2019 கவாஸாகி இசட்900 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!
புதிய கவாஸாகி இசட்900 பைக்கில் முக்கிய மாற்றமாக ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஃப்ரேம் வெறும் 13.5 கிலோ மட்டுமே எடை கொண்டது. மேலும், பைக்கின் கையாளுமையை வெகு ஜோராக வழங்கும். 1
புதிய மாற்றங்களுடன் 2019 மாடல் கவாஸாகி இசட்900 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய பைக்கில் இடம்பெற்றுள்ள புதிய அம்சங்கள், விலை உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய கவாஸாகி இசட்900 பைக்கில் முக்கிய மாற்றமாக ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஃப்ரேம் வெறும் 13.5 கிலோ மட்டுமே எடை கொண்டது. மேலும், பைக்கின் கையாளுமையை வெகு ஜோராக வழங்குவதற்கு இந்த ஃப்ரேம் முக்கிய காரணியாக இருக்கும்.

பின் சக்கரங்களை ஃப்ரேமுடன் இணைக்கும் ஸ்விங் ஆர்ம் மைப்பு அலுமினியத்தில் கொடுக்கப்பட்டு இருப்பதால் எடை மேலும் குறைந்துள்ளது. அத்துடன், எல்இடி ஹெட்லைட்டுகள், இசட் வடிவிலான எல்இடி டெயில் லைட்டுகள் பைக்கின் தோற்றத்திற்கு வசீகரத்தை கூட்டுகிறது. மேலும், வழக்கம்போல் மிக மிரட்டலான டிசைன் தாத்பரியங்களுடன் கவர்ந்து இழுக்கிறது.

புதிய கவாஸாகி இசட்900 பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட 948சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 123 பிஎச்பி பவரையும், 98.6 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய கவாஸாகி இசட்900 பைக்கின் முன்புறத்தில் 41மிமீ இன்வர்டெட் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் சிறப்பான ஸ்விங் ஆர்ம் அமைப்பு இந்த ஒற்றை ஷாக் அப்சார்பர் அதிக நிலைத்தன்மையுடன் செல்வதற்கு உதவுகிறது.

இந்த பைக்கின் முன்புறத்தில் 300 மிமீ விட்டமுடைய இரட்டை டிஸ்க் பிரேக்குளும், பின்புறத்தில் 250 மிமீ விட்டமுடைய பெட்டல் டிஸ்க் பிரேக்கும் இடம்பெற்றுள்ளன. இந்த பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்லிப்பர் க்ளட்ச் ஆகியவை நிரந்தர அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.

2019ம் ஆண்டு மாடலாக விற்பனைக்கு வந்துள்ள புதிய கவாஸாகி இசட்900 பைக்க மூன்று விதமான இரட்டை வண்ணக் கலவையில் கிடைக்கிறது. மெட்டாலிக் மூன்டஸ்ட் க்ரே மற்றும் எபோனி, பியர்ல் ஃப்ளாட் ஸ்டார்ட்டஸ்ட் ஒயிட் மற்றும் மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் மற்றும் மெட்டாலிக் ஃப்ளாட் ஸ்பார்க் பிளாக் மற்றும் மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் ஆகிய வண்ண தேர்வுகள் உள்ளன.

புதிய கவாஸாகி இசட்900 பைக்கிற்கு ரூ.7.28 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும்.

புதிய மாற்றங்களுடன் வந்திருக்கும் கவாஸாகி இசட்900 பைக் இந்தியாவின் மிக குறைவான விலை 4 சிலிண்டர்கள் அமைப்புடைய எஞ்சின் கொண்ட சூப்பர் பைக் மாடலாக வந்துள்ளது. டுகாட்டி மான்ஸ்ட்டர் 821, டிரையம்ஃப் ஸ்ட்ரீட் டிரிப்பிள் எஸ் மற்றும் யமஹா எம்டி-09 ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications