2018 ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி, லிவோ மற்றும் ட்ரீம் யுகா பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்!
புதிய ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி, லிவோ மற்றும் ட்ரீம் யுகா பைக் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.
புதுப்பொலிவுடன் ஹோண்டா சிபி ஷைன், லிவோ மற்றும் ட்ரீம் யுகா பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த மாதம் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் ஹோண்டா நிறுவனம் புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட புதிய சிபி ஷைன் எஸ்பி, லிவோ மற்றும் ட்ரீம் யுகா பைக் மாடல்களை பார்வைக்கு கொண்டு வந்தது.

இந்த பைக்குகள் புதிய வண்ணக் கலவையிலும், கூடுதல் தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த மூன்று பைக்குகளும் மெருக்கேற்றப்பட்டு இருந்தன. இந்த நிலையில், இந்த மூன்று பைக் மாடல்களின் விலை விபரம் வெளியிடப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி பைக் ரூ.62,032 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அதேபோன்று, லிவோ பைக் ரூ.56,230 விலையிலும், ட்ரீம் யுகா பைக் ரூ.52,741 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

புதிய ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி
புதிய ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி பைக் பெட்ரோல் டேங்க் கவுல்கள் மற்றும் புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கருடன் வந்துள்ளது. புதிய டிஜிட்டல்- அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. சர்வீஸ் ரீமைன்டர், கடிகாரம் மற்றும் அதிக தரமுடைய செயின் போன்றவை முக்கிய மாற்றங்களாக இருக்கின்றன.

புதிய ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி பைக்கில் 124.7சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 10.16 பிஎச்பி பவரையும், 10.30 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி பைக் பியர்ல் சைரென் புளூ, கெனி க்ரே மெட்டாலிக், பிளாக், அத்லெட்டிக் புளூ மெட்டாலிக் மற்றும் இம்பீரியல் ரெட் மெட்டாலிக் ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கும். டிரம் பிரேக், டிஸ்க் பிரேக் மற்றும் காம்பி பிரேக் சிஸ்டம் கொண்ட மூன்று மாடல்களில் கிடைக்கும்.

புதிய 2018 ஹோண்டா லிவோ பைக் புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கருடன் வந்துள்ளது. இந்த பைக்கிலும் புதிய டிஜிட்டல்- அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. சர்வீஸ் ரிமைன்டர், அதிக தரமுடைய செயின் உள்ளிட்டவை முக்கிய அம்சங்கள்.

ஹோண்டா லிவோ பைக்கில் 109.19சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.31 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த பைக்கில் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. கருப்பு, நீலம், பழுப்பு, சாம்பல் மற்றும் சிவப்பு வண்ணங்களில் கிடைக்கும். டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் மாடல்களில் வந்துள்ளது.

புதிய ஹோண்டா ட்ரீம் யுகா பைக்கில் புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பாடி கலர் ரியர் வியூ மிரர்கள், விசேஷ டயர்களுடன் வந்துள்ளது. இந்த பைக்கில் சன்செட் பிரவுன் மெட்டாலிக் பிளாக் என்ற புதிய வண்ணம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் 5 வண்ணங்களில் கிடைக்கும்.

புதிய ஹோண்டா ட்ரீம் யுகா பைக்கில் 110சிசி ஏர்கூல்டு எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.25பிஎச்பி பவரையும், 8.63 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








