2018 ஜாவா 350 ஸ்பெஷல் மோட்டார்சைக்கிள் ஐரோப்பாவில் அறிமுகம்!!

ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஜாவா 350 OHC மற்றும் 660 விண்டேஜ் ஆகிய மாடல்களை ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. தற்போது மூன்றாவது மாடலாக ஜாவா 350 ஸ்பெஷல் அறிமுகமாகி இருக்கிறது.

By Saravana Rajan

கடந்த 2016ம் ஆண்டு கிளாசிக் லெஜென்ட்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை மஹிந்திரா நிறுபவனம் கையகப்படுத்தியது. இதனையடுத்து, பிஎஸ்ஏ மற்றும் செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஜாவா நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தயாரித்து விற்பனை செய்வதற்கான உரிமத்தை மஹிந்திரா பெற்றது.

2018 ஜாவா 350 ஸ்பெஷல் மோட்டார்சைக்கிள் ஐரோப்பாவில் அறிமுகம்!!

இந்த நிலையில், வரும் ஜூலை மாதம் ஜாவா மோட்டார்சைக்கிள்களின் உற்பத்திப் பணிகள் இந்தியாவில் துவங்க இருக்கின்றன. இதனிடையே, ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்வதற்கான புதிய ஜாவா 350 ஸ்பெஷல் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

2018 ஜாவா 350 ஸ்பெஷல் மோட்டார்சைக்கிள் ஐரோப்பாவில் அறிமுகம்!!

ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஜாவா 350 OHC மற்றும் 660 விண்டேஜ் ஆகிய மாடல்களை ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. தற்போது மூன்றாவது மாடலாக ஜாவா 350 ஸ்பெஷல் அறிமுகமாகி இருக்கிறது. இந்த புதிய மாடல் பல்வேறு தனித்துவ டிசைன் அம்சங்களை பெற்றிருக்கிறது.

2018 ஜாவா 350 ஸ்பெஷல் மோட்டார்சைக்கிள் ஐரோப்பாவில் அறிமுகம்!!

பழமையான டிசைன் தாத்பரியங்கள் ஏராளமாக கையாளப்பட்டுள்ளன. பிரம்மாண்ட தோற்றத்தை தரும் பெரிய ஃபேரிங் பேனல்கள், வட்ட வடிவ ஹெட்லைட், கஃபே ரேஸர் ஸ்டைலில் ஹேண்டில்பார் அமைப்பு ஆகியவற்றுடன் ஏராளமான க்ரோம் பாகங்களுடன் ஜொலிக்கிறது.

2018 ஜாவா 350 ஸ்பெஷல் மோட்டார்சைக்கிள் ஐரோப்பாவில் அறிமுகம்!!

இந்த மோட்டார்சைக்கிளில் 397சிசி பேரலல் ட்வின் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.அதிகபட்சமாக27.6 பிஎச்பி பவரையும் 30.6 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஜாவா 350 OHC மாடலில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின்தான் இதிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சீனாவை சேர்ந்த நிறுவனம் தயாரிக்கும் இந்த எஞ்சினில், டெல்பி நிறுவனத்தின் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் உள்ளது.

2018 ஜாவா 350 ஸ்பெஷல் மோட்டார்சைக்கிள் ஐரோப்பாவில் அறிமுகம்!!

புதிய ஜாவா 350 ஸ்பெஷல் மோட்டார்சைக்கிள் 171 கிலோ எடை கொாண்டது. ஜாவா 350 OHC மோட்டார்சைக்கிளைவிட 11 கிலோ கூடுதல் எடை கொண்டதாக இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் 17 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது. யூரோ-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

2018 ஜாவா 350 ஸ்பெஷல் மோட்டார்சைக்கிள் ஐரோப்பாவில் அறிமுகம்!!

ஜாவா 350 OHC மற்றும் ஜாவா 660 விண்டேஜ் மோட்டார்சைக்கிள் மாடல்களை மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் வாய்ப்புள்ளன. ஆனால், புதிய ஜாவா 350 ஸ்பெஷல் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது குறித்து இப்போதைக்கு எந்த தகவலும் இல்லை.

2018 ஜாவா 350 ஸ்பெஷல் மோட்டார்சைக்கிள் ஐரோப்பாவில் அறிமுகம்!!

மோஜோ பைக்கின் அடிப்படையில் புதிய ஜாவா மோட்டார்சைக்கிளையும் அறிமுமகம் செய்ய மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது பழமையும், பாரம்பரியமும் மிக்க டிசைன் அம்சங்களை பெற்றிருக்கும்.

2018 ஜாவா 350 ஸ்பெஷல் மோட்டார்சைக்கிள் ஐரோப்பாவில் அறிமுகம்!!

வழக்கம்போல் ஜாவா 350 ஸ்பெஷல் மோட்டார்சைக்கிளும் ஜாவா நிறுவனத்தின் பாரம்பரியத்தை பரைசாற்றும் விதத்தில் தனித்துவமான டிசைன் அம்சங்களுடன் வசீகரிக்கிறது. நிச்சயம் தனித்துவமான மோட்டார்சைக்கிள்களை விரும்பும் ஐரோப்பிய வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும்.

Most Read Articles
English summary
In 2016, Mahindra purchased 60 percent stake in Classic Legends Private Limited, which owns BSA and also has an exclusive license agreement with Jawa for India and other countries. Now, the Czech company has revealed the Jawa 350 Special in Europe.
Story first published: Wednesday, May 9, 2018, 9:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X