மீண்டும் விற்பனைக்கு வந்தது ஜாவா பைக்... குழந்தை பருவத்தை நினைவு கூர்ந்து ஷாருக்கான் நெகிழ்ச்சி...

ஜாவா மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது குழந்தை பருவத்தை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

ஜாவா மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது குழந்தை பருவத்தை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

மீண்டும் விற்பனைக்கு வந்தன ஜாவா மோட்டார் சைக்கிள்கள்... ஷாருக்கான் என்ன சொன்னார் தெரியுமா?

இந்தியாவில் ஜாவா மோட்டார் சைக்கிள்களுக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. 1970களில் வாடிக்கையாளர்களின் மனங்களை கவர்ந்திழுத்த மோட்டார் சைக்கிள் அது. என்றாலும் பிற்காலத்தில் அதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டது.

மீண்டும் விற்பனைக்கு வந்தன ஜாவா மோட்டார் சைக்கிள்கள்... ஷாருக்கான் என்ன சொன்னார் தெரியுமா?

ஜாவா மோட்டார் சைக்கிள்கள் மீண்டும் வராதா? என்று ஏங்கி போய் இருந்த அதன் ரசிகர்களுக்கு தற்போது மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது. ஆம், ஜாவா மோட்டார் சைக்கிள்கள் மீண்டும் இந்தியாவிற்கு வந்துவிட்டன.

மீண்டும் விற்பனைக்கு வந்தன ஜாவா மோட்டார் சைக்கிள்கள்... ஷாருக்கான் என்ன சொன்னார் தெரியுமா?

மஹிந்திரா குழுமத்தின் ஓர் அங்கமாக செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம்தான் ஜாவா மோட்டார் சைக்கிள்களை இந்தியாவிற்கு மீண்டும் கொண்டு வந்துள்ளது. ஜாவா, ஜாவா 42, ஜாவா பெராக் ஆகிய மூன்று புதிய மோட்டார் சைக்கிள்கள் நேற்று முன் தினம் (நவம்பர் 15) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

மீண்டும் விற்பனைக்கு வந்தன ஜாவா மோட்டார் சைக்கிள்கள்... ஷாருக்கான் என்ன சொன்னார் தெரியுமா?

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தொழிலதிபர் அனுபம் தரேஜா, ரியல் எஸ்டேட் அதிபர் போமன் இரானி ஆகிய மூவர்தான் கிளாசிக் லெஜன்ட்ஸ் நிறுவனத்தை கூட்டாக தொடங்கியுள்ளனர். இதில், மஹிந்திரா நிறுவனம் மட்டும் 60 சதவீத பங்குகளை தன்கைவசம் வைத்துள்ளது.

மீண்டும் விற்பனைக்கு வந்தன ஜாவா மோட்டார் சைக்கிள்கள்... ஷாருக்கான் என்ன சொன்னார் தெரியுமா?

ஜாவா மோட்டார் சைக்கிள் மாடல் ரூ.1.64 லட்சம், ஜாவா 42 மோட்டார் சைக்கிள் மாடல் ரூ.1.55 லட்சம் என்ற விலைகளில் விற்பனைக்கு வந்துள்ளன. ஜாவா பெராக் மோட்டார் சைக்கிள் மாடல் ரூ.1.89 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது (விலைகள் அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம்).

மீண்டும் விற்பனைக்கு வந்தன ஜாவா மோட்டார் சைக்கிள்கள்... ஷாருக்கான் என்ன சொன்னார் தெரியுமா?

இதில், ஜாவா பெரக் மோட்டார் சைக்கிள் மாடல் மட்டும் வரும் ஜனவரி மாதத்தில்தான் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளது. இந்த சூழலில் இந்த 3 மோட்டார் சைக்கிள் மாடல்களுக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

மீண்டும் விற்பனைக்கு வந்தன ஜாவா மோட்டார் சைக்கிள்கள்... ஷாருக்கான் என்ன சொன்னார் தெரியுமா?

ஜாவா மோட்டார் சைக்கிள்கள் மீண்டும் விற்பனைக்கு வந்துவிட்டதை, பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில், அதன் ரசிகர்கள் கொண்டாடி கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும் ஒருவர்.

இந்தியாவில் ஜாவா மோட்டார் சைக்கிள்கள் ரீ லான்ச் செய்யப்பட்ட உடனேயே, பசுமையான பழைய விஷயங்களை நினைவு கூறும் வகையில், ''அருமை. ஜாவா மோட்டார் சைக்கிள்களில்தான் நான் வளர்ந்தேன்'' என ஒரு டிவிட்டை தட்டி விட்டார் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான்.

மீண்டும் விற்பனைக்கு வந்தன ஜாவா மோட்டார் சைக்கிள்கள்... ஷாருக்கான் என்ன சொன்னார் தெரியுமா?

ஷாருக்கான் மட்டுமல்ல. அனுபம் தரேஜா மற்றும் போமன் இரானி ஆகியோருடன் கூட்டாக இணைந்து ஜாவா பிராண்டை இந்தியாவிற்கு மீண்டும் கொண்டு வந்த ஆனந்த் மஹிந்திராவும் குழந்தை பருவத்தில் இருந்தே ஜாவா மோட்டார் சைக்கிள்களின் ரசிகர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் விற்பனைக்கு வந்தன ஜாவா மோட்டார் சைக்கிள்கள்... ஷாருக்கான் என்ன சொன்னார் தெரியுமா?

ஜாவா மோட்டார் சைக்கிள்கள் அறிமுக விழா நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில், ஆனந்த் மஹிந்திராவும் கலந்து கொண்டார். அப்போது ஜாவா மோட்டார் சைக்கிள்கள் தொடர்பான பசுமையான பழைய விஷயங்களை எல்லாம் அவரும் கூட நினைவு கூர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் விற்பனைக்கு வந்தன ஜாவா மோட்டார் சைக்கிள்கள்... ஷாருக்கான் என்ன சொன்னார் தெரியுமா?

ஜாவா மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்வதற்காக தற்போது நாடு முழுவதும் 64 டீலர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதுதவிர 105 டீலர்ஷிப்கள் வெகு விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் விற்பனைக்கு வந்தன ஜாவா மோட்டார் சைக்கிள்கள்... ஷாருக்கான் என்ன சொன்னார் தெரியுமா?

ஜாவா மோட்டார் சைக்கிள்களுக்கான புக்கிங் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. ஆனால் மோட்டார் சைக்கிள் டெலிவரி செய்யப்படும் பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில்தான் ஆரம்பிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் விற்பனைக்கு வந்தன ஜாவா மோட்டார் சைக்கிள்கள்... ஷாருக்கான் என்ன சொன்னார் தெரியுமா?
மீண்டும் விற்பனைக்கு வந்தன ஜாவா மோட்டார் சைக்கிள்கள்... ஷாருக்கான் என்ன சொன்னார் தெரியுமா?

முன்னதாக ஷாருக்கானின் டிவிட்டிற்கு ஆனந்த் மஹிந்திரா உடனடியாக பதில் அளித்தார். இதில், ''நீங்கள் என்றென்றும் இளமையானவர்தான்'' என ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டார். ஆனந்த் மஹிந்திரா எப்போதும் டிவிட்டரில் ஆக்டிவ் ஆக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

புதிய ஜாவா மோட்டார் சைக்கிள்களின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

Article Published On: Saturday, November 17, 2018, 10:30 [IST]
English summary
Jawa Motorcycles Back To India: Bollywood Super Star Shahrukh Khan Remembers His Childhood. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+