கவாஸாகி நிஞ்ஜா இசட் எக்ஸ் - 10 ஆர்ஆர் பைக் விலை ரூ 88,000 உயர்வு
கவாஸாகி நிஞ்ஜா இசட் எக்ஸ் - 10 ஆர் பைக்கின் விலையை ரூ 88,000 வரை விலை உயர்த்தி அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இசட் எக்ஸ் -10 பைக்கின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.
கவாஸாகி நிஞ்ஜா இசட் எக்ஸ் - 10 ஆர் பைக்கின் விலையை ரூ 88,000 வரை விலை உயர்த்தி அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இசட் எக்ஸ் -10 பைக்கின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. விலை உயர்த்தப்பட்ட இசட் எக்ஸ் -10 ஆர் ஆர் பைக் தற்போது ரூ16.98. லட்சத்திற்கு விற்பனையாகிறது.

கவாஸாகி நிறுவனம் நிஞ்ஜா இசட் எக்ஸ் - 10 ஆர் மற்றும் இசட் எக்ஸ் ஆர்ஆர் ஆகிய பைக்கின் உள்நாட்டு அசம்பிள்ளை இந்தாண்டு துவக்கத்தில் அந்நிறுவனம் துவங்கியது. இந்தியாவில் தற்போது குறைந்த விலையில் விற்பனையில் உள்ள லிட்டர் கிளாஸ் சூப்பர் பைக்குகளில் இதுவும் ஒன்று (சுமார் 1000 சிசிக்கு மேற்பட்ட பைக்குகளை லிட்டர் கிளாஸ் பைக் என்பார்கள்).

அந்நிறுவனம் இந்த பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் போதே 2018 ஜூலை மாதத்திற்கு பின் இதன் விலை மாற்றியமைக்கப்படும் என அறிவித்திருந்தனர். அதன் படி அந்நிறுவனம் நிஞ்ஜா இசட்எக்ஸ் -10 ஆர்ஆர் பைக்கின் விலையை சுமார் ரூ 88,000 வரை உயர்த்தி அறிவித்துள்ளது.

இசட்எக்ஸ்-10 ஆர் பைக்கின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அந்த பைக் இன்றும் ரூ 12.8 லட்சத்திற்கு விற்பனையாகிறது. விலை உயர்த்ததப்பட்ட இசட்எக்ஸ் - 10 ஆர்ஆர் தற்போது 16.98 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த இசட்எக்ஸ் - 10 ஆர்ஆர் பைக்கில் 7 ஸ்போர்க் மெர்ஷினி ஃபோர்க்டு அலுமினியம் அலாய் வீல், பிரால்லி டயபலோ சூப்பர் கோர்ஸா டயர்கள், நீடித்த உழைப்பிற்காக வலுபடுத்தப்பட்ட க்ராங்கேஸ், மாடிஃபைடு சிலிண்டர் ஹெட்ஸ், ஆகிய அப்டேட்கள் இருக்கின்றன.

மேலும் இந்த நிஞ்ஜா இசட் எக்ஸ் - 10 ஆர் ஆர் பைக் முழுவதுமாக ஷோவா பேலன்ஸ் ப்ரீ பிரண்ட் ஃபோர்க், செங்குத்தான பேக் லிங்க், பிஎப் ஆர்சி லைட் கேஸ் சார்ஜ் மோனோஷாக், கார்பன் கோட்டட் டேப்பேட்ஸ், பிராம்போ எம்50 பிரேக் கேலிபர், கூடுதல் கூலிங்கிற்காக சிறப்பு ரோட்டார்கள் ஆகியன பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 998 சசி, லிக்யூட் கூல்டு, 4 ஸ்டோக், இன் லைன் 4 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 13,000 ஆர்பிஎம்மில் 197 பிஎச்பி பவரையும், 11,500 ஆர்பிஎம்மில் 113.5 என் எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ரைடரின் பாதுகாப்பிற்காக கவாஸகி டிராக்ஸன் கண்ட்ரோல், க்விக் ஸிப்டர், இன்ஜின் பிரேக்கிங் கண்ட்ரோல், ஏபிஎஸ், கவாஸகி கார்னரிங் மேம்பாட்டு செயல்பாடு, இன்ஜின் பிரேக்கிங் செயல்பாடு, ஆகியன உள்ளன. மேலும் பிரேக்கிங் இன்னர்ஷியல் மெஷரிங் யூனிட் ஆகியன பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கின் மொத்த எடை 206 கிலோவாகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்


Click it and Unblock the Notifications








