TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
சாதனைப் பயணம் மேற்கொண்டவரின் கேடிஎம் பைக் தீயில் கருகி நாசம்!
உத்தரகாண்ட் மாநிலம், ரூர்கியை சேர்ந்தவர் சோனு என்கிற ரூபேஷ் பதுலா. இவர் ரூர்க்கியில் சோனு ஸ்பீட்ஸ்ட்ரைக்கர்ஸ் என்ற பைக் மாடிஃபிகேஷன் பட்டறையை நடத்தி வருகிறார். மேலும், இவர் பைக் பயணம் மேற்கொள்வதிலும் ஆர்வம் கொண்டவர்.
இந்த நிலையில், நாட்டின் அனைத்து திசைகளிலும் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் தங்க நாற்கர சாலையை பைக்கில் அதிவேகத்தில் கடக்கும் முயற்சியை எடுத்தார். இதற்காக, தனது கேடிஎம் ட்யூக் 390 பைக்கில் பல்வேறு கூடுதல் ஆக்சஸெரீகளை பொருத்தினார்.
லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிக்கும் நோக்கில் பயணத்தை திட்டமிட்டார். அதன்படி, டெல்லியிலிருந்து புறப்பட்ட அவர் சென்னை நோக்கி தங்க நாற்கர சாலையில் பயணித்துள்ளார். சென்னையை நெருங்கிய அவர் நகரத்திற்குள் செல்லாமல் புறவழிச்சாலை வழியாக விரைவாக கடப்பதற்கு திட்டமிட்டிருந்தார்.
இதற்காக, சென்னையை சேர்ந்த அருண் என்ற நண்பரின் வழிகாட்டுதலுடன் புறவழிச்சாலையில் பயணித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக, நாய் குறுக்கே வந்துள்ளது. நாய் மீது மோதாமல் இருப்பதற்காக வேகமாக பிரேக் பிடித்துள்ளார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த அவர் கீழே விழுந்துவிட்டார். இந்த விபத்தில் சோனு சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். எனினும், அவரது கேடிஎம் ட்யூக் 390 பைக் கீழே விழுந்த வேகத்தில் தீப்பிடித்துக் கொண்டது.
பைக்கில் பொருத்தப்பட்டிருந்த கூடுதல் பெட்ரோல் கேன்கள் பைக் கீழே விழுந்தபோது, தரையில் உரசி தீப்பொறிகள் ஏற்பட்டுள்ளன. இதனால், கேன்களில் இருந்த பெட்ரோல் எளிதாக தீப்பிடித்துக் கொண்டது. இந்த விபத்தில், பைக் முற்றிலும் எரிந்து நாசமானது. அதிலிருந்த சோனுவின் உடைமைகளும் தீக்கிரையாகின.
இந்த விபத்திற்கு அந்த பைக்கில் பொருத்தப்பட்டிருந்த கூடுதல் பெட்ரோல் கேன்கள் தரம் குறைவானதாக இருந்ததே காரணமாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, இதுபோன்ற நீண்ட தூர பயணங்கள் செல்வோர் தரமான பெட்ரோல் கேன்களை வாங்கி பொருத்துவது அவசியம்.
அதேபோன்று, இந்தியா நெடுஞ்சாலைகளில் நாய், மாடு போன்ற விலங்குகளும், பாதசாரிகளும் சாலையை கடப்பது வாடிக்கையான விஷயம். எனவே, குடியிருப்பு மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் வேகத்தை குறைத்து நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியம்.
பிரேக் பிடிக்கும்போதும் முன்சக்கர பிரேக்கை அதிக அளவு பிடிக்காமல் இரண்டு சக்கரங்களிலும் சீராக பிரேக் பிடிப்பதற்கு பழக வேண்டும். இப்போது பெரும்பாலான விபத்துக்களுக்கு வாகன ஓட்டிகள் பதட்டத்தில் முன்சக்கர பிரேக்கை வேகமாக பிடித்துவிடுவதும் காரணமாக இருக்கிறது.