கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் ஸ்பை படங்கள்!

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் மாடல் இந்தியாவில் ரகசிய சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருப்பது குறித்த தகவல் முதல்முறையாக வெளியாகி இருக்கிறது. கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் அங்க அடையாளங்கள் முழுவது

இந்தியாவில் முதல்முறையாக புதிய கேடிஎம் 390 பைக்கின் சோதனை ஓட்டப் படங்கள் வெளியாகி இருக்கின்றன. படங்களையும், கூடுதல் தகவல்களையும் படத்தில் பார்க்கலாம்.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் ஸ்பை படங்கள்!

கடந்த மாதம் நடந்த ஐக்மா 2018 மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்பை பொய்க்கும் வகையில், இந்த மாடல் அறிமுகம் செய்யப்படவில்லை. இது கேடிஎம் பிரியர்களை ஏமாற்றமுற செய்தது.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் ஸ்பை படங்கள்!

இந்த சூழலில், கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் மாடல் இந்தியாவில் ரகசிய சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருப்பது குறித்த தகவல் முதல்முறையாக வெளியாகி இருக்கிறது. கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் அங்க அடையாளங்கள் முழுவதுமாக மறைக்கப்பட்ட நிலையில் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் ஸ்பை படங்கள்!

உயர்த்தப்பட்ட ஃபென்டர் அமைப்பு, லாங் டிராவல் சஸ்பென்ஷன் மற்றும் ஹெவி டியூட்டி ஹேண்டில்பார் ஆகியவை இதனை அட்வென்ச்சர் ரக பைக் மாடலாக எளிதாக காட்டுகிறது. அத்துடன், இந்த பைக் அலாய் வீல்கள் மட்டுமின்றி, ஸ்போக்ஸ் வீல்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் ஸ்பை படங்கள்!

அட்வென்ச்சர் ரைடர்களுக்கு ஏற்ற வகையிலான இருக்கை அமைப்பு, ப்ரீ லோடு அட்ஜெஸ்ட் வசதியுடன் பின்புற சஸ்பென்ஷன், விண்ட்ஷீல்டு ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் ஸ்பை படங்கள்!

ஆஃப்ரோடு பயணங்களின்போது, தரையில் இடிபடாத வகையில் உயர்த்தப்பட்ட சைலென்சர் குழாயும் பொருத்தப்பட்டுள்ளது. வண்டி கீழே விழும்போது அதிக சேதமடையாமல் பார்த்துக் கொள்ளும் கிராஷ் கார்டு அமைப்பும் சிறப்பாக இருக்கும்.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் ஸ்பை படங்கள்!

இந்தியாவின் மிக பிரபலமான கேடிஎம் 390 ட்யூக் பைக்கின் அடிப்படையில்தான் இந்த புதிய மாடலும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், 390 ட்யூக் பைக்கைவிட இருக்கை உயரம் கூடுதலாக இருக்கும்.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் ஸ்பை படங்கள்!

இந்த பைக்கில் 373சிசி லிக்யூடு கூல்டு சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 43 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் ஸ்பை படங்கள்!

புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் ரூ.3 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அதிக விலை கொண்ட மாடலாகவும் இருக்கும். அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Most Read Articles
மேலும்... #கேடிஎம்
English summary
Spy pics of the new KTM 390 Adventure 'for India' have been leaked for the first time. The highly-awaited KTM 390 Adventure was expected to be unveiled at EICMA 2018, but fans were let down by the Austrian motorcycle brand. However, the leaked spy images do promise some exciting KTM 390 Adventure news!
Story first published: Tuesday, December 25, 2018, 17:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X