புதிய பஜாஜ் பல்சர் 250 சிசி மாடல் விற்பனைக்கு வருகிறது!!

Written By:

பல்சர் வரிசையில் புதிய 250சிசி மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய பஜாஜ் பல்சர் 250 சிசி மாடல் விற்பனைக்கு வருகிறது!!

தற்போது பல்சர் வரிசையில் 150சிசி முதல் 220சிசி வரையிலான மாடல்கள் விற்பனையில் உள்ளன. மேலும், டோமினார் என்ற ஸ்போர்ட்ஸ் பைக் மாடலும் விற்பனையில் உள்ளது. இதில், பல்சர் 135எல்எஸ் மற்றும் 180சிசி மாடல்களை கழற்றிவிட பஜாஜ் ஆட்டோ முடிவு செய்துள்ளது.

புதிய பஜாஜ் பல்சர் 250 சிசி மாடல் விற்பனைக்கு வருகிறது!!

இந்த நிலையில், பல்சர் வரிசையை பலப்படுத்தும் விதமாக புதிய 250சிசி மாடலை பஜாஜ் ஆட்டோ தயாரித்து வருகிறது. கேடிஎம் ட்யூக் 250 மாடலில் பயன்படுத்தப்படும் எஞ்சினை இந்த புதிய பல்சரில் பொருத்தவும் திட்டமிட்டுள்ளது.

புதிய பஜாஜ் பல்சர் 250 சிசி மாடல் விற்பனைக்கு வருகிறது!!

புதிய பஜாஜ் பல்சர் 250 மாடல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தர எஞ்சினுடன் வர இருப்பதாகவும் தெரிகிறது. அத்துடன், ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் உள்ளிட்ட வசதிகளும் முக்கியமானதாக இருக்கும்.

புதிய பஜாஜ் பல்சர் 250 சிசி மாடல் விற்பனைக்கு வருகிறது!!

பஜாஜ் நிறுவனத்தின் சக்திவாய்ந்த டோமினார் 400 பைக் எதிர்பார்த்த அளவு விற்பனையில் கைகொடுக்கவில்லை. எனவே, வாடிக்கையாளர்களுக்கு பரிட்சயமான பல்சர் குடும்ப வரிசையிலேயே புதிய மாடலை அறிமுகம் செய்யவும் பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

புதிய பஜாஜ் பல்சர் 250 சிசி மாடல் விற்பனைக்கு வருகிறது!!

கேடிஎம் ட்யூக் 250, யமஹா எஃப்இசட்25 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் வர இருக்கிறது. பல்சர் குடும்பத்தில் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக இந்த புதிய மாடல் நிலைநிறுத்தப்படும்.

புதிய பஜாஜ் பல்சர் 250 சிசி மாடல் விற்பனைக்கு வருகிறது!!

இந்த புதிய பைக் மூலமாக தனது மார்க்கெட்டை வலுப்படுத்தும் முயற்சிகளில் பஜாஜ் தீவிரமாக இறங்கி இருக்கிறது. புதிய பஜாஜ் பல்சர் 250 பைக் அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Autocar India

மேலும்... #பஜாஜ் #bajaj
English summary
All New Bajaj Pulsar 250 To be Launched By Next Year.
Story first published: Tuesday, April 10, 2018, 18:59 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark