ஹோண்டா பைக் பந்தயத்தில் சென்னையை சேர்ந்த முகம்மது மிக்கைல் அசத்தல்!!
சென்னையில் நடந்த இடிமிட்சு ஹோண்டா இந்தியா டேலண்ட் கப் பைக் பந்தயத்தில் 150சிசி பிரிவில் சென்னையை சேர்ந்த முகம்மது மிக்கைல் முதலிடம் பிடித்து அசத்தி இருக்கிறார். கடந்த வார போட்டியின்போது ஹோண்டா சிபிஆர்
சென்னையில் நடந்த இடிமிட்சு ஹோண்டா இந்தியா டேலண்ட் கப் பைக் பந்தயத்தில் 150சிசி பிரிவில் சென்னையை சேர்ந்த முகம்மது மிக்கைல் முதலிடம் பிடித்து அசத்தி இருக்கிறார்.

இந்தியாவில் உள்ள இளம் பைக் பந்தய வீரர்களை இனம் கண்டு ஊக்குவிக்கும் விதத்தில், ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் சிறப்பு பைக் பந்தயத்தை நடத்தி வருகிறது. கடந்த வார இறுதியில் சென்னை அருகே உள்ள இங்காட்டுக் கோட்டை மோட்டார் பந்தய களத்தில் போட்டி நடந்தது.

இதில், சென்னையை சேர்ந்த முகம்மது மிக்கைல் என்ற 14வயது இளம் வீரர் முதலிடம் பிடித்தார். மேலும், 150சிசி பிரிவில் இருங்காட்டுக்கோட்டை ரேஸ் டிராக்கை மிக குறைவான நேரத்தில் கடந்து புதிய சாதனையையும் படைத்துள்ளார். கடந்த வார போட்டியின்போது ஹோண்டா சிபிஆர் 150ஆர் பைக்கில் இருங்காட்டுக் கோட்டை பந்தய களத்தில் ஒரு சுற்றை 2:11.805 நிமிடங்களில் கடந்து சாதனை புரிந்துள்ளார் முகம்மது மிக்கைல்.

இந்த போட்டியில் 17 வினாடிகள் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தை அக்ஷய் முரளியும், மூன்றாவது இடத்தை அனந்த் கேகே ஆகியோரும் பிடித்தனர். இந்த பிரிவில் மிக இள வயது வீரராக 13 வயது ஜாஃப்ரி இமானுவேல் 4வது இடத்தை பிடித்தார்.

சென்னையில் நடந்த இந்த போட்டிக்கான தேர்வு முகாம் கடந்த மாதம் 23ந் தேதி பெங்களூரில் நடந்தது. இதில், டிரைவ்ஸ்பார்க் தளத்தின் மேனேஜிங் எடிட்டர் ஜோபோ குருவில்லா கலந்து கொண்டார். அப்போது, ஜோபோ குருவில்லாவின் தேர்வில் முகம்மது மிக்கைல் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து பிற நகரங்களிலும் ஹோண்டா டேலண்ட் கப் போட்டிக்கான இளம் வீரர்கள் தேர்வு முகாம்கள் நடைபெற இருக்கின்றன. இந்த போட்டியில் கலந்து கொண்ட இளம் வீரர்களுக்கு ஹோண்டா டென்10 ரேஸிங் அகடமியில் பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக வீரர்கள் தெரிவித்தனர்.

மேலும், இந்த பயிற்சி முகாமில் ராஜீவ் சேது, சரத்குமார் மற்றும் அனிஷ் ஷெட்டி உள்ளிட்ட பிரபல பைக் பந்தய வீரர்கள் பங்கேற்று இளம் வீரர்களுக்கு தங்களது அனுபவங்களையம், யுக்திகளையும் பகிர்ந்து கொண்டனர்.

ஹோண்டா டேலண்ட் கப் ஓபன் 250சிசி பிரிவில் ஆறு சுற்றுகள் கொண்ட பந்தயத்தில் அனிஷ் ஷெட்டி முதலிடத்தை பிடித்தது. அபிஷேக் வாசுதேவ் மிக நெருக்கமாக வந்து இரண்டாவது இடத்தை பிடித்தார். அமித் ரிச்சர்டு டாப்போ மூன்றாவது இடத்தை பிடித்தார்.


Click it and Unblock the Notifications