ராயல் என்பீல்டை அடியோடு காலி செய்யும் ஜாவாவின் மெகா திட்டம் கசிந்தது.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..

ராயல் என்பீல்டு நிறுவனத்தை அடியோடு காலி செய்யும் ஜாவாவின் மெகா திட்டம் வெளியே கசிந்துள்ளது. எதிர்பாராத இந்த அதிரடியால் ராயல் என்பீல்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தை அடியோடு காலி செய்யும் ஜாவாவின் மெகா திட்டம் வெளியே கசிந்துள்ளது. எதிர்பாராத இந்த அதிரடியால் ராயல் என்பீல்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தை அடியோடு காலி செய்யும் ஜாவாவின் மெகா திட்டம் வெளியே கசிந்தது...

1970, 80 காலகட்டங்களில், புகழின் உச்சத்தில் இருந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஜாவா. ஜாவா மோட்டார் சைக்கிள்களுக்கு என இந்தியாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. எனினும் இடையில் ஜாவா மோட்டார் சைக்கிள்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தை அடியோடு காலி செய்யும் ஜாவாவின் மெகா திட்டம் வெளியே கசிந்தது...

ஆனாலும் ஜாவா மோட்டார் சைக்கிள்களுக்கான ரசிகர் கூட்டம் மட்டும் கலையாமல் அப்படியே இருந்தது. ஜாவா மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவிற்கு மீண்டும் ஒரு நாள் திரும்ப வரும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் காத்து கிடந்தனர். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.

ராயல் என்பீல்டு நிறுவனத்தை அடியோடு காலி செய்யும் ஜாவாவின் மெகா திட்டம் வெளியே கசிந்தது...

வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஜாவா மோட்டார் சைக்கிள்கள் மீண்டும் இந்தியாவிற்கு வந்துள்ளன. கிளாசிக் லெஜென்ட்ஸ் என்ற நிறுவனம்தான், ஜாவா மோட்டார் சைக்கிள்களை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தை அடியோடு காலி செய்யும் ஜாவாவின் மெகா திட்டம் வெளியே கசிந்தது...

மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தொழிலதிபரான அனுபம் தரேஜா மற்றும் ரியல் எஸ்டேட் அதிபரான போமன் இரானி ஆகிய மூவரும் கூட்டாக சேர்ந்து தொடங்கியுள்ள நிறுவனம்தான் கிளாசிக் லெஜென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தை அடியோடு காலி செய்யும் ஜாவாவின் மெகா திட்டம் வெளியே கசிந்தது...

கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை, மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா தன் கைவசம் வைத்துள்ளார். குழந்தை பருவத்தில் இருந்தே தீவிர ஜாவா ரசிகரான ஆனந்த் மஹிந்திராதான், ஜாவா மோட்டார் சைக்கிள்களை இந்தியாவிற்கு மீண்டும் கொண்டு வர முழு முயற்சி எடுத்தவர்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தை அடியோடு காலி செய்யும் ஜாவாவின் மெகா திட்டம் வெளியே கசிந்தது...

தனித்துவமான ஜாவா மோட்டார் சைக்கிள்களை இந்திய மார்க்கெட்டில் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வருவதற்காகவே மஹிந்திரா நிறுவனத்தால் ஸ்பெஷலாக உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம்தான் கிளாசிக் லெஜென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தை அடியோடு காலி செய்யும் ஜாவாவின் மெகா திட்டம் வெளியே கசிந்தது...

தற்போது ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் என்ற பெயர்களில் மூன்று புதிய மோட்டார் சைக்கிள்கள், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதில் ஜாவா பெராக் மோட்டார் சைக்கிள் மட்டும் வரும் 2019ம் ஆண்டு ஜூன் மாதம்தான் விற்பனைக்கு வரவுள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தை அடியோடு காலி செய்யும் ஜாவாவின் மெகா திட்டம் வெளியே கசிந்தது...

ஜாவா மோட்டார் சைக்கிள்களுக்கான டீலர்ஷிப்கள் முதற்கட்டமாக மும்பை, புனே, டெல்லி மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் திறக்கப்படவுள்ளன. வரும் டிசம்பர் மாத இறுதிக்குள்ளாக இந்த டீலர்ஷிப்கள் செயல்பாட்டிற்கு வந்து விடும்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தை அடியோடு காலி செய்யும் ஜாவாவின் மெகா திட்டம் வெளியே கசிந்தது...

