'மேட் இன் இந்தியா' கவாஸாகி இசட்10ஆர் பைக்கிற்கு புக்கிங் குவிந்தது!!

கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ் 10ஆர் சூப்பர் பைக்கின் உற்பத்தி இந்தியாவிலேயே துவங்கப்பட்டது. கடந்த இரு வாரங்களுக்கு முன் ரூ.12.80 லட்சம் என்ற மிக மிக சவாலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பழைய

By Saravana Rajan

கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ் 10ஆர் சூப்பர் பைக் இதுவரை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த பைக் ரூ.18.8 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

'மேட் இன் இந்தியா' கவாஸாகி இசட்10ஆர் பைக்கிற்கு புக்கிங் குவிந்தது!!

இந்த நிலையில், கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ் 10ஆர் சூப்பர் பைக்கின் உற்பத்தி இந்தியாவிலேயே துவங்கப்பட்டது. கடந்த இரு வாரங்களுக்கு முன் ரூ.12.80 லட்சம் என்ற மிக மிக சவாலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பழைய மாடலைவிட ரூ.6 லட்சம் வரை விலை குறைவாக வந்தது வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

'மேட் இன் இந்தியா' கவாஸாகி இசட்10ஆர் பைக்கிற்கு புக்கிங் குவிந்தது!!

நேர் போட்டியாளராக இருந்து வரும் ஹோண்டா ஃபயர்பிளேடு சூப்பர் பைக் இறக்குமதி செய்து விற்பனையாகிறது. மேலும், ரூ.14.78 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த புதிய கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ் 10ஆர் அதைவிட குறைவான விலையில் வந்தது மிகச் சிறந்த தேர்வாக வந்தது. 1000சிசி சூப்பர் பைக் ரகத்தில் மிக குறைவான விலை மாடலாகவும் மாறியது.

'மேட் இன் இந்தியா' கவாஸாகி இசட்10ஆர் பைக்கிற்கு புக்கிங் குவிந்தது!!

இதனால், 'மேட் இன் இந்தியா' கவாஸாகி நின்ஜா இசட்10ஆர் சூப்பர் பைக்கிற்கு புக்கிங் குவிந்தது. இந்த சூப்பர் பைக்கிற்கு வெறும் 15 நாட்களில் 100 பேர் முன்பதிவு செய்தனர். இது சூப்பர் ரகத்தில் மிக அதிக அளவாக பார்க்கப்படுகிறது. இது கவாஸாகி நிறுவனமே எதிர்பார்க்காத வரவேற்பாக இருந்தது.

'மேட் இன் இந்தியா' கவாஸாகி இசட்10ஆர் பைக்கிற்கு புக்கிங் குவிந்தது!!

குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருப்பதாக கவாஸாகி நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில்,உற்பத்தியை கருத்தில் கொண்டு இந்த பைக்கிற்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

'மேட் இன் இந்தியா' கவாஸாகி இசட்10ஆர் பைக்கிற்கு புக்கிங் குவிந்தது!!

வேர்ல்டு சூப்பர்பைக் ாம்பியன்ஷிப் போட்டியில் பலமுறை வெற்றி கண்ட பெருமை கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ் 10ஆர் சூப்பர் பைக்கிற்கு உண்டு. இந்த பைக்கில் 4 சிலிண்டர் அமைப்புடைய 998சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த் எஞ்சின் 200 எச்பி பவரையும், 113.5 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. பல்வேறு நிலைகளில் இயங்கும் டிரைவிங் மோடுகளும் உள்ளன.

'மேட் இன் இந்தியா' கவாஸாகி இசட்10ஆர் பைக்கிற்கு புக்கிங் குவிந்தது!!

இந்த சூப்பர் பைக்கில் லான்ச் கன்ட்ரோல்சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார்னரிங் மேனேஜ்மென்ட் சிஸ்டம், எஞ்சின் பிரேக்கிங் நுட்பம் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப வசதிகளும், பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

'மேட் இன் இந்தியா' கவாஸாகி இசட்10ஆர் பைக்கிற்கு புக்கிங் குவிந்தது!!

உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்படும் புதிய கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ் 10 ஆர் மற்றும் 10ஆர்ஆர் பைக்குகள் ஒற்றை இருக்கை அமைப்புடன் விற்பனைக்கு வந்துள்ளன. இதனால், ஹோமோலாகேஷன் எனப்படும் இந்திய விதிகளுக்கு ஏற்ப இருக்கை அமைப்பில் மாற்றம் செய்யும் அவசியம் ஏற்படவில்லை.

'மேட் இன் இந்தியா' கவாஸாகி இசட்10ஆர் பைக்கிற்கு புக்கிங் குவிந்தது!!

எனினும், பின் இருக்கை விரும்புவோருக்கு கூடுதல் ஆக்சஸெரீயாக பெற்று பொருத்தும் வாய்ப்புள்ளது. இதற்கான பாகங்கள் இறக்குமதி செய்து பொருத்தி தரப்படும். இதற்கு ரூ.38,000 வரை செலவாகும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Made In India Kawasaki ZX-10R Sold Out in Less Than 15 Days
Story first published: Saturday, July 14, 2018, 12:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X