இந்தியாவில் அசெம்பிள்... கவாஸாகி சூப்பர் பைக்குகள் விலை ரூ.6 லட்சம் குறைந்தது!

இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் புதிய கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்10 ஆர் மற்றும் இசட்எக்ஸ்- 10ஆர்ஆர் ஆகிய இரண்டு சூப்பர் பைக்குகளும் முறையே ரூ.12.8 லட்சம் மற்றும் ரூ.16.10 லட்சம் ஆகிய விலையில் வந்துள்

By Saravana Rajan

இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் புதிய கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்10 ஆர் மற்றும் இசட்எக்ஸ்- 10ஆர்ஆர் ஆகிய இரண்டு சூப்பர் பைக்குகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த இரண்டு சூப்பர் பைக்குகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது.

இந்தியாவில் அசெம்பிள்... கவாஸாகி சூப்பர் பைக்குகள் விலை ரூ.6 லட்சம் குறைந்தது!

கவாஸாகி நிறுவனம் இந்திய சூப்பர் பைக் மார்க்கெட்டில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு சரியான விலையில் தனது தயாரிப்புகளை கொடுப்பதற்காக இந்தியாவிலேயே சூப்பர் பைக்குகளை அசெம்பிள் செய்யும் திட்டத்தை கையிலெடுத்துள்ளது.

இந்தியாவில் அசெம்பிள்... கவாஸாகி சூப்பர் பைக்குகள் விலை ரூ.6 லட்சம் குறைந்தது!

அதன்படி, கவாஸாகி நிறுவனத்தின் மிக பிரபலமான நின்ஜா இசட்எக்ஸ் 10ஆர் மற்றும் இசட்எக்ஸ் 10ஆர்ஆர் ஆகிய இரண்டு சூப்பர் பைக்குகளும் இந்தியாவில் அசெம்பிள் செய்யும் பணிகள் துவங்கப்பட்டன. மேலும், இந்த இரண்டு சூப்பர் பைக்குகளையும் இப்போது விற்பனைக்கும் அறிமுகம் செய்துள்ளது கவாஸாகி.

இந்தியாவில் அசெம்பிள்... கவாஸாகி சூப்பர் பைக்குகள் விலை ரூ.6 லட்சம் குறைந்தது!

கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ் 10ஆர் பைக் ரூ.12.80 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், கவாஸாகி இசட்எக்ஸ் 10ஆர்ஆர் பைக் ரூ.16.10 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளன. அதாவது, இறக்குமதி செய்வதை தவிர்த்து, இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுவதால், இந்த இரண்டு சூப்பர் பைக்குகளின் விலையும் ரூ.6 லட்சம் வரை குறைந்துள்ளது.

இந்தியாவில் அசெம்பிள்... கவாஸாகி சூப்பர் பைக்குகள் விலை ரூ.6 லட்சம் குறைந்தது!

இது அறிமுகச் சலுகை விலையாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வரும் ஜூலை மாதம் வரை மட்டுமே இந்த விலையில் இரண்டு சூப்பர் பைக்குகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நாடுமுழுவதும் உள்ள கவாஸாகி டீலர்ஷிப்புகளில் இரண்டு பைக்குகளுக்கும் முன்பதிவும் ஏற்கப்படுகிறது.

இந்தியாவில் அசெம்பிள்... கவாஸாகி சூப்பர் பைக்குகள் விலை ரூ.6 லட்சம் குறைந்தது!

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பைக்குகளுக்கு மட்டுமே முன்பதிவு ஏற்கப்பட இருக்கிறது. எனவே, முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பைக் டெலிவிரி கொடுக்கும் பணிகள் நடைபெறும்.

இந்தியாவில் அசெம்பிள்... கவாஸாகி சூப்பர் பைக்குகள் விலை ரூ.6 லட்சம் குறைந்தது!

புதிய கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ் 10ஆர் மற்றும் இசட்எக்ஸ் 10ஆர்ஆர் பைக்குகளில் 4 சிலிண்டர்கள் கொண்ட 998சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 197 பிஎச்பி பவரையும், 113.4 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் அசெம்பிள்... கவாஸாகி சூப்பர் பைக்குகள் விலை ரூ.6 லட்சம் குறைந்தது!

கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ் 10ஆர் மற்றும் இசட்எக்ஸ் 10ஆர்ஆர் பைக்குகளில் ஏராளமான பாதுகாப்பு வசதிகள் உள்ளன. அதிசெயல்திறன் மிக்க இந்த பைக்கை கிளப்பும்போது நிலைகுலைவதை தடுக்கும் விதத்திலான லான்ச் கன்ட்ரோல் சிஸ்டம், அதிக தரைப்பிடிப்பை தரும் டிராக்ஷன் கன்ட்ரோல், பிரேக்கிங் கன்ட்ரோல், குயிக் ஷிஃப்ட் வசதி, கார்னர் மேனேஜ்மென்ட் சிஸ்டம், பாஷ் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் ஆகியவை முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக இருக்கின்றன.

இந்தியாவில் அசெம்பிள்... கவாஸாகி சூப்பர் பைக்குகள் விலை ரூ.6 லட்சம் குறைந்தது!

புதிய கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ் 10ஆர் பைக் கேஆர்டி எடிசன் என்ற மாடலில் வந்துள்ளது. நின்ஜா பைக்குகளின் விசேஷ கிளி பச்சை வண்ணம் மற்றும் பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கரில் கிடைக்கிறது. நின்ஜா இசட்எக்ஸ் 10ஆர்ஆர் பைக் கருப்பு வண்ணத்தில் கிடைக்கும்.

இந்தியாவில் அசெம்பிள்... கவாஸாகி சூப்பர் பைக்குகள் விலை ரூ.6 லட்சம் குறைந்தது!

கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ் 10ஆர் மற்றும் இசட்எக்ஸ் 10ஆர்ஆர் சூப்பர் பைக்குகள் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுவதால் விலை ரூ.6 லட்சம் வரை குறைந்துள்ளது. இது வாடிக்கையாளர்களின் கவனத்தை நிச்சயம் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 30, 2018, 10:22 [IST]
English summary
Kawasaki has launched the locally assembled Ninja ZX-10R and the ZX-10RR in the Indian market. The Kawasaki Ninja ZX-10R is priced at Rs 12.80 lakh and the Kawasaki Ninja ZX-10RR carries a price tag of Rs 16.10 lakh. Both are introductory ex-showroom prices and will be valid till July 2018.
மேலும்... #கவாஸாகி #kawasaki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+