சென்னையில் ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்காக 4 ஷோரூம்கள்?
முதற்கட்டமாக சென்னையில் 4 டீலர்களும், பெங்களூரில் 5 டீலர்களும் நியமனம் செய்யப்பட இருப்பதாக தெரிய வந்துள்ளது. டெல்லி மற்றும் மும்பையில் தலா 4 டீலர்களும், மும்பையில் கொல்கத்தா, ஹைதராபாத், புனே மற்றும்
புதிய தலைமுறை ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்கள் அண்மையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிலையில், ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கான டீலர் விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதனை இந்த செய்தியில் காணலாம்.

புதிய தலைமுறை ஜாவா மோட்டார்சைக்கிள்களை மஹிந்திரா கீழ் செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் அண்மையில் விற்பனைக்கு கொண்டு வந்தது. ஜாவா 42, ஜாவா மற்றும் ஜாவா பெராக் ஆகிய மூன்று மாடல்களும் பாரம்பரிய வடிவமைப்பு தாத்பரியங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வந்து வாடிக்கையாளர்களை உசுப்பேற்றி இருக்கின்றன.

இந்த சூழலில், ஜாவா மோட்டார்சைக்கிள்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் எத்தனித்து வருகின்றனர். ரூ.5,000 முன்பணம் செலுத்தி ஆன்லைன் மூலமாக இருப்பிட விபரத்தை தெரிவித்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஆனால், டீலர்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாததால், குழப்பம் இருந்து வருகிறது. எனினும், மஹிந்திரா டீலர்கள் வாயிலாக புதிய ஜாவா டீலர்கள் நியமனம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டீலர்கள் நியமனம் குறித்த சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

முதற்கட்டமாக சென்னையில் 4 டீலர்களும், பெங்களூரில் 5 டீலர்களும் நியமனம் செய்யப்பட இருப்பதாக தெரிய வந்துள்ளது. டெல்லி மற்றும் மும்பையில் தலா 4 டீலர்களும், மும்பையில் கொல்கத்தா, ஹைதராபாத், புனே மற்றும் திருப்பதியில் தலா ஒரு டீலரும் திறக்கப்பட இருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.
Recommended Video


முதல் ஜாவா டீலர் முறைப்படி வரும் டிசம்பரில் திறப்பு விழா செய்யப்பட இருக்கிறது. அதனைத்தொடர்ந்து, நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் புதிய ஜாவா டீலர்கள் திறக்கப்படும். முதல்படியாக 64 டீலர்களுடன் வர்த்தகத்தை துவங்க இருப்பதாக ஜாவா பிராண்டைய கையாள இருக்கும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரும் ஜனவரி மாதம் முதல் ஜாவா ஷோரூம்களில் விற்பனை பணிகள் முழு வீச்சில் துவங்கப்பட இருக்கிறது. பிப்ரவரியிலிருந்து ஜாவா மோட்டார்சைக்கிள்கள் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஜாவா மோட்டார்சைக்கிளை வாங்க விரும்புவோர் ஜாவா இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலமாக விபரங்களை கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம். டீலர்கள் செயல்பாட்டுக்கு வந்தவுடன் அருகிலுள்ள டீலர்கள் மூலமாக மோட்டார்சைக்கிளை டெலிவிரி பெறலாம்.

எமக்கு கிடைத்த டீலர் வட்டார தகவல்களின்படி, சென்னையில் மஹிந்திராவின் இருசக்கர வாகனப் பிரிவு டீலர்கள் சிலரே ஜாவா ஷோரூம்களையும் திறக்க இருப்பது தெரிய வந்துள்ளது. டிசம்பரில் இந்த டீலர்கள் திறப்பு விழா செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Source: Autocarindia


Click it and Unblock the Notifications








