புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மெட்டல் பாடி கொண்ட இந்த ஸ்கூட்டரில், எல்இடி ஹெட்லைட் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் புதிய அம்சங்கள் மற்றும் விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவின் 125சிசி ரக ஸ்கூட்டர் மார்க்கெட்டில் முக்கிய தேர்வுகளில் ஒன்றாக ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் விளங்குகிறது. எனினும், மார்க்கெட்டில் அடுத்தடுத்து புதிய 125 சிசி ஸ்கூட்டர்களின் வரவு ஹோண்டா ஆக்டிவா 125 மாடலுக்கு அதிக நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த சூழலில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மெட்டல் பாடியுடன் வந்துள்ளது. புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் மிக முக்கிய அம்சமாக எல்இடி ஹெட்லைட் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

அதேபோன்று, புதிய டிஜிட்டல்- அனலாக் மானிகளுடன் புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. சர்வீஸ் ரிமைன்டர், Four-in-one லாக் சிஸ்டம் போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன. மொபைல் சார்ஜர் ஆப்ஷனலாக சேர்க்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

விலை உயர்ந்த மாடலில் க்ரோம் பூச்சுடன் கூடிய சைலென்சர் கவர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், சாம்பல் வண்ண அலாய் வீல்களும் புதிதாக பொருத்தப்பட்டு இருக்கின்றன. மேட் க்ரஸ்ட் மெட்டாலிக் மற்றும் மேட் செலின் சில்வர் என்ற இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் இருக்கும் 124.9சிசி ஏர்கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 8.52 பிஎச்பி பவரையும், 10.54 என்எம் டார்க் திறனையும் வழங்கும். முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் நடுத்தர வகை வேரியண்ட்டில் இரண்டு சக்கரங்களிலும் 130மிமீ விட்டமுடைய டிரம் பிரேக்குகள் உள்ளன. விலை உயர்ந்த மாடலின் முன்சக்கரத்தில் 190 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் உள்ளன. அனைத்து வேரியண்ட்டுகளிலும் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இருப்பது சிறப்பு.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். டிரம் பிரேக் மாடல் ரூ.59,621 எக்ஸ்ஷோரூம் விலையிலும், டிரம் பிரேக் மற்றும் அலாய் வீல்கள் பொருத்தப்பட்ட மாடல் ரூ.61,558 எக்ஸ்ஷோரூம் விலையிலும், விலை உயர்ந்த மாடல் ரூ.64,007 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 3, 2018, 14:13 [IST]
English summary
2018 Honda Activa 125 Launched In India: Honda has launched the 2018 Activa 125 in India with new features. The new Honda Activa 125 now gets LED headlight and other new features. The prices for the 2018 Honda Activa 125 start at Rs 59,621 ex-showroom (Delhi).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+