புதிய டிசைன், புதிய எஞ்சின்... கலக்க வரும் புதிய பஜாஜ் பல்சர் பைக்குகள் !

முற்றிலும் புதிய மாடல்களாக வெளிவர இருக்கும் பல்சர் பைக்குகள் 2020ம் ஆண்டு மார்க்கெட்டுக்கு வர இருக்கின்றன. வடிவமைப்பு, பிஎஸ்-6 எஞ்சின், அதிக பாதுகாப்பு வசதிகளுடன் புதிய பல்சர் மாடல்களை அறிமுகம் செய்ய

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முதுகெலும்பாக மாறி இருக்கிறது பல்சர் பிராண்டு. 2001ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பல்சர் பைக், ஸ்கூட்டர்களுக்கு பின் பஜாஜ் நிறுவனத்திற்கு முகவரியை தந்தது. பல்சர் பிராண்டிற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து, அந்த பிராண்டில் தொடர்ந்து பல புதிய மாடல்களை பஜாஜ் அறிமுகம் செய்து வருகிறது.

புதிய டிசைன், புதிய எஞ்சின்... கலக்க வரும் புதிய பஜாஜ் பல்சர் பைக்குகள் !

பல்சர் பிராண்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் பல பைக் மாடல்களில் பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யாமல் விற்பனை செய்து வருகிறது பஜாஜ் நிறுவனம். இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்திலும், சந்தைப் போட்டியை சமாளிக்கவும் அதிக மாற்றங்களுடன் புதிய பல்சர் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.

புதிய டிசைன், புதிய எஞ்சின்... கலக்க வரும் புதிய பஜாஜ் பல்சர் பைக்குகள் !

முற்றிலும் புதிய மாடல்களாக வெளிவர இருக்கும் பல்சர் பைக்குகள் 2020ம் ஆண்டு மார்க்கெட்டுக்கு வர இருக்கின்றன. வடிவமைப்பு, பிஎஸ்-6 எஞ்சின், அதிக பாதுகாப்பு வசதிகளுடன் புதிய பல்சர் மாடல்களை அறிமுகம் செய்ய பஜாஜ் திட்டமிட்டுள்ளது. பல்சர் மட்டுமின்றி, புதிய அவென்ஜர் பைக் மாடல்களும் வர இருப்பது உறுதியாகி இருக்கிறது.

புதிய டிசைன், புதிய எஞ்சின்... கலக்க வரும் புதிய பஜாஜ் பல்சர் பைக்குகள் !

இதுகுறித்து ஃபோர்ப்ஸ் இந்தியா இதழுக்கு பேட்டியளித்த பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ்,"பல்சர் பைக் அவ்வப்போது சிறப்பாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இருப்பினும், முற்றிலுமாக மாற்றங்கள் செய்ய வேண்டியதுடன், புத்தம் புதிய பல்சருக்கான தருணமும் வந்துவிட்டது.

புதிய டிசைன், புதிய எஞ்சின்... கலக்க வரும் புதிய பஜாஜ் பல்சர் பைக்குகள் !

2020ம் ஆண்டில் புதிய மாசு உமிழ்வு விதிகள் வரும்போது, இந்த பல்சர் மாடல்கள் குறைவான மாசு உமிழ்வு தரத்துடன் வருவதுடன், புதிய பரிணாமத்தில் கொண்டு செல்வதற்கான வாய்ப்பை வழங்கும். புதிய மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். 2020ல் புதிய பல்சர் மற்றும் அவென்ஜர் மாடல்களை எதிர்பார்க்கலாம் ," என்று கூறினார்.

புதிய டிசைன், புதிய எஞ்சின்... கலக்க வரும் புதிய பஜாஜ் பல்சர் பைக்குகள் !

புதிய பல்சர் மாடல்களில் 4 வால்வு மற்றும் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட எஞ்சின் பயன்படுத்தப்படும். இதன் மூலமாக, பிஎஸ்- 6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும். புதிய எஞ்சின்கள் அதிக சக்தி மற்றும் மைலேஜை தரும் விதத்திலும், அதிர்வுகள் குறைவாக இருக்கும் வகையில் மேம்படுத்தப்படும்.

புதிய டிசைன், புதிய எஞ்சின்... கலக்க வரும் புதிய பஜாஜ் பல்சர் பைக்குகள் !

பல்சர் வரிசையில் 150 முதல் 200சிசி இடையில் மட்டுமே பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 125சிசி பல்சரை பலரும் விரும்புகின்றனர். ஆனால், அது எதிர்பார்க்கும் அளவுக்கு கவர்ச்சிகரமாக இருக்காது என்பதால் அந்த திட்டம் இல்லை என்று ராஜீவ் பஜாஜ் கூறியுள்ளார்.

புதிய டிசைன், புதிய எஞ்சின்... கலக்க வரும் புதிய பஜாஜ் பல்சர் பைக்குகள் !

இந்த பேட்டியின் மூலமாக, பஜாஜ் எல்எஸ் 135 பைக் விற்பனையிலிருந்து விலக்கப்படும் என்பதும், புதிய பல்சர் மாடல் வருவதும் உறுதியாகி இருக்கிறது. மேலும், பெர்ஃபார்மென்ஸ் ரக மோட்டார்சைக்கிள்களை குறைவான விலையில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் முனைப்பில் பஜாஜ் ஆட்டோ தீவிரமாக இறங்கி இருக்கிறது.

English summary
Bajaj Auto has stated that the company will launch an all-new Pulsar range in the market soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X