புதிய கேடிஎம் ட்யூக் 125 பைக்கிற்கு முன்பதிவு ஆரம்பம்?

கேடிஎம் ட்யூக் 125 பைக்கிற்கு மும்பை மற்றும் புனே டீலர்களில் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. மும்பையிலுள்ள டீலரை டிரைவ்ஸ்பார்க் தளம் சார்பில் தொடர்பு கொண்டு பேசியபோது, புக்கிங் ஏற்கப்படுவதை உறுத

கேடிஎம் ட்யூக் 125 பைக்கிர்கு முன்பதிவு துவங்கப்பட்டு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய கேடிஎம் ட்யூக் 125 பைக்கிற்கு முன்பதிவு ஆரம்பம்?

இளைஞர்கள் மத்தியில் கேடிஎம் ட்யூக் வரிசையிலான 200சிசி, 250சிசி மற்றும் 390சிசி மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சூழலில், கேடிஎம் ட்யூக் வரிசையில் 125 மாடலும் வரும் நவம்பரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது. கேடிஎம் ட்யூக் வரிசையில் 125 மாடல் குறைவான விலை மாடலாக வரும் என்பதால், பெரும் ஆவலை ஏற்படுத்தியது.

புதிய கேடிஎம் ட்யூக் 125 பைக்கிற்கு முன்பதிவு ஆரம்பம்?

இந்த சூழலில், கேடிஎம் ட்யூக் 125 பைக்கிற்கு மும்பை மற்றும் புனே டீலர்களில் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. மும்பையிலுள்ள டீலரை டிரைவ்ஸ்பார்க் தளம் சார்பில் தொடர்பு கொண்டு பேசியபோது, புக்கிங் செய்யப்படுவதை உறுதி செய்தனர்.

புதிய கேடிஎம் ட்யூக் 125 பைக்கிற்கு முன்பதிவு ஆரம்பம்?

அத்துடன், சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள கேடிஎம் டீலர்களையும் தொடர்பு கொண்டு பேசினோம். ஆனால், கேடிஎம் நிறுவனத்திலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தங்களுக்கு வரவில்லை என்று தெரிவித்தனர். அறிவிப்பு வந்தால்தான் முன்பதிவு ஏற்க முடியும் என்றும் தெரிவித்தனர்.

புதிய கேடிஎம் ட்யூக் 125 பைக்கிற்கு முன்பதிவு ஆரம்பம்?

இந்த சூழலில், மும்பை மற்றும் புனே நகரங்களை தொடர்ந்து சென்னை, பெங்களூர் உள்பட நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் விரைவில் முன்பதிவு துவங்கப்படும் வாய்ப்புள்ளது. எனவே, தொடர்ந்து இதுதொடர்பான அப்டேட்டுகளை எதிர்பார்க்கலாம்.

புதிய கேடிஎம் ட்யூக் 125 பைக்கிற்கு முன்பதிவு ஆரம்பம்?

மஹாராஷ்டிர மாநிலம் புனே அருகில் உள்ள பஜாஜ் ஆலையில் ஏற்கனவே கேடிஎம் ட்யூக் 125 பைக் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. எனவே, இந்தியாவில் அறிமுகம் செய்வதில் அந்த நிறுவனத்திற்கு பெரிய சிக்கல் இல்லை. விலை அதிகம் நிர்ணயிக்க வேண்டி வருமே என்ற நிலைதான் அறிமுகம் செய்யப்படாததற்கான காரணமாக இருந்தது.

புதிய கேடிஎம் ட்யூக் 125 பைக்கிற்கு முன்பதிவு ஆரம்பம்?

புதிய கேடிஎம் ட்யூக் வரிசையிலான பைக்குகளின் டிசைன் தாத்பரியங்களை ட்யூக் 125 மாடலும் பெற்றிருக்கும். எனினும், வெளிநாடுகளுக்கு செல்லும் ட்யூக் 125 மாடலில் எல்இடி ஹெட்லைட்டுகள் உள்ளிட்ட அதிக சிறப்பம்சங்கள் கொடுக்கப்படுகின்றன.

புதிய கேடிஎம் ட்யூக் 125 பைக்கிற்கு முன்பதிவு ஆரம்பம்?

விலையை குறைத்து நிர்ணயிக்கும் நோக்கில், இந்த பிரிமீயம் அம்சங்களை நீக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், கேடிஎம் ட்யூக் வரிசை மாடல்களின் மீதான மோகம் காரணமாக, விலை ஒரு பொருட்டாக இருக்காது. எனவே, பிரிமீயம் வசதிகளும் தக்க வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கேடிஎம் ட்யூக் 125 பைக்கிற்கு முன்பதிவு ஆரம்பம்?

இந்த பைக்கில் 124..7சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 14.7 பிஎச்பி பவரையும், 11.8 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. விற்பனைக்கு வரும்போது 125சிசி ரகத்தில் அதிக சக்திவாய்ந்த மாடல் என்ற பெருமைக்குரிய மாடலாக இருக்கும்.

புதிய கேடிஎம் ட்யூக் 125 பைக்கிற்கு முன்பதிவு ஆரம்பம்?

புதிய கேடிஎம் ட்யூக் 125 பைக்கின் முன்புறத்தில் 43மிமீ WP அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் WP மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கும். முன்சக்கரத்தில் 300மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 230மிமீ டிஸ்க் பிரேக்கும் இடம்பெறும். ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்திற்கு பதிலாக சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெறலாம்.

புதிய கேடிஎம் ட்யூக் 125 பைக்கிற்கு முன்பதிவு ஆரம்பம்?

கேடிஎம் ட்யூக் 200 பைக்கைவிட புதிய கேடிஎம் ட்யூக் 125 பைக்கின் விலை ரூ.20,000 முதல் ரூ.30,000 வரையில் குறைவாக இருக்கலாம். இந்த பைக் ரூ.1.50 லட்சம் அடக்க விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 17, 2018, 16:34 [IST]
English summary
We have already reported about KTM planning to launch the 125 Duke in the Indian market. Now, the bookings for the KTM 125 Duke is open in India. Yes, one of the KTM dealerships in Mumbai has confirmed to DriveSpark that the bookings are open and the 125 Duke can be booked by making an advanced payment of Rs 1,000.
மேலும்... #கேடிஎம்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+