கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் அறிமுகம் இல்லை... ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் மாடல் இத்தாலியில் நடந்து வரும் இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

இத்தாலியில் நடந்து வரும் இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் இன்று அறிமுகம் செய்யப்படும் என்று ஆட்டோமொபைல் துறையினரும், கேடிஎம் ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். ஆனால், இந்த பைக் மாடல் அறிமுகம் செய்யப்படாததால் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் அறிமுகம் இல்லை... ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்

கடந்த ஜூன் மாதம் கேடிஎம் நிறுவனம் 390 அட்வென்ச்சர் பைக்கின் வருகையை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது. தீவிர சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களும் கேடிஎம் ரசிகர்களை உசுப்பேற்றி வந்தது.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் அறிமுகம் இல்லை... ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்

கேடிஎம் 390 ட்யூக் பைக்கின் அடிப்படையில் அட்வென்ச்சர் எனப்படும் சாகச பயணங்களுக்கு ஏற்ற ரக பைக் மாடலாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேடிஎம் ட்யூக் 390 பைக்கின் அதே பெட்ரோல் டேங்க்தான் இந்த பைக்கிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. எனினும், ஏராளமான மாற்றங்களுடன் அட்வென்ச்சர் ரக மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் அறிமுகம் இல்லை... ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்

எல்இடி ஹெட்லைட்டுகள், சிறிய விண்ட் ஸ்கிரீன் ஆகியவை முக்கிய சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த பைக்கில் சாகச பயணங்கள் மற்றும் கரடுமுரடான சாலை நிலைகளை எதிர்கொள்வதற்காக, அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட லாங் டிராவல் சஸ்பென்ஷன் முன்புறத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் இடம்பெற்றுள்ளது.

இது சாகச ரக பைக் என்பதற்காக, முன்புறத்தில் 19 அங்குல ஸ்போக்ஸ் சக்கரமும், பின்புறத்தில் 17 அங்குல ஸ்போக்ஸ் சக்கரமும் உள்ளதுடன், ஆஃப்ரோடு டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் நக்கிள் கார்டு நிரந்தர அம்சமாக இடம்பெற்றுள்ளது. இருக்கை அமைப்பிலும் குறிப்பிடத்தக்க மாறுதல் செய்யப்பட்டுள்ளன.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் அறிமுகம் இல்லை... ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்

ஸ்பை படங்களில், ஃபுட்பெக்குகளில் விசேஷ ரப்பர் பாகம் மூலமாக ஆஃப்ரோடு பயணங்கள் மற்றும் சாகசங்களின்போது ஓட்டுபவருக்கு அதிக க்ரிப் கிடைக்கும் வகையில் இருக்கிறது. சைலென்சர் குழாயும் மேல்நோக்கி இருப்பது போல கொடுக்கப்பட்டு இருக்கிறது.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் அறிமுகம் இல்லை... ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்

கேடிஎம் 390 ட்யூக் மற்றும் ஆர்சி மாடல்களில் இடம்பெற்றிருக்கும் அதே 373சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கிலும் பயன்படுத்தப்பட உள்ளது. எனினும் ட்யூனிங்கில் மாறுபடும். ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட இந்த எஞ்சின் 43 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் அறிமுகம் இல்லை... ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்

இந்த பைக்கில் 5 அங்குல எல்சிடி திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகம், எஞ்சின் சுழல் வேகம், ஓடிய தூரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இந்த திரை மூலமாக பெற முடியும்.

இந்த பைக்கில் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகளும், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளன. ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்தை ஆஃப் செய்யும் வசதியும் உள்ளது. இதுதவிர, டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் இடம்பெறும் என்று தெரிகிறது.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் அறிமுகம் இல்லை... ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்

இன்று இத்தாலியில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அடுத்த ஆண்டு இந்தியாவில் இந்த புதிய பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகளை பொய்க்கும் விதத்தில், இந்த மாடல் அறிமுகம் செய்யப்படாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த புதிய பைக் இந்தியாவில் ரூ.3 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

குறிப்பு: மாதிரி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #கேடிஎம்
English summary
Austrian motorcycle manufacturer KTM did not unveil its much awaited 390 ADV at EICMA.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X