2018 ஹோண்டா ஆக்டிவா ஐ ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ஹோண்டா ஆக்டிவா ஐ ஸ்கூட்டர் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கருடன் புதுப்பொலிவு பெற்றிருக்கிறது. பாடி கலர்

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ஹோண்டா ஆக்டிவா ஐ ஸ்கூட்டர் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

2018 ஹோண்டா ஆக்டிவா ஐ ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!!

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் இருபாலருக்குமான மாடலாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், பெண் வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக சற்றே எடை குறைவான மாடலாக ஹோண்டா ஆக்டிவா ஐ ஸ்கூட்டர் மாடல் விற்பனை செய்யப்படுகிறது.

2018 ஹோண்டா ஆக்டிவா ஐ ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த நிலையில், சந்தைப் போட்டி காரணமாக, அனைத்து ஸ்கூட்டர் மாடல்களையும் புதுப்பொலிவு கொடுத்து வருகிறது ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம். அந்த வகையில், தற்போது கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய புதிய ஹோண்டா ஆக்டிவா ஐ ஸ்கூட்டர் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

2018 ஹோண்டா ஆக்டிவா ஐ ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய ஹோண்டா ஆக்டிவா ஐ ஸ்கூட்டர் தற்போது கேண்டி ஜாஸி புளூ, இம்பீரியல் ரெட் மெட்டாலிக், லஷ் மெஜெந்தா மெட்டாலிக், மேட் ஆக்சிஸ் க்ரே மெட்டாலிக் மற்றும் ஆர்சிட் பர்ப்புள் மெட்டாலிக் ஆகிய புதிய வண்ணங்களில் வந்துள்ளது.

2018 ஹோண்டா ஆக்டிவா ஐ ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய ஹோண்டா ஆக்டிவா ஐ ஸ்கூட்டர் தற்போது இரட்டை வண்ணக் கலவையில் வந்துள்ளது. மேலும், புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் மூலமாக புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது. மெட்டாலிக் மஃப்ளர் புரொடெக்டர் அமைப்பு, ஆக்டிவா 110 மாடலில் வந்தது போலவே, 4-1 லாக் சிஸ்டம் ஆகியவை கூடுதல் சிறப்பம்சங்களாக இப்போது கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

2018 ஹோண்டா ஆக்டிவா ஐ ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய ஹோண்டா ஆக்டிவா ஐ ஸ்கூட்டரில் பாடி கலர் மிரர்கள், டைனமிக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் , 18 லிட்டர் கொள்திறன் கொண்ட ஸ்டோரேஜ் இடவசதி, மொபைல் சார்ஜர் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

2018 ஹோண்டா ஆக்டிவா ஐ ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய ஹோண்டா ஆக்டிவா ஐ ஸ்கூட்டரில் 109.19சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 8.94 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த ஸ்கூட்டரில் 10 அங்குல சக்கரங்கள் மற்றும் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

2018 ஹோண்டா ஆக்டிவா ஐ ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!!

இரண்டு சக்கரங்களிலும் 130மிமீ டிரம் பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் முன்புறம் மற்றும் பின்புறத்தில் ஸ்பிரிங் அமைப்புடன் கூடிய ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் இடம்பெற்றுள்ளது.

2018 ஹோண்டா ஆக்டிவா ஐ ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய ஹோண்டா ஆக்டிவா ஐ ஸ்கூட்டர் ரூ.50,010 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த செக்மென்ட்டில் கொடுக்கும் விலைக்கு மதிப்பு மிக்க மாடலாக கருத முடியும்.

2018 ஹோண்டா ஆக்டிவா ஐ ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய ஹோண்டா ஆக்டிவா ஐ ஸ்கூட்டர் பார்ப்பதற்கு கச்சிதமாகவும், இலகு எடை கொண்டதாகவும் வந்துள்ளது. இதனால், இளம் பெண்கள் எளிதாக கையாள முடியும். டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்ட், ஹீரோ ப்ளஷர், சுஸுகி லெட்ஸ் மற்றும் யமஹா ரே இசட் ஆகிய ஸ்கூட்டர் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 24, 2018, 13:06 [IST]
English summary
Honda Motorcycles and Scooters India (HMSI) has launched the 2018 Activa-i. The new Honda Activa-i is priced at Rs 50,010, ex-showroom (Delhi). The new scooter comes with minor cosmetic updates, along with additional features.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+