மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

மாருதி ஆல்டோ 800 காரின் இன்ஜின் பொருத்தப்பட்ட அதிநவீன பைக், இந்திய ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் மிரட்டலாக உள்ளன.

மாருதி ஆல்டோ 800 காரின் இன்ஜின் பொருத்தப்பட்ட அதிநவீன பைக், இந்திய ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் மிரட்டலாக உள்ளன. இதன் முழுமையான பின்னணி உங்களுக்கு ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தலாம்.

ரூ.2.80 லட்சம் செலவில் பைக் தயாரித்து இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்த இளைஞர்..

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் வைபவ் பஜ்பாய். மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களை சுயமாக 'அசெம்பிள்' செய்வதில் வைபவ் பஜ்பாய் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதே நேரத்தில் இந்திய தேசத்தின் மீதும் வைபவ் பஜ்பாய்க்கு ஈடு இணையற்ற பற்று உண்டு.

ரூ.2.80 லட்சம் செலவில் பைக் தயாரித்து இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்த இளைஞர்..

குறிப்பாக 'கார்கில்' திரைப்படத்தை பார்த்த பிறகு, நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பதற்காக எல்லையில் பல தியாகங்களை செய்து கொண்டுள்ள இந்திய ராணுவ வீரர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வைபவ் பஜ்பாய்க்கு உண்டானது.

ரூ.2.80 லட்சம் செலவில் பைக் தயாரித்து இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்த இளைஞர்..

இதற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிரமப்பட்டு மோட்டார் சைக்கிள் ஒன்றை வைபவ் பஜ்பாய் உருவாக்கியுள்ளார். இந்த மோட்டார் சைக்கிளின் டிசைன், கட்டுமானம் என அனைத்தையும் முழுக்க முழுக்க வைபவ் பஜ்பாயே செய்துள்ளார்.

ரூ.2.80 லட்சம் செலவில் பைக் தயாரித்து இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்த இளைஞர்..

வைபவ் பஜ்பாய் உருவாக்கியுள்ள மோட்டார் சைக்கிளுக்கு 'அமர் ஜவான்' (Amar Jawan) என பெயரிடப்பட்டுள்ளது. அமர் ஜவான் என்ற பெயரும் கூட வைபவ் பஜ்பாயின் யோசனைதான். இந்திய ராணுவத்திற்கே உரித்தான பச்சை நிறத்தில் அமர் ஜவான் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

ரூ.2.80 லட்சம் செலவில் பைக் தயாரித்து இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்த இளைஞர்..

அமர் ஜவான் மோட்டார் சைக்கிளின் நீளம் 7 அடி. மொத்த எடை சுமார் 500 கிலோ. இதன் பின் சக்கரம் மிகப்பெரியதாக உள்ளது. அமர் ஜவான் மோட்டார் சைக்கிளில் மொத்தம் 8 கியர்கள் உள்ளன. இதில், பின்னோக்கி செல்வதற்கான ரிவர்ஸ் கியர் ஆப்ஷனும் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.2.80 லட்சம் செலவில் பைக் தயாரித்து இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்த இளைஞர்..

அமர் ஜவான் மோட்டார் சைக்கிளின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் அதன் இன்ஜின்தான். மாருதி சுஸுகி ஆல்டோ 800 காரில் உள்ள அதே 800 சிசி, 3 சிலிண்டர், பெட்ரோல் இன்ஜின்தான் அமர் ஜவான் மோட்டார் சைக்கிளிலும் பொருத்தப்பட்டுள்ளது.

ரூ.2.80 லட்சம் செலவில் பைக் தயாரித்து இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்த இளைஞர்..

இதுதவிர ஜிபிஎஸ் (GPS), ப்ளூடூத் கனெக்டிவிட்டி (Bluetooth connectivity) ஆப்ஷன்களையும் வைபவ் பஜ்பாய் வழங்கியுள்ளார். அமர் ஜவான் மோட்டார் சைக்கிளை உருவாக்குவதற்காக 2.80 லட்ச ரூபாயை வைபவ் பஜ்பாய் செலவிட்டுள்ளார்.

ரூ.2.80 லட்சம் செலவில் பைக் தயாரித்து இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்த இளைஞர்..

பிஎம்டபிள்யூ நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜி 310 ஆர் (BMW G 310 R) மோட்டார் சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த மோட்டார் சைக்கிளின் விலை 2.99 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், பெங்களூரு).

