கவாஸாகி இசட்எக்ஸ்10ஆர் சூப்பர் பைக்கின் விலை ரூ.5 லட்சம் குறைகிறது!!

கவாஸாகி இசட்எக்ஸ்10ஆர் பைக்கின் விலை ரூ.5 லட்சம் குறைய வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யும் பணிகள் துவங்கப்படும்போது ரூ.14 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு வரும்.இ

By Saravana Rajan

கவாஸாகி இசட்எக்ஸ்10ஆர் சூப்பர் பைக்கின் விலை அதிரடியாக குறைய வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதன் ரகத்தில் மிக குறைவான விலை பைக் மாடாலாக வர இருப்பது தெரிய வந்துள்ளது.

 கவாஸாகி இசட்எக்ஸ்10ஆர் சூப்பர் பைக்கின் விலை ரூ.5 லட்சம் குறைகிறது!!

கடந்த ஆண்டு கவாஸாகி நின்ஜா 1000 சூப்பர் பைக் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யும் பணிகள் துவங்கப்பட்டன. இதனையடுத்து, கவாஸாகி நின்ஜா 1000 சூப்பர் பைக் ரூ.9.98 லட்சம் என்ற மிக அதிரடியான விலையில் விற்பனைக்கு வந்தது.

 கவாஸாகி இசட்எக்ஸ்10ஆர் சூப்பர் பைக்கின் விலை ரூ.5 லட்சம் குறைகிறது!!

விலை அதிரடியாக குறைக்கப்பட்டதையடுத்து, வாடிக்கையாளர்கள் அதிக அளவில் முன்பதிவு செய்ததால், காத்திருப்பு காலமும் வெகுவாக உயர்ந்துள்ளது. இந்த பைக்கிற்கு நீண்ட காத்திருப்பு காலம் நிலவுகிறது. இந்த நிலையில், இதே பாணியை பின்பற்றி, கவாஸாகி இசட்எக்ஸ்10ஆர் சூப்பர் பைக்கையும் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய கவாஸாகி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

 கவாஸாகி இசட்எக்ஸ்10ஆர் சூப்பர் பைக்கின் விலை ரூ.5 லட்சம் குறைகிறது!!

இதனால், இந்த பைக்கின் விலை அதிரடியாக குறைய வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. தற்போது இறக்குமதி செய்யப்படும் கவாஸாகி இசட்எக்ஸ்10ஆர் பைக் ரூ.18.80 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யும் பணிகள் துவங்கப்படும்போது ரூ.14 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு வரும்.

 கவாஸாகி இசட்எக்ஸ்10ஆர் சூப்பர் பைக்கின் விலை ரூ.5 லட்சம் குறைகிறது!!

இதனால், ரூ.5 லட்சம் வரை விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. கவாஸாகி நின்ஜா 1000 சூப்பர் பைக் போன்றே, இந்த பைக்கின் விற்பனையும் அதிரடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 கவாஸாகி இசட்எக்ஸ்10ஆர் சூப்பர் பைக்கின் விலை ரூ.5 லட்சம் குறைகிறது!!

உலகின் மிக அதிவேக சூப்பர் பைக் மாடல்களில் ஒன்று கவாஸாகி இசட்எக்ஸ்10ஆர். இந்த சூப்பர் பைக்கில் 998சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 197 எச்பி பவரையும், 113.5 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

 கவாஸாகி இசட்எக்ஸ்10ஆர் சூப்பர் பைக்கின் விலை ரூ.5 லட்சம் குறைகிறது!!

இந்த் பைக் 0 - 100 கிமீ வேகேத்தை வெறும் 2.8 வினாடிகளில் தொட்டுவிடும் வல்லமை கொண்டது. மணிக்கு 299 கிமீ வேகம் வரை செல்லும் கட்டமைப்பை பெற்றிருக்கிறது.

 கவாஸாகி இசட்எக்ஸ்10ஆர் சூப்பர் பைக்கின் விலை ரூ.5 லட்சம் குறைகிறது!!

கவாஸாகி இசட்எக்ஸ்10ஆர் பைக் ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் ஃபயர்பிளேடு, யமஹா ஆர்1, சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்1000ஆர், பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டிபோடும்.

 கவாஸாகி இசட்எக்ஸ்10ஆர் சூப்பர் பைக்கின் விலை ரூ.5 லட்சம் குறைகிறது!!

இந்த ரகத்தில் ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் ஃபயர்பிளேடு பைக்தான் தற்போது குறைவான விலை மாடலாக விற்பனையில் உள்ளது. ரூ.14.68 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. கவாஸாகி இசட்எக்ஸ்10ஆர் பைக்கின் விலை ரூ.14 லட்சத்திற்கும் கீழே வரும்போது நிச்சயம் பெரிய நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 கவாஸாகி இசட்எக்ஸ்10ஆர் சூப்பர் பைக்கின் விலை ரூ.5 லட்சம் குறைகிறது!!

கவாஸாகி இசட்எக்ஸ்10ஆர் சூப்பர் பைக் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதனையடுத்து, இந்த சூப்பர் பைக்கின் விலை ரூ.5 லட்சம் வரை குறையும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Source: Autocarindia

More from DriveSpark

Article Published On: Friday, April 27, 2018, 10:12 [IST]
English summary
Kawasaki To Assemble Ninja ZX-10R In India, Big Price Cut Expected.
மேலும்... #கவாஸாகி #kawasaki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+