ரூ.1.18 லட்சத்தில் புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக் விற்பனைக்கு அறிமுகம்!
ரூ.1.18 லட்சம் என்ற கவர்ச்சிகரமான ஆரம்ப விலையில் புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ரூ.1.18 லட்சம் என்ற கவர்ச்சிகரமான ஆரம்ப விலையில் புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விலை குறைவான இந்த புதிய கேடிஎம் பைக்கின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் கேடிஎம் 125 ட்யூக் பைக்கானது புதிய கேடிஎம் 390 ட்யூக் பைக்கின் டிசைன் தாத்பரியங்களை பெற்றிருக்கிறது. ஆனால், இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக் மாடலானது, கேடிஎம் 200 ட்யூக் பைக்கின் டிசைன் தாத்பரியங்களுடன் வந்துள்ளது.
சிறிய ஏமாற்றம் எனினும், விலை குறைவான கேடிஎம் பைக் என்பது இளைஞர்களை கவரும் விஷயமாக இருக்கும்.

இந்த பைக்கில் 124.7சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்தத எஞ்சின் அதிகபட்சமாக 14.3 பிஎச்பி பவரையும், 12 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 125சிசி ரகத்தில் மிக சக்திவாய்ந்த மாடல் இதுதான்.
Recommended Video


இந்தத பைக் ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 10 வித நிலைகளில் மாற்றிக் கொள்ளும் வசதியுடன் கூடிய மோனோ ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டு இருக்கிறது.

அடுத்து, இந்த பைக்கில் பின்சக்கரமானது அலுமினியம் ஸ்விங் ஆர்ம் மூலமாக ஃப்ரேமுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் முன் சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக கொடுக்கப்பட்டு இருப்பது இதன் முக்கிய அம்சமாக குறிப்பிடலாம். அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் 125சிசி ரகத்திற்கு மேலான பைக்குகளில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக்கப்பட உள்ள நிலையில், இந்த பைக் ஏபிஎஸ் பிரேக்குடன் வந்துள்ளது.

புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக் ரூ. 118,163 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது அறிமுகச் சலுகை விலையாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, அடுத்த சில மாதங்களில் விலை அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளது. நாடு முழுவதும் உள்ள 450 கேடிஎம் டீலர்கள் மூலமாக இந்த பைக் விற்பனைக்கு கிடைக்கும்.

கேடிஎம் ட்யூக் வரிசை பைக்குகளின் டிசைன் இந்திய இளைஞர்களை வெகுவாக கவர்ந்த ஒன்று. இந்த நிலையில், 125சிசி ரகத்தில் மிக சக்திவாய்ந்த மாடலாகவும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வந்நதிருப்பது சிறந்த தேர்வாக இருக்கும். மேலும், கேடிஎம் ரசிகர்களுக்கு குறைவான விலை தேர்வாக வந்திருப்பதால், விற்பனையில் நிச்சயம் நல்ல வரவேற்பை பதிவு செய்யும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications