யமஹா, ஹோண்டாவுக்கு போட்டியாக வருகிறது புதிய பஜாஜ் பல்சர் பைக்.. இளசுகளை நிச்சயம் கவரும்..

ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் கூடிய புதிய பஜாஜ் பல்சர் என்எஸ் 160 பைக் வரும் அக்டோபர் மாதம் லான்ச் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

By Arun

ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் கூடிய புதிய பஜாஜ் பல்சர் என்எஸ் 160 பைக் வரும் அக்டோபர் மாதம் லான்ச் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய பல்சர் என்எஸ் 160 பைக்கின் சிறப்பம்சங்கள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

யமஹா, ஹோண்டாவுக்கு போட்டியாக வருகிறது புதிய பஜாஜ் பல்சர் பைக்.. இளசுகளை நிச்சயம் கவரும்..

பஜாஜ் பல்சர் என்எஸ் 160 பைக்கில் (Pulsar NS 160) ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் ஏபிஎஸ் (ABS) வசதி கிடையாது. பாதுகாப்பு அம்சங்களில் இன்றியமையாத ஒன்றாக திகழும் ஏபிஎஸ் பிரேக் வசதி, பல்சர் என்எஸ் 160 பைக்கில் இல்லாமல் இருப்பது ஒரு குறையாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

யமஹா, ஹோண்டாவுக்கு போட்டியாக வருகிறது புதிய பஜாஜ் பல்சர் பைக்.. இளசுகளை நிச்சயம் கவரும்..

இந்த குறையை களையும் விதமாக, பல்சர் என்எஸ் 160 பைக்கில், ஏபிஎஸ் வசதியை சேர்க்கும் பணிகளில் பஜாஜ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. பல்சர் என்எஸ் 160 பைக்கில், குறைந்தபட்சம் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதி இனி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

யமஹா, ஹோண்டாவுக்கு போட்டியாக வருகிறது புதிய பஜாஜ் பல்சர் பைக்.. இளசுகளை நிச்சயம் கவரும்..

ஏபிஎஸ் வசதியுடன் கூடிய புதிய பல்சர் என்எஸ் 160 பைக், அக்டோபர் மாதம் லான்ச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ்ஸை பொருத்துவதுடன், பகல் நேரத்தில் எரியும் எல்இடி உள்ளிட்ட ஒரு சில கூடுதல் வசதிகளும் பஜாஜ் நிறுவனத்தால் வழங்கப்படலாம்.

யமஹா, ஹோண்டாவுக்கு போட்டியாக வருகிறது புதிய பஜாஜ் பல்சர் பைக்.. இளசுகளை நிச்சயம் கவரும்..

அத்துடன் கிராபிக்ஸ் மற்றும் பெயிண்ட் ஸ்கீமிலும் மாற்றம் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இவை தவிர மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் செய்யப்படாது என்றே பஜாஜ் நிறுவன வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

யமஹா, ஹோண்டாவுக்கு போட்டியாக வருகிறது புதிய பஜாஜ் பல்சர் பைக்.. இளசுகளை நிச்சயம் கவரும்..

இந்திய மார்க்கெட்டில், சுஸூகி ஜிக்ஸர் 160, யமஹா எப்இஸட்-எஸ் (FZ-S), டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 (RTR 160), ஹோண்டா ஹார்னெட் சிபி 160 ஆர் (CB 160 R) உள்ளிட்ட பைக்குகளுக்கு புதிய பஜாஜ் பல்சர் என்எஸ் 160 கடும் போட்டியை வழங்கும்.

யமஹா, ஹோண்டாவுக்கு போட்டியாக வருகிறது புதிய பஜாஜ் பல்சர் பைக்.. இளசுகளை நிச்சயம் கவரும்..

பஜாஜ் பல்சர் என்எஸ் 160 பைக்கின் தற்போதைய டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை சுமார் 82 ஆயிரம் ரூபாய். ஆனால் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் ஒரு சில வசதிகளும் கூடுதலாக வழங்கப்படுவதால், புதிதாக லான்ச் செய்யப்படவுள்ள பல்சர் என்எஸ் 160 பைக்கின் விலை சுமார் ரூ.10 ஆயிரம் அதிகரிக்க கூடும்.

யமஹா, ஹோண்டாவுக்கு போட்டியாக வருகிறது புதிய பஜாஜ் பல்சர் பைக்.. இளசுகளை நிச்சயம் கவரும்..

புதிய பல்சர் என்எஸ் 160 ஏபிஎஸ் பைக், பஜாஜ் நிறுவனத்தின் ட்ரிபிள் ஸ்பார்க் ப்ளக் இக்னீஷன் டெக்னாலஜி உடனான (triple spark plug ignition technology), 160 சிசி, 4 ஸ்ட்ரோக் ஆயில் கூல்டு இன்ஜினுடனே தொடரும்.

யமஹா, ஹோண்டாவுக்கு போட்டியாக வருகிறது புதிய பஜாஜ் பல்சர் பைக்.. இளசுகளை நிச்சயம் கவரும்..

இந்த இன்ஜின் 8,500 ஆர்பிஎம்மில், 15.5 பிஎஸ் பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 14.6 என்எம் டார்க் திறனையும் வழங்கும் வல்லமை வாய்ந்தது. இந்த பைக்கில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டு ஆப்ஷனாக வழங்கப்பட்டு வருகிறது.

யமஹா, ஹோண்டாவுக்கு போட்டியாக வருகிறது புதிய பஜாஜ் பல்சர் பைக்.. இளசுகளை நிச்சயம் கவரும்..

தற்போதைய பல்சர் என்எஸ் 160 பைக்கின் மொத்த எடை 142 கிலோ. எனினும் கூடுதலாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதி சேர்க்கப்படுவதால், புதிய பல்சர் என்எஸ் 160 ஏபிஎஸ் பைக்கின் எடை, 2-3 கிலோ வரை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

யமஹா, ஹோண்டாவுக்கு போட்டியாக வருகிறது புதிய பஜாஜ் பல்சர் பைக்.. இளசுகளை நிச்சயம் கவரும்..

தற்போதயை பல்சர் என்எஸ் 160 பைக், சிட்டி ரோடுகளில் லிட்டருக்கு 40.6 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என பஜாஜ் நிறுவனம் தெரிவிக்கிறது. புதிய பல்சர் என்எஸ் 160 ஏபிஎஸ் பைக்கிலும் அதே மைலேஜ் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

யமஹா, ஹோண்டாவுக்கு போட்டியாக வருகிறது புதிய பஜாஜ் பல்சர் பைக்.. இளசுகளை நிச்சயம் கவரும்..

ஏனெனில், புதிய பல்சர் என்எஸ் 160 பைக்கின் எடை 2-3 கிலோ வரை மட்டுமே கூடும் என்பதால், மைலேஜ் பாதிக்கும் என கூறி விட முடியாது. அப்படியே மைலேஜ் சிறிதளவு குறைந்தாலும் கூட, ஏபிஎஸ் என்ற பாதுகாப்பு அம்சம் கிடைக்கிறதே.

யமஹா, ஹோண்டாவுக்கு போட்டியாக வருகிறது புதிய பஜாஜ் பல்சர் பைக்.. இளசுகளை நிச்சயம் கவரும்..

125 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட அனைத்து டூவீலர்களிலும் பாதுகாப்பு கருதி, குறைந்தபட்சம் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பொருத்தப்படுவது 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கட்டாயமாகிறது. மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

Source: Motoroctane

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

English summary
New Bajaj Pulsar NS 160 will be Launched Soon. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X