புல்லட் சாயலில் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்... உதறலில் ராயல் என்ஃபீல்டு!

புதிய ஜாவா மோட்டார்சைக்கிள் ஒன்றின் படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளின் தோற்றத்தை பிரதிபலிக்கும் விதத்திலும், நேர் போட்டியாகவும் இருக்கும் என்பதை இந்த ப

புதிய ஜாவா மோட்டார்சைக்கிள் ஒன்றின் படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளின் தோற்றத்தை பிரதிபலிக்கும் விதத்திலும், நேர் போட்டியாகவும் இருக்கும் என்பதை இந்த படம் மூலமாக உணர முடிகிறது.

புல்லட் சாயலில் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்... உதறலில் ராயல் என்ஃபீல்டு!

புதிய ஜாவா மோட்டார்சைக்கிள் ஒன்றின் படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளின் தோற்றத்தை பிரதிபலிக்கும் விதத்திலும், நேர் போட்டியாகவும் இருக்கும் என்பதை இந்த படம் மூலமாக உணர முடிகிறது.

புல்லட் சாயலில் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்... உதறலில் ராயல் என்ஃபீல்டு!

இந்தியர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்கள் மீண்டும் களமிறங்க இருக்கின்றன. புதுப்பொலிவுடன், நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் வர இருப்பதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

புல்லட் சாயலில் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்... உதறலில் ராயல் என்ஃபீல்டு!

வரும் 15ந் தேதி ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்களை மஹிந்திராவின் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. கடைசியாக கிடைத்த தகவல்களின்படி, ஜாவா பிராண்டில் மொத்தம் 4 புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் வர இருப்பதாக தெரிகிறது.

புல்லட் சாயலில் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்... உதறலில் ராயல் என்ஃபீல்டு!

இந்த சூழலில், பாண்டிச்சேரியில் போட்டோ ஷூட்டிற்காக கொண்டு வரப்பட்ட ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல் ஒன்றை ஒருவர் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இது வைரலாக பரவி வருகிறது.

புல்லட் சாயலில் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்... உதறலில் ராயல் என்ஃபீல்டு!

இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் மாடலாக இருக்கும் என்று நம்பலாம். சட்டென பார்க்கும்போது, இது ராயல் என்ஃபீல்டு புல்லட்டின் சாயலை பெற்றிருப்பதால், ஜாவா மோட்டார்சைக்கிள் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

புல்லட் சாயலில் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்... உதறலில் ராயல் என்ஃபீல்டு!

ஹெட்லைட், பெட்ரோல் டேங்க், எஞ்சின் அமைப்பு, மட்கார்டு உள்ளிட்டவை ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளின் சாயலையே பெற்றிருக்கின்றன. எனினும், இருக்கை அமைப்பும், பின்புற மட்கார்டும் மட்டுமே ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு உரிய தனித்துவத்தை பெற்றிருக்கின்றன.

புல்லட் சாயலில் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்... உதறலில் ராயல் என்ஃபீல்டு!

மேலும், பின்புற மட்கார்டு டிசைன் மோட்டார்சைக்கிளுக்கு பொருத்தம் இல்லாமல் பெரிதாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனை ஜாவா நிறுவனம் சரிசெய்து வெளியிடும் என்றும் சிலர் எதிர்பார்ப்பை சமூக வலைதளங்களில் ஆதங்கத்தை கொட்டியுள்ளனர்.

புல்லட் சாயலில் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்... உதறலில் ராயல் என்ஃபீல்டு!

இந்த மோட்டார்சைக்கிளில் ஸ்போக்ஸ் வீல், பெட்ரோல் டேங்கில் ஜாவா நிறுவனத்தின் பிராண்டு முத்திரை, பிரேக் சிஸ்டம், கைப்பிடிகள் மற்றும் டெயில் லைட் க்ளஸ்ட்டர் ஆகியவை பழைய ஜாவா மோட்டார்சைக்கிள்களை பிரதிபலிக்கும் விதத்தில், மாற்றம் அதிகம் இல்லாமல் கொடுக்கப்பட்டு இருப்பது முக்கிய சிறப்பம்சங்களாக பார்க்கப்படுகிறது.

புல்லட் சாயலில் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்... உதறலில் ராயல் என்ஃபீல்டு!

இந்த மோட்டார்சைக்கிளில் அண்மையில் ஜாவா நிறுவனம் வெளியிட்ட 293சிசி எஞ்சின் இடம்பெற்றிருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், இது பழைய ஜாவா மோட்டார்சைக்கிள்கள் போன்றே, இரட்டை குழல் சைலென்சர்களுடன் வர இருக்கிறது.

புல்லட் சாயலில் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்... உதறலில் ராயல் என்ஃபீல்டு!

இந்த மோட்டார்சைக்கிளின் 293சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கும். ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் இடம்பெற்றிருப்பதால், இது நவீன யுக எஞ்சினாக கூற முடியும். அத்துடன் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதும் என்பதும் இதன் முக்கிய சிறப்பு.

புல்லட் சாயலில் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்... உதறலில் ராயல் என்ஃபீல்டு!

இந்த எஞ்சின் நடுத்தர நிலையில், மிகச் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கும். அத்துடன், 2 ஸ்ட்ரோக் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் போன்றே, தனித்துவமான புகைப்போக்கி சப்தத்தையும் பெற்றிருக்கும் என்பதும் ஜாவா பிரியர்களின் ஆவலை அதிகரிக்கச் செய்துள்ளது.

Article Published On: Tuesday, November 6, 2018, 11:00 [IST]
English summary
Jawa Motorcycle 2018 Image Leaked: The image of a new 2018 Jawa motorcycle has been leaked ahead of its official unveiling on November 15. The leaked Jawa motorcycle image shows a retro-looking design with lots of chrome and design details inspired by the original Jawa models.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+