ஜாவா 350சிசி மற்றும் 300சிசி மோட்டார்சைக்கிளின் ஸ்பை படங்கள்!

வரும் 15ந் தேதி புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்கள், ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. மஹிந்திரா நிறுவனத்தின் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் ஜாவா மோட்டார்சைக்கிள்களை சந்தைப்படுத்

ஜாவா மோட்டார்சைக்கிள்களின் புதிய ஸ்பை படங்கள் சமூக வலைதளங்கள் மூலமாக மீண்டும் வெளியாகி இருக்கின்றன. அந்த படங்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் குறித்த விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஜாவா 350சிசி மற்றும் 300சிசி மோட்டார்சைக்கிளின் ஸ்பை படங்கள்!

வரும் 15ந் தேதி புதிய ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. மஹிந்திரா நிறுவனத்தின் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் ஜாவா மோட்டார்சைக்கிள்களை சந்தைப்படுத்தும் பொறுப்பை ஏற்றுள்ளது.

ஜாவா 350சிசி மற்றும் 300சிசி மோட்டார்சைக்கிளின் ஸ்பை படங்கள்!

இந்த புதிய ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர இருப்பதால், பெரும் ஆவல் இருந்து வருகிறது. இந்த நிலையில், ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்களின் ஸ்பை படங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

ஜாவா 350சிசி மற்றும் 300சிசி மோட்டார்சைக்கிளின் ஸ்பை படங்கள்!

அந்த வகையில், தற்போது 350சிசி மற்றும் 300சிசி ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்களின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. மொத்தம் 4 மாடல்களை ஜாவா நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜாவா 350சிசி மற்றும் 300சிசி மோட்டார்சைக்கிளின் ஸ்பை படங்கள்!

ஏற்கனவே இரண்டு மாடல்களின் படங்கள் வெளியான நிலையில், தற்போது 2 மாடல்களின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த மோட்டார்சைக்கிள்கள் டீலருக்கு அல்லது வெளியூருக்கு கொண்டு செல்லும் விதத்தில், முழுமையாக பேக்கிங் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டு இருக்கின்றன.

ஜாவா 350சிசி மற்றும் 300சிசி மோட்டார்சைக்கிளின் ஸ்பை படங்கள்!

இதுவரை கிடைத்த ஸ்பை படங்களில், புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்கள் அனைத்துமே பழைய டிசைன் பாரம்பரியத்தை தாங்கி வருவது அப்பட்டமாக தெரிகிறது. ஆனால், எஞ்சின் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களில் நவீன காலத்துக்கு தக்கவாறு வர இருக்கின்றன.

ஜாவா 350சிசி மற்றும் 300சிசி மோட்டார்சைக்கிளின் ஸ்பை படங்கள்!

புதிய ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்களில் 300சிசி லிக்யூடு கூல்டு சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அமைப்பு பழைய மாடல்களை பிரதிபலிக்கும் விதத்திலேயே இருக்கின்றன.

ஜாவா 350சிசி மற்றும் 300சிசி மோட்டார்சைக்கிளின் ஸ்பை படங்கள்!

பழைய எஞ்சின் வடிவமைப்பை பிரதிபலித்தாலும், இந்த புதிய 300சிசி எஞ்சின் லிக்யூடு சிஸ்டம் மற்றும் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் போன்ற தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கும்.

ஜாவா 350சிசி மற்றும் 300சிசி மோட்டார்சைக்கிளின் ஸ்பை படங்கள்!

தற்போது வெளியான ஸ்பை படங்களில் ஒன்று 300சிசி மாடலாகவும் மற்றொன்று செக் குடியரசு நாட்டில் விற்பனையில் இருக்கும் ஜாவா 350 மாடலாகவும் இருக்கலாம் என்று தெரிகிறது. புதிய ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்கள் அனைத்துமே ஸ்போக்ஸ் வீல்கள் கொண்டதாக வருகின்றன.

ஜாவா 350சிசி மற்றும் 300சிசி மோட்டார்சைக்கிளின் ஸ்பை படங்கள்!

செக் குடியரசு நாட்டில் இருக்கும் ஜாவா 350 மோட்டார்சைக்கிளில் சாதாரண ஃபோர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் வர இருக்கும் புதிய ஜாவா மோட்டார்சைக்கிளில் மஹிந்திரா மோஜோவின் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

ஜாவா 350சிசி மற்றும் 300சிசி மோட்டார்சைக்கிளின் ஸ்பை படங்கள்!

சர்வதேச அளவில் விற்பனையில் உள்ள ஜாவா 350 மோட்டார்சைக்கிளில் 350சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 26 பிஎச்பி பவரையும், 32 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது.

ஜாவா 350சிசி மற்றும் 300சிசி மோட்டார்சைக்கிளின் ஸ்பை படங்கள்!

புதிய ஜாவா மோட்டார்சைக்கிள் வருகை அதன் ரசிகர்களை ஏக குஷியிலும், எதிர்பார்ப்பிலும் ஆழ்த்தி இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு நேரடி போட்டியாக நிலைநிறுத்தப்படும்.

Article Published On: Thursday, November 8, 2018, 11:10 [IST]
English summary
New 2018 Jawa 350 spy pics have been leaked online. Jawa motorcycles is all set to make a comeback and almost everyone seems excited about the spy images of the upcoming Jawa motorcycle, leaked once again just a few days before its official launch. The leaked spy images for the first time show a different Jawa motorcycle.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+