புதிய ஜாவா மோட்டார்சைக்கிளின் ஸ்பை படங்கள்!
வரும் 15ந் தேதி புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன இந்த சூழலில், அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில், ஜாவா மோட்டார்சைக்கிள் ஒன்றின் ஸ்பை படங்கள் இணையதளங்களில்
முதல்முறையாக ஜாவா மோட்டார்சைக்கிளின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த படங்களையும், கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் காணலாம்.

இந்தியர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ஜாவா மோட்டார்சைக்கிள்கள் மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. ஜாவா பிராண்டு இந்திய வர்த்தகத்திற்கான உரிமத்தை பெற்றிருக்கும் மஹிந்திரா நிறுவனம் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜாவா மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்ய இருக்கிறது.

வரும் 15ந் தேதி புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில், ஜாவா மோட்டார்சைக்கிள் ஒன்று சாலை சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருந்தபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன.

இதுவரை புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்கள் எப்படி இருக்குமோ? என்ற ஆவலில் தவித்தவர்களுக்கு இந்த புதிய படங்கள் மூலமாக டிசைன் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பழைய ஜாவா மோட்டார்சைக்கிள்களின் பாரம்பரிய டிசைன் இதில் கையாளப்பட்டு இருப்பதை காண முடிகிறது.

முக்கியமாக வட்ட வடிவ ஹெட்லைட், ஸ்போக்ஸ் வீல்கள், கண்ணீர் துளி போன்ற வடிவத்தில் பெட்ரோல் டேஹ்க், இரட்டை புகைப்போக்கி குழாய்கள், சிங்கிள் சீட் ஆகியவை பழைய ஜாவா மோட்டார்சைக்கிள்களை நினைவூட்டுவதாக இருக்கன்றன.

இந்த பைக்கில் ஒற்றை சிலிண்டர் கொண்ட 293சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. திரவ குளிரூட்டு வசதியை பெற்ற இந்த எஞ்சின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் பெற்றிருப்பதுடன், பாரத் - 6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும்.

பழைய ஜாவா மோட்டார்சைக்கிள்கள்களின் எஞ்சின் நடுத்தர நிலைகளில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இருந்தன. அதே பாணியில் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களும் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நகர்ப்புறத்திலும் எளிதாக பயன்படுத்தும் விதத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பைக்கில் முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இந்த மோட்டார்சைக்கிளில் வழங்கப்பட இருப்பதும் உறுதியாகி இருக்கிறது.

வரும் 15ந் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்கள் பாரம்பரிய டிசைனில், நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவரும் என்று தெரிகிறது. ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications