ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு டீலர்களில் ரகசிய புக்கிங்!

ஜாவா மோட்டார்சைக்கிள்களை முன்பதிவு செய்வதற்கான முஸ்தீபுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அவர்களுக்காக சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள மஹிந்திரா டீலர்களை தொடர்பு கொண்டு பேசினோம்.

ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு சில டீலர்களில் ரகசிய முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து டீலர்களை தொடர்பு கொண்டு கேட்டறிந்த தகவல்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு டீலர்களில் ரகசிய புக்கிங்!

பாரம்பரியம் மிக்க ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்கள் மஹிந்திராவின் கீழ் செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் மூலமாக மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், வரும் 15ந் தேதி புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்கள் அறிமுகமாக இருக்கின்றன.

ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு டீலர்களில் ரகசிய புக்கிங்!

இந்த நிலையில், ஜாவா மோட்டார்சைக்கிள்களை முன்பதிவு செய்வதற்கான முஸ்தீபுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அவர்களின் ஆவலுக்கு தீர்வு காணும் விதத்தில், சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள டீலர்களை தொடர்பு கொண்டு பேசினோம்.

ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு டீலர்களில் ரகசிய புக்கிங்!

அதில், சில டீலர்களில் ஏட்டளவில் ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு முன்பதிவு செய்வதாக கூறினர். சில டீலர்களில் ரூ.1,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்யப்படுவதாக தெரிவித்தனர். சில டீலர்களில் டிசம்பரில்தான் நிறுவனத்திடமிருந்து முறையான அறிவிப்பு வர இருக்கிறது. அதன் பின்னரே முன்பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு டீலர்களில் ரகசிய புக்கிங்!

பெருநகரங்களில் மஹிந்திரா இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் மெயின் டீலர்களிடம் ஜாவா மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட இருப்பதாக தெரிகிறது. ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கான பிரத்யேக ஷோரூம்களையும் மஹிந்திரா டீலர்கள் திறக்க இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு டீலர்களில் ரகசிய புக்கிங்!

1970 மற்றும் 80களில் 2 ஸ்ட்ரோக் மோட்டார்சைக்கிள் காலத்தில் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் இந்தியர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் மாடலாக இருந்தன. இந்த நிலையில், வர்த்தகம் பொய்த்து போய் வெளியேறிய ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனத்திடமிருந்து விற்பனை உரிமம் பெற்றுள்ள மஹிந்திரா குழுமம், ஜாவா மாடல்களை மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு டீலர்களில் ரகசிய புக்கிங்!

ஜாவா பிராண்டில் 300சிசி மாடல்கள் இந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படுகின்றன. அதேபோன்று, ஜாவா 350 என்ற மோட்டார்சைக்கிள் மாடலும் வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 4 புதிய மாடல்களுடன் மஹிந்திரா நிறுவனம் விற்பனையை துவங்க இருப்பதாக தெரிகிறது.

ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு டீலர்களில் ரகசிய புக்கிங்!

புதிய ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்கள் ரூ.1.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை கொண்டதாக இருக்கும் என்பதும் டீலர் வட்டாரங்கள் மூலமாக தெரிய வருகிறது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடலை குறிவைத்து வர்த்தகத்தை துவங்க இருக்கிறது ஜாவா மாடல்களை களமிறக்கும் மஹிந்திரா கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம்.

Article Published On: Friday, November 9, 2018, 13:48 [IST]
English summary
New Jawa Motorcycles booking details for India have been revealed. We have learnt that some dealers of Jawa Motorcycles India have taken bookings (unofficially) for new models at Rs 1000. As fans and motorcycle enthusiasts are eagerly waiting to get their hands on one, here are some things you should know.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+