புதிய பஜாஜ் பல்சர் 150 பைக்கின் விலை விபரம் வெளியானது!

புதிய பஜாஜ் பல்சர் 150 பைக்கின் விலை விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. டெலிவிரியும் விரைவில் துவங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

By Saravana Rajan

புதிய பஜாஜ் பல்சர் 150 பைக்கின் விலை விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய பஜாஜ் பல்சர் 150 பைக்கின் விலை விபரம் வெளியானது!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கும் புதிய பஜாஜ் பல்சர் 150 பைக்கின் ஸ்பை படங்கள் சில தினங்களுக்கு முன் வெளியாகின. இந்த சூழலில், இந்த பைக்கின் விலை குறித்த விபரங்களும் வெளியாகின.

புதிய பஜாஜ் பல்சர் 150 பைக்கின் விலை விபரம் வெளியானது!

பெங்களூரில் உள்ள பஜாஜ் டீலரை தொடர்பு கொண்டு இது தொடர்பாக வினவினோம். அப்போது, புதிய பஜாஜ் பல்சர் 150 பைக்கிற்கு பெங்களூரில் 92,900 ஆன்ரோடு விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

புதிய பஜாஜ் பல்சர் 150 பைக்கின் விலை விபரம் வெளியானது!

மேலும், இந்த புதிய மாடலுக்கு முன்பதிவும் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் டீலர் ஊழியர்கள் தெரிவித்தனர். புதிய பஜாஜ் பல்சர் 150 பைக்குகள் டீலருக்கு வந்தவுடன் டெலிவிரி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

புதிய பஜாஜ் பல்சர் 150 பைக்கின் விலை விபரம் வெளியானது!

புதிய பஜாஜ் பல்சர் 150 பைக்கில் முக்கிய மாற்றமாக பின்சக்கரத்திலும் டிஸ்க் பிரேக் வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்சக்கரத்தில் 260மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 230மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய பஜாஜ் பல்சர் 150 பைக்கின் விலை விபரம் வெளியானது!

புதிய பஜாஜ் பல்சர் 150 பைக் ஸ்பிளிட் இருக்கையை பெற்றிருக்கிறது. புதிய பெடல்கள் மற்றும் புதிய பின்புற கிராப் ரெயில் கைப்பிடிகளும் மாற்றங்களாக உள்ளன. இந்த பைக்கில் முன்புறத்தில் 37மிமீ ஃபோர்க்குகளுடன் சஸ்பென்ஷன் அமைப்பு இடம்பெற்றிருக்கிறது.

புதிய பஜாஜ் பல்சர் 150 பைக்கின் விலை விபரம் வெளியானது!

புதிய பஜாஜ் பல்சர் பைக்கில் 149சிசி ட்வின் ஸ்பார்க் எஞ்சின்தான் தக்க வைக்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 14 பிஎச்பி பவரையும், 13.4 என்எம் டார்க் திறனையும் வழங்கும். அதேநேரத்தில், புதிய மாடலின் எஞ்சின் சக்தி சற்றே கூடுதலாக இருக்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.

புதிய பஜாஜ் பல்சர் 150 பைக்கின் விலை விபரம் வெளியானது!

இதனிடையே, பாரஜ்-6 ஸ்டேஜ் மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய எஞ்சினுடன் முற்றிலும் புதிய தலைமுறை பஜாஜ் பல்சர் பைக்கை தயாரிக்கும் பணிகளும் இப்போது நடந்து வருகிறது. வடிவமைப்பிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கும் என்பதுடன் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டமும் இடம்பெற்றிருக்கும்.

புதிய பஜாஜ் பல்சர் 150 பைக்கின் விலை விபரம் வெளியானது!

புதிய பஜாஜ் பல்சர் 150 பைக் கூடுதல் வசீகரத்துடன் பின்புற டிஸ்க் பிரேக் வசதியுடன் வருவது நிச்சயம் வரவேற்கத்தக்க விஷயம். இதன்மூலமாக, தனது மார்க்கெட்டை கெட்டியாக வைத்துக்கொள்வதற்கு வாய்ப்பை புதிய பல்சர் ஏற்படுத்திக் கொள்ளும் என்று நம்பலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 27, 2018, 16:49 [IST]
English summary
We have already reported about Bajaj Auto launching the new 2018 edition of the Pulsar 150 in India. Now, the price and key features of the new 2018 Pulsar 150 has been revealed. The overall design of the 2018 Pulsar 150 remains the same but now comes with additional features.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+