2018 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட ஹோண்டா டியோ ஸ்கூட்டர் 4 புதிய வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. டேஸில் யெல்லோ மெட்டாலிக், மேட் ஆக்சிஸ் மெட்டாலிக், மெட்டாலிக் மார்ஷல் க்ரீன் மெட்டாலிக் மற்றும் பியர்ல்

By Saravana Rajan

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

2018 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட ஹோண்டா டியோ ஸ்கூட்டர் 4 புதிய வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. டேஸில் யெல்லோ மெட்டாலிக், மேட் ஆக்சிஸ் மெட்டாலிக், மெட்டாலிக் மார்ஷல் க்ரீன் மெட்டாலிக் மற்றும் பியர்ல் இக்னியஸ் பிளாக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

2018 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இப்போது ஹோண்டா டியோ ஸ்கூட்டர் புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கரில் கவர்ச்சிகரமாக மாற்றப்பட்டுள்ளது. ரிம்களில் தங்க வண்ணப் பூச்சும், கிராப் ரெயில் கைப்பிடிகள் இப்போது பாடி கலரிலும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

2018 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

முக்கிய அம்சமாக புதிய ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் இல்டி பொசிஷன் விளக்குகள் மற்றும் எல்இடி பகல்நேர விளக்குகள் இடம்பெற்றுள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் எரிபொருள் சிக்கனத்தை குறிக்கும் விதத்தில் ஈக்கோ ஸ்பீடு இண்டிகேட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

2018 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இருக்கையை திறக்கும் வசதி உள்பட 4-1 லாக் சிஸ்டம், மொபைல் சார்ஜர், முன்புறத்தில் பைகள் மாட்டுவதற்கான புதிய ஊக்கு அமைப்பு ஆகியவை கூடுதல் சிறப்பம்சங்களாக தெரிகிறது.

2018 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் ட்யூப்லெஸ் டயர்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு சக்கரங்களின் பிரேக் திறனையும் ஒருங்கிணைத்து தரும் சிபிஎஸ் பிரேக்கிங் நுட்பமும் உள்ளது. டிஸ்க் பிரேக் இல்லாதது குறை.

2018 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

எஞ்சினில் மாற்றம் இல்லை. இந்த ஸ்கூட்டரில் இருக்கும் 109.19சிசி ஏர்கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 8.91 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். வி-மேட்டிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 83 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

2018 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் பேஸ் வேரியண்ட் ரூ.50,296 எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஸ்டான்டர்டு வேரியண்ட் ரூ.51,292 எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். அதிகபட்ச வசதிகள் கொண்ட டியோ டீலக்ஸ் வேரியண்ட் ரூ.53,292 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

2018 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

அண்மையில் வந்த ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் போன்றே இந்த புதிய டியோ ஸ்கூட்டரும் எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் புதிய வண்ணங்களில் வந்துள்ளது. யமஹா ரே இசட் உள்ளிட்ட ஸ்கூட்டர் மாடல்களுடன் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 8, 2018, 10:15 [IST]
English summary
2018 Honda Dio Launched In India. Honda has launched the new 2018 Dio in the country with several updates. The 2018 Honda Dio now comes with new colours and new features. The prices for the 2018 Honda Dio start at Rs 50,296 ex-showroom (Delhi).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+