ரூ.2.80 லட்சம் செலவில் பைக் தயாரித்து இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்த இளைஞர்..

இந்த வகையில் பார்த்தால், பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மோட்டார் சைக்கிளை காட்டிலும் அமர் ஜவானின் விலை குறைவுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அமர் ஜவான் மோட்டார் சைக்கிள் ஒரு லிட்டருக்கு 22-27 கிலோ மீட்டர்கள் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.

ரூ.2.80 லட்சம் செலவில் பைக் தயாரித்து இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்த இளைஞர்..

அமர் ஜவான் மோட்டார் சைக்கிளை உருவாக்கி முடிக்க வைபஜ் பஜ்பாய்க்கு ஒன்றரை ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. இந்த பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்பதற்காக கடந்த 2 ஆண்டுகளாக படிப்பை கூட வைபவ் பஜ்பாய் விட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.2.80 லட்சம் செலவில் பைக் தயாரித்து இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்த இளைஞர்..

ஆனால் வைபவ் பஜ்பாயின் முயற்சிக்கு, அவரது பெற்றோர் உறுதுணையாக இருந்தனர். தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்கும் உயரிய பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களுக்கு அமர் ஜவான் மோட்டார் சைக்கிளை அர்ப்பணிப்பதாக வைபவ் பஜ்பாய் நெகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.

ரூ.2.80 லட்சம் செலவில் பைக் தயாரித்து இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்த இளைஞர்..

ஒரு மோட்டார் சைக்கிளை முழுக்க முழுக்க சுயமாகவே உருவாக்கி, அதனை இந்திய ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணித்துள்ள வைபவ் பஜ்பாய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பாராட்டு மழையில் நனைந்து வரும் வைபவ் பஜ்பாயின் பின்னணி இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமானது.

ரூ.2.80 லட்சம் செலவில் பைக் தயாரித்து இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்த இளைஞர்..

India Today Social வெளியிட்டுள்ள செய்தியின்படி, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் எப்படி அசெம்பிள் செய்யப்படுகின்றன? என்பதை பார்ப்பதில் இளம் வயது முதலே வைபவ் பஜ்பாய் மிகுந்த ஆர்வத்துடன்தான் இருந்து வந்துள்ளார்.

ரூ.2.80 லட்சம் செலவில் பைக் தயாரித்து இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்த இளைஞர்..

ஒரு முறை ஹீரோ ஹோண்டா ஸ்பிளெண்டர் பைக் வைபவ் பஜ்பாயின் கைக்கு கிடைத்தது. ஆனால் அந்த பைக் அப்போது இயங்கும் நிலையில் இல்லை. என்றாலும் வைபவ் பஜ்பாய் விடவில்லை. அவர் எடுத்த முயற்சியின் விளைவாக அந்த பைக் நன்கு இயங்கும் நிலைக்கு வந்து விட்டது.

ரூ.2.80 லட்சம் செலவில் பைக் தயாரித்து இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்த இளைஞர்..

சில ஸ்பேர் பார்ட்ஸ்களை வாங்கி பொருத்தியதன் மூலமாகவே ஹீரோ ஹோண்டா ஸ்பிளெண்டர் இயங்கும் நிலைக்கு வந்தது. பெற்றோர் அவ்வப்போது வழங்கிய பாக்கெட் மணியில் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த தொகையில்தான் இந்த ஸ்பேர் பார்ட்ஸ்களை வைபவ் பஜ்பாய் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.2.80 லட்சம் செலவில் பைக் தயாரித்து இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்த இளைஞர்..

இதுகுறித்து வைபவ் பஜ்பாயின் தந்தை சஞ்சீவ் கூறுகையில், ''வைபவ் பஜ்பாய்க்கு நல்ல இன்ஜினியரிங் மைண்ட் உள்ளது. மோட்டார் சைக்கிள் மற்றும் கார்கள் என்றால் வைபவ் பஜ்பாய்க்கு கொள்ளை பிரியம். இளம் வயது முதலே அவர் அப்படித்தான்'' என்றார்.

Most Read Articles

இந்திய ராணுவத்துடனான தங்களது நிறுவனத்தின் நீண்ட கால உறவை போற்றும் வகையில் ராயல் என்பீல்டு அறிமுகம் செய்த கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிளின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Indian Youth Built 800cc Amar Jawan Bike And Dedicates To Army. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X