பெங்களூரில் 3 புதிய ஜாவா மோட்டார்சைக்கிள் ஷோரூம்கள் திறப்பு!
இன்று பெங்களூரில் மூன்று புதிய ஜாவா ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ளன. ராஜாஜி நகரில் ஸ்கந்தா மோட்டார்ஸ் என்ற பெயரில் புதிய ஜாவா ஷோரூம் திறக்கப்பட்டு இருக்கிறது. பசவனகுடியில் சினர்ஜி என்ற பெயரிலும், ஃபோரம் ம
பெங்களூரில் மூன்று ஜாவா மோட்டார்சைக்கிள் ஷோரூம்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. மஹிந்திரா இருசக்கர வாகன டீலர்களே இப்போது ஜாவா மோட்டார்சைக்கிள் ஷோரூம்களையும் திறந்துள்ளனர். விரிவானத் தகவல்களை பார்க்கலாம்.

ஜாவா மோட்டார்சைக்கிள் பிராாண்டை இந்தியாவில் மீண்டும் களமிறக்கி உள்ளது மஹிந்திராவின் அங்கமாக செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம். கடந்த மாதம் 15ந் தேதி ஜாவா 42, ஜாவா மற்றும் ஜாவா பெராக் ஆகிய மூன்று மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

இந்த நிலையில், மோட்டார்சைக்கிள் விற்பனையை துவங்குவதற்கு அடிப்படையாக ஷோரூம்களை திறக்கும் பணியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, புனே நகரில் முதல் ஷோரூமை ஜாவா நிறுவனம் திறந்தது.

இதைத்தொடர்ந்து, இன்று பெங்களூரில் மூன்று புதிய ஜாவா ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ளன. ராஜாஜி நகரில் ஸ்கந்தா மோட்டார்ஸ் என்ற பெயரில் புதிய ஜாவா ஷோரூம் திறக்கப்பட்டு இருக்கிறது. மஹிந்திரா இருசக்கர வாகன டீலராக இருந்த ஸ்கந்தா மோட்டார்ஸ் நிறுவனமே இப்போது ஜாவா ஷோரூமையும் அமைத்துள்ளது.

அதேபோன்று, பசவனகுடியில் மஹிந்திரா இருசக்கர வாகன விற்பனை மையத்தை நடத்தி வந்த சினர்ஜி நிறுவனமே, ஜாவா ஷோரூமையும் இப்போது திறந்துள்ளது. மூன்றாவதாக, ஃபோரம் மால் வணிக வளாகத்தில் ஜாவா ஷோரூமை ஸ்கொயர் ஆட்டோ நிறுவனம் திறந்துள்ளது.

இந்த மூன்று ஷோரூம்களிலுமே ஜாவா மோட்டார்சைக்கிள்கள் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருப்பதுடன் முன்பதிவும் இன்றுமுதல் ஏற்கப்படுகிறது. தகுதியுடைய வாடிக்கையாளர்கள் டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பையும் பெற முடியும்.

ஜாவா 42 பைக் ரூ.1.55 லட்சம் விலையிலும், ஜாவா கிளாசிக் மாடல் ரூ.1.64 லட்சத்திலும், ஜாவா பெராக் மாடல் ரூ.1.89 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டன. இதில், ஜாவா 42 மற்றும் ஜாவா கிளாசிக் மாடல்கள் முதலில் விற்பனைக்கு கிடைக்கும். ஜாவா பெராக் மாடல் சற்று தாமதமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புனே, பெங்களூரை தொடர்ந்து நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் ஜாவா ஷோரூம்கள் கூடிய விரைவில் திறப்பு விழா காண இருக்கின்றன. பெரும்பாலும் மஹிந்திராவின் இருசக்கர வாகன டீலர்களாக செயல்பட்ட நிறுவனங்களே, ஜாவா மோட்டார்சைக்கிள் ஷோரூம்களையும் அமைத்து வருகின்றன. புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்கள் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு நேரடி போட்டியாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications