வெறும் 1,500 ரூபாயில் வழிகாட்டும் வசதியுடன் பைக் ஹெல்மெட்: மாணவர்கள் அசத்தல்

வழிகாட்டும் வசதியுடன் கூடிய ஹெல்மெட்டை கர்நாடக பொறியியல் பயிலும் மாணவர்கள் உருவாக்கி இருக்கின்றனர்.

By Saravana Rajan

கார் உள்ளிட்ட நான்குசக்கர வாகனங்களில் ஜிபிஎஸ் வழிகாட்டும் சாதனம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. திக்கு தெரியாத ஊர்களுக்கு கூட யாருடைய துணையும் இல்லாமல் துல்லியமாக சென்றடைவதற்கு இந்த சாதனங்கள் உதவிகரமாக இருக்கின்றன. ஆனால், பைக் மற்றும் ஸ்கூட்டரில் செல்வோருக்கு வழிகாட்டி சாதனங்களை முழுமையாக பயன்படுத்த இயலாத நிலை இருக்கிறது.

 வெறும் 1,500 ரூபாயில் வழிகாட்டும் வசதியுடன் பைக் ஹெல்மெட்: மாணவர்கள் அசத்தல்

பைக், ஸ்கூட்டர்களில் செல்வோரும் வழிகாட்டி வசதியை பயன்படுத்தும் விதத்தில், இப்போது புதிய ஹெல்மெட் ஒன்றை கர்நாடாகவை சேர்ந்த பொறியியல் பயிலும் மாணவர்கள் இரண்டு பேர் சேர்ந்து உருவாக்கி இருக்கின்றனர்.

 வெறும் 1,500 ரூபாயில் வழிகாட்டும் வசதியுடன் பைக் ஹெல்மெட்: மாணவர்கள் அசத்தல்

குல்பர்காவிலுள்ள பிடிஏ கல்லூரியில் பொறியியல் பயின்று வரும் யோகேஷ் மற்றும் அபிஜித் ஆகிய இரண்டு மாணவர்களும் சேர்ந்து வழிகாட்டி வசதியை அளிக்கும் ஹெல்மெட்டை மிக எளிமையான முறையில் உருவாக்கி இருக்கின்றனர்.

 வெறும் 1,500 ரூபாயில் வழிகாட்டும் வசதியுடன் பைக் ஹெல்மெட்: மாணவர்கள் அசத்தல்

புளுடூத் இணைப்பு வசதி கொண்ட சிறிய ஸ்பீக்கர்களை ஹெல்மெட்டிற்குள் பொருத்தி இருக்கின்றனர். இந்த புளூடூத் ஸ்பீக்கர்கள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 6 மணிநேரம் வரை இயங்கும்.

 வெறும் 1,500 ரூபாயில் வழிகாட்டும் வசதியுடன் பைக் ஹெல்மெட்: மாணவர்கள் அசத்தல்

இந்த ஸ்பீக்கர்களை வாகன ஓட்டுபவர் தனது மொபைல்போனுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு, மொபைல்போனில் கூகுள் நிகழ்நேர வரைபடத்தில் செல்லுமிடத்தை பதிவு செய்து வழக்கம்போல் பயன்படுத்தலாம்.

Recommended Video

New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
 வெறும் 1,500 ரூபாயில் வழிகாட்டும் வசதியுடன் பைக் ஹெல்மெட்: மாணவர்கள் அசத்தல்

வண்டி செல்கையில் ஹெல்மெட்டில் இருக்கும் ஸ்பீக்கர்கள் மூலமாக, செல்லுமிடத்திற்கான வழியை வாய்மொழி தகவலாக ஸ்பீக்கர்கள் மூலமாக வாகனத்தை ஓட்டுபவர் கேட்டுக் கொண்டே மிக துல்லியமாக செல்லுமிடத்தை அடையலாம்.

 வெறும் 1,500 ரூபாயில் வழிகாட்டும் வசதியுடன் பைக் ஹெல்மெட்: மாணவர்கள் அசத்தல்

இந்த ஹெல்மெட்டில் முன்புற விண்ட்ஷீல்டு கண்ணாடியில் விசேஷ கூலிங் பேப்பரை ஒட்டி இருக்கின்றனர். இது பகலில் குளிர்ச்சியாகவும், இரவு நேரத்தில் தெளிவான பார்வை திறனையும் வழங்கும்.

 வெறும் 1,500 ரூபாயில் வழிகாட்டும் வசதியுடன் பைக் ஹெல்மெட்: மாணவர்கள் அசத்தல்

இதுகுறித்து மாணவர்கள் யோகேஷ் மற்றும் அபிஜித் கூறுகையில்," புதிய இடங்களுக்கு பைக்கில் செல்பவர்கள் செல்லுமிடத்தை தெரிந்து கொள்வதில் பிரச்னை இருந்து வருகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில் இந்த ஹெல்மெட்டை உருவாக்கினோம்," என்று கூறினர்.

 வெறும் 1,500 ரூபாயில் வழிகாட்டும் வசதியுடன் பைக் ஹெல்மெட்: மாணவர்கள் அசத்தல்

கூகுள் மேப் வசதியுடன் செயல்படும் இந்த ஹெல்மெட்டிற்கு ரூ.1,500 விலை மதிப்பு தெரிவித்துள்ளனர். இந்த ஹெல்மெட் பயனுள்ளதாக அமையும் என்பது அவர்களது கருத்தாக இருக்கிறது.

Source: ANI

Most Read Articles
English summary
Karnataka Engineering Students Has Created Route Guiding Helmet.
Story first published: Thursday, February 22, 2018, 14:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X