மேம்படுத்தப்பட்ட ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் மூன்று மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கும். பேஸ் மாடல் ரூ.70,031 விலையிலும், கார்பன் எடிசன் மாடல் ரூ.73,500 விலையிலும், ரேஸ் எடிசன் ரூ.80,211 விலையிலும் கிடைக்கும்.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் புதிய அம்சங்கள் மற்றும் விலை விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.

மேம்படுத்தப்பட்ட ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் மூன்று மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கும். பேஸ் மாடல் ரூ.70,031 விலையிலும், கார்பன் எடிசன் மாடல் ரூ.73,500 விலையிலும், ரேஸ் எடிசன் ரூ.80,211 விலையிலும் கிடைக்கும். அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

மேம்படுத்தப்பட்ட ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!!

2019 மாடலாக வந்திருக்கும் புதிய ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரில் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட ஷாக் அப்சார்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனலாக் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் , பெரிய விண்ட் ஸ்கிரீன் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், புதிய நீல வண்ணத்திலும் எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் இனி கிடைக்கும்.

மேம்படுத்தப்பட்ட ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய எஸ்ஆர் 150 ஸ்கூட்டரில் தனது தாயகமான இத்தாலியை நினைவூட்டும் விதத்தில், சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய அந்நாட்டு தேசியக் கொடியின் வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கருப்பு வண்ண அலாய் வீல்கள் கவர்ச்சியை அதிகரிக்கின்றன.

மேம்படுத்தப்பட்ட ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!!

ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரில் 154.8சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 10.4 பிஎச்பி பவரையும், 11.4 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இறுக்கிறது.

மேம்படுத்தப்பட்ட ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!!

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் டிரம் பிரேக்கும் உள்ளன. இந்த ஸ்கூட்டரில் ஏபிஎஸ் அல்லது காம்பி பிரேக் சிஸ்டம் இல்லாதது ஏமாற்றம். எனினும், வரும் 2019ம் ஆண்டு முதல் அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேம்படுத்தப்பட்ட ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!!

ஒட்டுமொத்த டிசைனில் மாற்றம் இல்லை என்றாலும், பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதுப்பொலிவுடன் வந்துள்ளது ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர். நேரடி போட்டியாளராக எஸ்எக்ஸ்எல் 150 ஸ்கூட்டர் மட்டுமே இப்போது இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 19, 2018, 11:55 [IST]
English summary
Piaggio India has launched the updated Aprilia SR 150 in the country. The prices for the 2019 Aprilia SR 150 start at Rs 70,031 ex-showroom (Delhi). The 2019 version of the sporty scooter gets new colour options and new features.
மேலும்... #அப்ரில்லா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+