2018 பஜாஜ் அவென்ஜர் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

Written By:
Recommended Video - Watch Now!
Angry Bull Almost Rammed Into A Car - DriveSpark

அண்மையில் பஜாஜ் நிறுவனம் 2018ம் ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் பைக் மாடல்கள் குறித்த விபரத்தை வெளியிட்டது. அதில், அந்த நிறுவனத்தின் க்ரூஸர் ரக மாடலான அவென்ஜர் பைக் மாடல்கள் இடம்பெற்றிருந்தன.

2018 பஜாஜ் அவென்ஜர் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

அதன்படி, அவென்ஜர் பைக்கின் 220சிசி மற்றும் 150 எஞ்சின் கொண்ட ஸ்ட்ரீட், க்ரூஸ் ரக வேரியண்ட்டுகள் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. குறிப்பாக, புதிய அவென்ஜர் பைக்குகளின் ஹெட்லைட் டிசைனில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

 2018 பஜாஜ் அவென்ஜர் 220 க்ரூஸ்

2018 பஜாஜ் அவென்ஜர் 220 க்ரூஸ்

2018 அவென்ஜர் 220 க்ரூஸ் மாடலில் எல்இடி பகல்நேர விளக்குகள் ஒருங்கிணைக்கப்பட்ட புதிய வடிவிலான ஹெட்லைட் இடம்பெற்றிருக்கிறது. மற்றபடி, ஆங்காங்கே டிசைனில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. பெரிய வடிவிலான புதிய விண்ட்ஸ்க்ரீன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. க்ரூஸ் வேரியண்ட்டில் பின்னால் அமர்ந்து செல்பவருக்கு வசதியாக பேக்ரெஸ்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

2018 பஜாஜ் அவென்ஜர் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

புதிய அவென்ஜர் பைக்குகளின் பிராண்டு எழுத்துக்கள் பெரிதாகி இருக்கின்றன. மேலும், புதிய அவென்ஜர் பைக்குகளி்ல முற்றிலும் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இருப்பது முக்கிய அம்சம்.

2018 பஜாஜ் அவென்ஜர் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

புதிய பஜாஜ் அவென்ஜர் 220 க்ரூஸ் பைக்கில் ஸ்போக் வீல்கள் இருக்கின்றன. புதிய இருக்கைகளும், மறுவடிவமைப்பு பெற்ற ஹேண்டில்பார் அமைப்பும் ஓட்டுனருக்கு சொகுசான அனுபவத்தை வழங்கும்.

2018 பஜாஜ் அவென்ஜர் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

புதிய அவென்ஜர் 220 க்ரூஸ் பைக் ஆபர்ன் பிளாக் மற்றும் மூன் ஒயிட் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். இந்த பைக் ரூ.93,466 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

 2018 பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட்

2018 பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட்

2018 பஜாஜ் அவென்ஜர் 220 ஸ்ட்ரீட் மாடலும், 150 ஸ்ட்ரீட் மாடலும் ஸ்டைலிங்கில் சிறிய வித்தியாசங்களை சந்தித்துள்ளன. 220 க்ரூஸ் போன்றே, பகல்நேர விளக்குகள் இணைந்த புதிய ஹெட்லைட் வடிவமைப்பு இடம்பெற்றிருக்கிறது. சிறிய விண்ட்ஸ்க்ரீன் வேறுபடுத்துகிறது.

2018 பஜாஜ் அவென்ஜர் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

பஜாஜ் வி சீரிஸ் பைக்குகளை போன்று பஜாஜ் அவென்ஜர் 220 ஸ்ட்ரீட் மாடலில் புதிய பாடி டீக்கெல் ஸ்டிக்கர் கொடுக்கப்பட்டு இருப்பது கவர்ச்சியான அம்சம். மேட் பிளாக் மற்றும் மேட் ஒயிட் என்ற இரு வண்ணங்களில் கிடைக்கும். அவென்ஜர் 150 ஸ்ட்ரீட் மாடல் மிட்நைட் புளூ என்ற நீல வண்ணத்தில் கிடைக்கும்.

2018 பஜாஜ் அவென்ஜர் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

பஜாஜ் அவென்ஜர் 220 மாடலில் 220சிசி ட்வின் ஸ்பார்க் நுட்பத்திலான ஆயில் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 18.7 பிஎச்பி பவரையும், 17.5 என்எம் டார்க் திறனையும் வழங்கும். அவென்ஜர் 150 ஸ்ட்ரீட் மாடலில் இருக்கும் 150சிசி எஞ்சின் அதிகபட்சமாக 14.34 பிஎச்பி பவரையும், 12.5 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

2018 பஜாஜ் அவென்ஜர் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

புதிய 2018 பஜாஜ் அவென்ஜர் 220 பைக்கின் க்ரூஸ் மற்றும் ஸ்ட்ரீட் பைக் மாடல்களில் முன்சக்கரத்தில் 260மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.150 ஸ்ட்ரீட் மாடலில் முன்சக்கரத்தில் 240மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக் உள்ளது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்படாதது ஏமாற்றமான விஷயம்.

2018 பஜாஜ் அவென்ஜர் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

புதிய பஜாஜ் அவென்ஜர் 220 க்ரூஸ் பைக்கும், 220 ஸ்ட்ரீட் பைக்கும் ஒரே விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. புதிய அவென்ஜர் 150 ஸ்ட்ரீட் பைக் ரூ.81,459 எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

மேலும்... #பஜாஜ் #bajaj
English summary
புதுப்பொலிவுடன் பஜாஜ் அவென்ஜர் க்ரூஸர் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
Story first published: Saturday, January 20, 2018, 16:37 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark