மஹிந்திரா மோஜோ பைக்கில் புதிய இரட்டை வண்ணக் கலவை அறிமுகம்!
மஹிந்திரா மோஜோ பைக்கில் நீலம் மற்றும் வெள்ளை வண்ணங்கள் கொண்ட புதிய இரட்டை வண்ணக் கலவை புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. மஹிந்திரா எஸ்டி300 என்ற டாப் வேரியண்ட்டில் இந்த புதிய வண்ணம் கிடைக்கும்.
மஹிந்திரா மோஜோ பைக்கில் புதிய இரட்டை வண்ணக் கலவை அறிமுகமாகி இருக்கிறது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா மோஜோ பைக்கில் நீலம் மற்றும் வெள்ளை வண்ணங்கள் கொண்ட புதிய இரட்டை வண்ணக் கலவை புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. மஹிந்திரா எஸ்டி300 என்ற டாப் வேரியண்ட்டில் இந்த புதிய வண்ணம் கிடைக்கும்.

இதுதவிர, ஏற்கனவே வழங்கப்படும் சிவப்பு- சில்வர் வண்ணக் கலவையும் தொடர்ந்து கிடைக்கும். அதேநேரத்தில், கருப்பு வண்ணக் கலவை இனி விற்பனைக்கு கிடைக்காது. புதிய வண்ணத்தில் வந்திருந்தாலும், மஹிந்திரா மோஜோ பைக்கின் விலையில் மாற்றம் இல்லை. ரூ.1.79 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் தொடர்கிறது.

மஹிந்திரா மோஜோ பைக்கில் 295சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 26 பிஎச்பி பவரையும், 30 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா மோஜோ பைக்கில் முன்புறத்தில் அப்சைடு டவுன் அமைப்புடைய ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்சக்கரத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா மோஜோ பைக்கில் இரட்டை குடுவை அமைப்புடைய ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், இரட்டை சைலென்சர் மற்றும் அனலாக் - டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. 21 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் இடம்பெற்றிருக்கிறது.

இந்த ஆண்டு துவக்கத்தில் மஹிந்திரா மோஜோ பைக்கின் குறைவான விலை மாடல் யுடி300 என்ற பெயரில் விற்பனைக்கு வந்தது. இந்த மாடலில் சில முக்கிய சிறப்பம்சங்கள் நீக்கப்பட்டு குறைவான விலை மாடலாக கொண்டு வரப்பட்டது.

மஹிந்திரா யுடி300 பைக் ரூ.1.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. மஹிந்திரா மோஜோ யுடி300 பைக் மாடலானது சிவப்பு மற்றும் நீலம் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