இரண்டாம் கட்டமாக சென்னை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய நகரங்களில் ஜாவா மோட்டார் சைக்கிள் டீலர்ஷிப்கள் திறக்கப்படுகின்றன. இந்த டீலர்ஷிப்கள் வரும் ஜனவரி மாத இறுதியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தை அடியோடு காலி செய்யும் ஜாவாவின் மெகா திட்டம் வெளியே கசிந்தது...

ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களுக்கு போட்டியாகதான் ஜாவா மோட்டார் சைக்கிள்கள் களம் இறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஜாவா, ஜாவா 42 ஆகிய 2 மோட்டார் சைக்கிள்களும், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் விற்பனையை அப்படியே முழுங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தை அடியோடு காலி செய்யும் ஜாவாவின் மெகா திட்டம் வெளியே கசிந்தது...

ஜாவா மோட்டார் சைக்கிள்கள் மூலமாக ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் வரிசையாக 'செக்' வைத்து வருகிறது. இந்த சூழலில், கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தின் மற்றொரு திட்டம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Recommended Video

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்
ராயல் என்பீல்டு நிறுவனத்தை அடியோடு காலி செய்யும் ஜாவாவின் மெகா திட்டம் வெளியே கசிந்தது...

ராயல் என்பீல்டு டீலர்ஷிப்களுக்கு மிக அருகிலேயே ஜாவா மோட்டார் சைக்கிள்களுக்கான டீலர்ஷிப்களை திறப்பதுதான் அந்த திட்டம். இதன்மூலம் ஜாவா மோட்டார் சைக்கிள்கள் அதன் டார்கெட் ஆடியன்ஸை மிக எளிதாக சென்றடையும்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தை அடியோடு காலி செய்யும் ஜாவாவின் மெகா திட்டம் வெளியே கசிந்தது...

அத்துடன் வாடிக்கையாளர்களால் ஜாவா மற்றும் ராயல் என்பீல்டு ஆகிய மோட்டார் சைக்கிள்களை எளிதாக ஒப்பிட்டு பார்க்கவும், நன்றாக புரிந்து கொள்ளவும் முடியும். எனவேதான் ராயல் என்பீல்டு டீலர்ஷிப்களுக்கு அருகே ஜாவா டீலர்ஷிப்களையும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தை அடியோடு காலி செய்யும் ஜாவாவின் மெகா திட்டம் வெளியே கசிந்தது...

இதன்படி தமிழக தலைநகர் சென்னையில், ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் டீலர்ஷிப் ஒன்றின் அருகிலேயே, ஜாவா டீலர்ஷிப்பின் வருகை குறித்த பேனர் ஒன்று தற்போது வைக்கப்பட்டுள்ளது. இது கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தின் திட்டத்தை உறுதி செய்வது போல் உள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தை அடியோடு காலி செய்யும் ஜாவாவின் மெகா திட்டம் வெளியே கசிந்தது...

ஜாவா மோட்டார் சைக்கிள்களுக்கான புக்கிங் தற்போது ஆன்லைனில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜாவா மோட்டார் சைக்கிள்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், ரூ.5,000 முன்பணம் செலுத்தி ஆன்லைனில் தற்போதே புக்கிங் செய்து கொள்ளலாம்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தை அடியோடு காலி செய்யும் ஜாவாவின் மெகா திட்டம் வெளியே கசிந்தது...

ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய 2 மோட்டார் சைக்கிள்களிலும், 293 சிசி லிக்யூட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர், DOHC இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவர் மற்றும் 28 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தை அடியோடு காலி செய்யும் ஜாவாவின் மெகா திட்டம் வெளியே கசிந்தது...

ஜாவா, ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களுக்கு இடையேயான மோதல் எப்படி இருக்க போகிறது? என்ற சுவாரஸ்யமான போட்டியை காண வாடிக்கையாளர்கள் அனைவரும் தற்போதில் இருந்தே ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தை அடியோடு காலி செய்யும் ஜாவாவின் மெகா திட்டம் வெளியே கசிந்தது...

அவென்ஜர் மற்றும் டோமினார் உள்ளிட்ட பைக்குகளின் மூலமாக ராயல் என்பீல்டு நிறுவனத்தை வீழ்த்த பஜாஜ் நிறுவனம் முயற்சி செய்தது. ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை. ஆனால் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மார்க்கெட் ஷேரை ஜாவா நிச்சயம் காலி செய்து விடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Jawa Motorcycle Dealerships Will Be Opened Near Royal Enfield Dealerships. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X