புதிய பல்சர் என்எஸ் 160 டிவின் டிஸ்க் பைக்குகளை டீலர்களுக்கு அனுப்பும் பணியை தொடங்கியது பஜாஜ்..

புதிய பல்சர் என்எஸ் 160 டிவின் டிஸ்க் பைக்குகளை டீலர்களுக்கு அனுப்பும் பணியை பஜாஜ் நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

By Arun

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ், புதிய பல்சர் என்எஸ் 160 டிவின் டிஸ்க் (Pulsar NS160 Twin Disc) பைக்குகளை, டீலர்ஷிப்களுக்கு அனுப்பும் பணியை தொடங்கியுள்ளது. இதன் புனே எக்ஸ் ஷோரூம் விலை 82,360 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய பல்சர் என்எஸ் 160 டிவின் டிஸ்க் பைக்குகளை டீலர்களுக்கு அனுப்பும் பணியை தொடங்கியது பஜாஜ்..

முன்பகுதியில் சிங்கிள் டிஸ்க் பிரேக் உடன் விற்பனை செய்யப்பட்டு வரும் ரெகுலர் என்எஸ் 160 பைக்கின் புனே எக்ஸ் ஷோரூம் விலை 80,500 ரூபாய். இதனுடன் ஒப்பிடுகையில், புதிய என்எஸ் 160 டிவின் டிஸ்க் பைக்கின் விலை சுமார் 2,000 ரூபாய் மட்டுமே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பல்சர் என்எஸ் 160 டிவின் டிஸ்க் பைக்குகளை டீலர்களுக்கு அனுப்பும் பணியை தொடங்கியது பஜாஜ்..

புதிய பல்சர் என்எஸ் 160 டிவின் டிஸ்க் பைக் ஏறக்குறைய அனைத்து அம்சங்களிலும், ரெகுலர் என்எஸ் 160 பைக்கை போலவே உள்ளது. ஆனால் ரெகுலர் என்எஸ் 160 பைக்கின் பின்பகுதியில் உள்ள ட்ரம் பிரேக்கானது, டிஸ்க் பிரேக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய பல்சர் என்எஸ் 160 டிவின் டிஸ்க் பைக்குகளை டீலர்களுக்கு அனுப்பும் பணியை தொடங்கியது பஜாஜ்..

இது மட்டுமே புதிய பல்சர் என்எஸ் 160 டிவின் டிஸ்க் பைக்கில் செய்யப்பட்டுள்ள குறிப்பிடத்தகுந்த மாற்றமாக பார்க்கப்படுகிறது. புதிய என்எஸ் 160 வேரியண்ட்டானது, டிவின் டிஸ்க் பெயரை தாங்கி வரும் 2வது பல்சர் பைக் என்பது கவனிக்கத்தக்க விஷயம்.

புதிய பல்சர் என்எஸ் 160 டிவின் டிஸ்க் பைக்குகளை டீலர்களுக்கு அனுப்பும் பணியை தொடங்கியது பஜாஜ்..

புதிய என்எஸ் 160 டிவின் டிஸ்க் பைக்கில், புதிய 230 எம்எம் ரியர் டிஸ்க் பிரேக் (rear disc brake) பொருத்தப்பட்டுள்ளது. பல்சர் என்எஸ் 200 பைக்கிலும் இதே ரியர் டிஸ்க் பிரேக்தான் இடம்பெற்றுள்ளது. அதே நேரத்தில் 240 எம்எம் ப்ரண்ட் டிஸ்க் (front disc) மாற்றம் செய்யப்படாமல் அப்படியே தொடர்கிறது.

புதிய பல்சர் என்எஸ் 160 டிவின் டிஸ்க் பைக்குகளை டீலர்களுக்கு அனுப்பும் பணியை தொடங்கியது பஜாஜ்..

ஸ்டீல் பெரிமீட்டர் ஃப்ரேம் (steel perimeter frame), பாக்ஸ்-செக்ஸன் ஸ்விங்கார்ம் (box-section swingarm) உள்பட இதர மெக்கானிக்கல் பார்ட்களும் மாற்றப்படவில்லை. புதிய பல்சர் என்எஸ் 160 டிவின் டிஸ்க் பைக்கில், 160.3 சிசி ஏர் மற்றும் ஆயில் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின், 8,500 ஆர்பிஎம்மில் 15.3 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 14.6 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்லது. இந்த பவர், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மூலமாக, பின் சக்கரத்திற்கு அனுப்பப்படுகிறது. இந்த பைக்கின் பெட்ரோல் டேங்க்கின் கெபாசிட்டி 12 லிட்டர்கள்.

புதிய பல்சர் என்எஸ் 160 டிவின் டிஸ்க் பைக்குகளை டீலர்களுக்கு அனுப்பும் பணியை தொடங்கியது பஜாஜ்..

டிசைன் அடிப்படையில் பார்த்தாலும், புதிய பல்சர் என்எஸ் 160 டிவின் டிஸ்க் பைக்கில், குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. எனினும் ட்யூயல் டிஸ்க் பிரேக் ஸ்டேட்டஸை குறிக்கும் வகையில், கிராபிக்ஸில் சிறிய அளவிலான மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய பல்சர் என்எஸ் 160 டிவின் டிஸ்க் பைக்குகளை டீலர்களுக்கு அனுப்பும் பணியை தொடங்கியது பஜாஜ்..

புதிய பல்சர் என்எஸ் 160 டிவின் டிஸ்க் பைக்கானது, சுஸூகி ஜிக்ஸர், அப்பாச்சி ஆர்டிஆர் 4வி (Apache RTR 4V) மற்றும் ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் உள்ளிட்ட பைக்குகளுக்கு கடும் சவாலை வழங்கும். நல்ல பவர் மற்றும் மைலேஜ் உடன் பாதுகாப்பான பைக்கை எதிர்பார்ப்பவர்களுக்கு, புதிய பல்சர் என்எஸ் 160 டிவின் டிஸ்க் நல்ல தேர்வாக இருக்கும்.

Source: Shivansh Batham

English summary
New Bajaj Pulsar NS160 Twin Disc Dealer Dispatch Begins. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X