நாளை முதல் ரோட்டிற்கு வருகிறது இந்தியாவின் முதல் ஸ்மார்ட் ஸ்கூட்டர் ஏத்தர்...
இந்திய முழுவதும் தற்போது எலெக்ட்ரிக் வாகனத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல் விலையேற்றம் காரணமாக பலர் எலெக்ட்ரிக் வாகனத்தை அதிக அளவில் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
இந்திய முழுவதும் தற்போது எலெக்ட்ரிக் வாகனத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல் விலையேற்றம் காரணமாக பலர் எலெக்ட்ரிக் வாகனத்தை அதிக அளவில் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஏத்தர் என்ற நிறுவனம் இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. முழுவதும் எலெக்ட்ரிக்கில் இயங்கும் இந்த ஸ்கூட்டருக்கான புக்கிங் முன்னரே துவங்கியிருந்தது.

இந்நிலையில் அந்த ஸ்கூட்டரின் டெலவரியை நாளை (11ம் தேதி) அந்நிறுவனம் துவக்குகிறது. ஏத்தர் நிறுவனம் ஏத்தர் 340 மற்றும் 450 என்ற இரண்டு விதமான ஸ்கூட்டர்களை விற்பனைக்கு கொண்டு வருகிறது. தற்போது அந்த ஸ்கூட்டர்களின் தயாரிப்பை அந்நிறுவனம் தீவிரமாக செய்து வருகிறது.

இந்த பேட்டரியில், ஒரு மணி நேரத்தில், 80 சதவீத சார்ஜை நிரப்பி கொள்ளலாம்.
ஏத்தர் 340, 450 ஆகிய 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும், BLDC (brushless direct current) மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 340 ஸ்கூட்டரில் 4.4 kw (5.9 பிஎஸ்) பவரையும், 450 ஸ்கூட்டரில் 5.4 kw (7.3 பிஎஸ்) பவரையும் வழங்கும்.

அதே நேரத்தில் 340 ஸ்கூட்டர் 20 என்எம் டார்க் திறனையும், 450 ஸ்கூட்டர் 20.5 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இந்த 2 ஸ்கூட்டர்களின் டார்க் திறனானது, கேடிஎம் 200 டியூக், பஜாஜ் பல்சர் 220 ஆகிய பைக்குகளின் டார்க் திறனை விட அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏத்தர் 340 ஸ்கூட்டரில் ஒரு முறை சார்ஜ் செய்தால், 60 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கலாம். அதே நேரத்தில் ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால், 75 கிலோ மீட்டர்கள் பயணிக்கலாம்.

ஏத்தர் 340 ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிலோ மீட்டர். மறுபக்கம் ஏத்தர் 450 ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிலோ மீட்டர். இதன்மூலம் இந்தியாவின் மிக வேகமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்றாக ஏத்தர் 450 இருக்கும்.

ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில், 40 கி.மீ என்ற வேகத்தை வெறும் 3.9 வினாடிகளில் எட்டலாம். ஆனால் ஏத்தர் 350 ஸ்கூட்டர் இதனை 5.1 வினாடிகளில்தான் செய்யும்.

ஏத்தர் 340 மற்றும் 450 ஆகிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பேட்டரி வாட்டர் ப்ரூப் தன்மை கொண்டது. இந்தியாவில் கோடை காலங்களில் வெயில் சுட்டெரிக்கும் என்பதால், பேட்டரி அதிக சூடு ஆகாமல் இருப்பதற்காக கூலிங் பேன் வழங்கப்பட்டுள்ளது.

2 ஸ்கூட்டர்களிலும் 12 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி ப்ரண்ட் மற்றும் ரியரில் டிஸ்க் பிரேக் வசதியும் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏத்தர் 340 மற்றும் 450 ஆகிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் மற்றுமொரு ஹைலைட் என்னவென்றால், 7 இன்ச் டச் ஸ்கீரின் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்தான். இதுதவிர ரிமோட் டயக்னாஸ்டிக்ஸ், சேட்டிலைட் நேவிகேஷன், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, பார்க்கிங் அஸிஸ்ட் உள்ளிட்ட எண்ணற்ற வசதிகளும் உள்ளன.

ஏத்தர் 340 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1.09 லட்ச ரூபாய். ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1.24 லட்ச ரூபாய். இவை இரண்டும் ஆன் ரோடு விலையாகும். எனவே ரிஜிஸ்ட்ரேஷன், இன்சூரன்ஸ், ஸ்மார்டு கார்டு ஆகிய அனைத்தும் இந்த விலைக்குள்ளே அடங்கி விடும். மேலும் இது பெபங்களூரு வின் விலை, மற்ற மாநிலங்களில் இந்த ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டால் அதன் விலை மாறுபடலாம்.

2 ஸ்கூட்டர்களும் ஒரே மாதிரியான தோற்றத்தில்தான் உள்ளன. ஆனால் 450 ஸ்கூட்டரின் வீல்களில் பச்சை நிற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டர்களின் பேட்டரிகளுக்கு 3 வருட வாரண்டி வழங்கப்படுகிறது.

2 ஸ்கூட்டர்களிலும் இன்பில்ட் ரிவர்ஸ் அஸிஸ்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மோட்டாரை பயன்படுத்தி ஸ்கூட்டர்களை பின்னோக்கி இயக்க முடியும். ஆனால் பின்னோக்கி இயக்கும்போது, 5 கி.மீ வேகத்தில் மட்டுமே 2 ஸ்கூட்டர்களும் இயங்கும்.

இந்த 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் வாங்கும் வாடிக்கையாளர்கள், வீட்டிலேயே இன்ஸ்டால் செய்யக்கூடிய சார்ஜிங் ஸ்டேஷன்களையும் பெறுவார்கள்.
Recommended Video


ஏத்தர் எனர்ஜி நிறுவனம், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. சென்னை ஐஐடி கல்லூரியில் படித்த நண்பர்களான தருண் மெஹ்தா மற்றும் ஸ்வப்னில் ஜெயின் ஆகியோர்தான் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தை தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலாவின் பார்வையில் :
இந்தியாவிற்கு எலெக்ட்ரிக் வாகனத்தின் பயன்பாடு மிக மிக அவசியம் தான். மேலும் பல உயர் ரக வாகனங்களில் கூட இல்லாத சில வசதிகள் இந்த ஸ்கூட்டரில் இருக்கிறது. இருந்தாலும் இந்திய மக்களுக்கு ஸ்கூட்டருக்கான விலை ரூ 1 லட்சத்திற்கும் அதிகம் என்பது ஏற்கொள்ள முடியாத தொகையாக இருக்கும். மேலும் இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக வருகிறது. இந்தியாவின் பெரு நகரங்களில் இந்த ஸ்கூட்டரை சார்ஜ் செய்யும் கட்டமைப்பு வசதிகள் பெரிய அளவில் இல்லை. எனினும் எதிர்கால இந்தியாவில் சார்ஜ் கட்டமைப்புகள் வளர்ச்சி பெற்று, இந்த பைக்கின் விலையையும் சற்று குறைத்தால் எதிர்கால இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமாக இது மாற வாய்ப்புள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்த பெகாஸஸ் பைக்கின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் கீழே காணலாம்...


Click it and Unblock the Notifications








