இந்தியாவில் தயாராகும் முதல் சூப்பர் பைக்; கார்பரேட்களுடன் போட்டி போடும் இந்திய நிறுவனம்
ஆட்டோ மொபைல் துறையில் கார்பரேட் கம்பெனிகள் மட்டும் கால் பதித்து வந்த நிலையில் தற்போது சில இந்தியர்கள் சிலர் ஸ்டார்ட் அப் கம்பெனியை துவங்கி கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு டப் கொடுத்து வருகின்றனர்.
ஆட்டோ மொபைல் துறையில் கார்பரேட் கம்பெனிகள் மட்டும் கால் பதித்து வந்த நிலையில் தற்போது சில இந்தியர்கள் சிலர் ஸ்டார்ட் அப் கம்பெனியை துவங்கி கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு டப் கொடுத்து வருகின்றனர். அவர்களின் ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி இந்தியாவின் முதல் சூப்பர் பைக்கை தயாரிக்கவிருக்கிறது.

பெங்களூருவை சேர்ந்த மேன்கமே ஆட்டோமொட்டிவ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் க்ரவுட் பண்டின் முறையில் இபி-1 என்ற இந்தியாவின் மூதல் சூப்பர் எலெட்ரானிக்கை பைக்கை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இந்த இபி -1 பைக்கில் அதிக அடர்த்தியுள்ள பேட்டரி பேக்களும், மோட்டார் கண்ட்ரோலர்களும் பொருத்தப்பட்டுள்ளன. அதிக அடர்த்தியள்ள பேட்டரி என்றால் ஒரு முறை சார்ஜ் செய்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 70 கி.மீ. வேகத்தில் சென்றால் 480 கி.மீ. வரை செல்லலாம்.

அதுவே முழு சார்பில் சிட்டிக்குள் பயணித்தால் 500-550 கி.மீ. வரை பயணிக்க முடியும். வேகம் குறைவு மற்றும் அடிக்கடி பிரேக் பிடிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் இந்த அதிக தூரம் பயணிக்க முடிவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் லிக்யூட் கூல் 18.4 கிலோ வாட்ஸ் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிக அடர்த்தியான சாம்சங் செல்களை கொண்டுள்ளது. மேலும் பேட்டரிகளை கண்காணிக்க மேட்ரிக்ஸ் பி.எம்.எஸ். என்ற தொழிற்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பைக்கை பெட்ரோல் பைக்குகளை விட குறைந்த விலையில் தயாரிக்க இந்நிறுவனம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பைக் 600-650 சிசி பைக்களுக்கு இணையான பவரை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பைக் அதிகபட்சமாக 250 கி.மீ. வேகம் வரை செல்லக்கூடியது. இந்த பைக் பெல்ட் டிரைவ் சிஸ்டத்தை பொருத்து வேலை செய்யக்கூடியது. இதில் 40 கிலோ வாட்ஸ் பிஎம்எஸ்எம் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

இது ஸாப்டில் 180 என்எம் டார்க் திறனையும், வீலில் 432 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மோட்டாருக்கு எந்த வித லுப்ரிகேன்ஸூம் பயன்படுத்த தேவையில்லை. மேலும் இந்த மோட்டரில் இருந்து சத்தம் மிக மிக குறைவாகத்தான் வரும்.

இந்த பைக்கின் பிரேக்கிங் சிஸ்டத்தை பொருத்த வரை முன் பக்கம் 320மிமீ கொண்ட இரண்டு டிஸ்க், பின்பக்கம் 240 மிமீ கொண்ட ஒரு டிஸ்க் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் டூயல் சேனல் ஏ.பி.எஸ் வசதி, டிராக்ஸன் கண்ட்ரோல், ஆகிய வசதிகளும் இந்த பைக்கில் உள்ளது.

சஸ்பென்ஸனை பொருத்தவரை 120 மிமீ அப்சைடு டவுண் ஃபோக் மற்றும் பின் பக்கம் டிடிஎக்ஸ் ஜிபி ரியர் கியர் பாக்ஸ், பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் மொத்தம் 160 கிலோ எடை கொண்டது. இந்த பைக்கில் 190 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது.

இந்த பைக் கர்நாடக மாநிலம் தார்வார்டு என்ற பகுதியில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 3 விதமான ரைடின் மோர்டுகள் உள்ளன. எக்கானமி மோடில் பைக் 120 கி.மீ. வேகம் வரை செல்லும், ஸ்போர்ட் மோடில் 180 கி.மீ. வேகம் வரை செல்லும, ரேஸ் மோடில் 251 கி.மீ. வரை செல்லும் என் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த பைக் நேரடியா இந்தியாவில் விற்பனையா பெரிய பெரிய நிறுவனங்களில் பெட்ரோல் பைக்களுக்கு போட்டியாள விளங்குகிறது. இதன் விலை குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதன் விலை அந்த பைக்குகளை விட பல மடங்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் இதன் மைலேஜ் மற்றும் மற்றவற்றை கணக்கில் கொண்டு மக்கள் இந்த பைக்கை விரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பைக் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த பைக்கில் உள்ள அம்சங்களை பார்த்து இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தை பெரும் ஆட்டோ மொபைல் நிறுவனம் வாங்கி இந்த மாடல் பைக்கை வெளியிடுவார்கள் என்றும் பேசப்படுகிறது.
டிரைவ் ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்


Click it and Unblock the Notifications








