ரோந்து செல்ல ஹூரோ ஸ்பிளெண்டர் நல்ல ஆப்ஷன்.

இன்னமும் டிவிஎஸ் பயன்படுத்தும் தமிழ்நாடு போலீஸ்.. குஜராத் போல் ஹார்லி டேவிட்சனுக்கு மாறுவது எப்போ?

ஹூரோ டூயட் (Hero Duet)

ஜெய்ப்பூர் போலீஸ்

பல்வேறு போலீஸ் படைகள், கியர்டு மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி வரும் நிலையில், ஜெய்ப்பூர் போலீஸ் படையின் பெண் காவலர்கள், ஹூரோ டூயட் ஸ்கூட்டர்களை உபயோகித்து வருகின்றனர். இந்த ஸ்கூட்டர்களில் பப்ளிக் அநௌவ்ன்ஸ்மெண்ட் சிஸ்டம், போலீஸ் ஸ்டிக்கர்கள் இடம்பெற்றுள்ளன.

இன்னமும் டிவிஎஸ் பயன்படுத்தும் தமிழ்நாடு போலீஸ்.. குஜராத் போல் ஹார்லி டேவிட்சனுக்கு மாறுவது எப்போ?

ஹூரோ அச்சீவர் (Hero Achiever)

மும்பை போலீஸ்

மும்பை போலீஸ் படையின் பெண் காவலர்கள், ஹூரோ அச்சீவர் பைக்கை தங்கள் அதிகாரப்பூர்வ வாகனமாக பயன்படுத்துகின்றனர். நம்பகத்தன்மை, போதுமான அளவு செயல்திறன் வாய்ந்த ஹீரோ அச்சீவர் பைக்குகள் லைட்வெயிட் என்பதால், பெண் காவலர்களால் எளிதாக கையாள முடிகிறது.

Source: Cartoq

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indian Police Officers Official Bikes. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X