புதிய வண்ணத்தில் கவாஸாகி இசட்900ஆர்எஸ் பைக் அறிமுகம்!!
பாரம்பரிய டிசைனிலான கவாஸாகி இசட் 900ஆர்எஸ் பைக் புதிய கருப்பு வண்ணத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் 948சிசி 4 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின
கவாஸாகி இசட் 900ஆர்எஸ் பைக் புதிய வண்ணத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

1970களில் விற்பனையில் இருந்த கவாஸாகி இசட்1 பைக்கின் பாரம்பரியத்தை தழுவி வடிவமைக்கப்பட்ட நவீன கால மாடல்தான் இசட்900ஆர்எஸ் பைக். கடந்த பிப்ரவரியில் கேண்டி ஆரஞ்ச் என்ற வண்ணத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கிற்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வு வழங்கும் விதத்தில், புதிய கருப்பு வண்ணம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.15.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கிடைக்கும்.

இதுகுறித்து கவாஸாகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் யதுகா யமஷிதா கூறுகையில்," பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இசட்900ஆர்எஸ் பைக்கிற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இந்த பைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. பைக் பிரியர்களை மனதில் வைத்து இந்த பைக் விற்பனை செய்யப்படுகிறது.

இதன் சிறப்பான தரம் மற்றும் பாரம்பரிய வடிவமைப்பு எல்லோரையும் கவர்ந்து வருகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் கருப்பு வண்ணத்தில் விரும்புவதாக தெரிவித்ததன் அடிப்படையில் இந்த புதிய வண்ணத்தை அறிமுகம் செய்திருக்கிறோம்," என்று கூறினார்.

இந்த பைக்கில் 948சிசி 4 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 111 பிஎஸ் பவரையும், 98.5 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் மிகச் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கிறது.

இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள், அனலாக் மீட்டர் மற்றும் எல்சிடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கவாஸாகியின் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக இருக்கின்றன.

குறைவான வேகத்திலும் புகைப்போக்கி சப்தம் சிறப்பாக இருக்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. இது வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் விஷயமாக கவாஸாகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாரம்பரிய வடிவமைப்பு கொண்ட பிரிமியம் பைக்குகளை விரும்புவோருக்கு மிகச் சிறப்பான மாடலாக அமையும். கேண்டி ஆரஞ்ச் வண்ணத்தைவிட இந்த கருப்பு வண்ணம் வாடிக்கையாளர்களால் விரும்பி கேட்கப்பட்டு இருப்பதால், விற்பனையிலும் சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








