2019 கவாஸாகி நின்ஜா எச்2 சூப்பர் பைக் விற்பனைக்கு அறிமுகம்!!
2019 கவாஸாகி நின்ஜா எச்2 சூப்பர் பைக் மூன்று மாடல்களில் வந்துள்ளது. 2019 கவாஸாகி நின்ஜா எச்2, எச்2 கார்பன் மற்றும் எச்2ஆர் ஆகிய மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட 2019 கவாஸாகி நின்ஜா எச்2 சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய சூப்பர் பைக் மாடல் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

2019 கவாஸாகி நின்ஜா எச்2 சூப்பர் பைக் மூன்று மாடல்களில் வந்துள்ளது. 2019 கவாஸாகி நின்ஜா எச்2, எச்2 கார்பன் மற்றும் எச்2ஆர் ஆகிய மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 2019 கவாஸாகி நின்ஜா எச்2 பைக்கில் முக்கிய மாற்றமாக, அதிக சக்தியை வெளிப்படுத்தும் விதத்தில் எஞ்சின் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த பைக்கில் இருக்கும் 4 சிலிண்டர்கள் கொண்ட 998சிசசி லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 227 பிஎச்பி பவரையும்,141.7 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பழைய மாடலைவிட எஞ்சின் சக்தி 20 பிஎச்பி அளவுக்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

2019 கவாஸாகி நின்ஜா எச்2 பைக்கில் புதிய டிஎஃப்டி கலர் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போனை இணைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. இதற்காக விசேஷ மொபைல் செயலியையும் கவாஸாகி நிறுவனம் வழங்குகிறது.

புதிய கவாஸாகி நின்ஜா எச்2 பைக்கில் பிரெம்போ நிறுவனத்தின் ஸ்டைல்மா மோனோபிளாக் காலிபர்கள் கொண்ட பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது அடக்கமாக டிசைன் செய்யப்ப்ட்டு இருப்பதுடன், பிரேக் செயல்திறனை மேம்படுத்தும்.

2019 கவாஸாகி நின்ஜா எச்2 பைக்கில் விசேஷ வண்ணப்பூச்சு கொடுக்கப்பட்டு இருக்கிறது. கீறல்கள் விழுந்தால் தானாகவே சரிசெய்து கொள்ளும் சிறப்பம்சத்தை இந்த வண்ணம் அளிக்கிறது. புதிய கவாஸாகி நின்ஜா எச்2 பைக்கில் எல்இடி ஹெட்லைட், டெயில் லைட், டர்ன் இன்டிகேட்டர்கள் மற்றும் பொசிஷன் லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

அடுத்து 2019 கவாஸாகி நின்ஜா எச்2ஆர் பைக்கில் பிரெம்போ ஸ்டைல்மா மோனோபிளாக் காலிபர்களில் புதிய சூப்பர்சார்ஜ்டு என்ற முத்திரை கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோன்றேு, விசேஷ வண்ண பூச்சும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

2019 கவாஸாகி நின்ஜா எச்2 பைக் ரூ.34.50 லட்சம் விலையிலும், நின்ஜா எச்2 கார்பன் பைக் ரூ.41 லட்சம் விலையிலும், நின்ஜா எச்2ஆர் பைக் ரூ.71 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். மூன்று பைக் மாடல்களும் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

வரும் செப்டம்பர் 1 முதல் இந்த புதிய கவாஸாகி நின்ஜா எச்2 பைக் மாடல்களுக்கு முன்பதிவு துவங்கப்பட இருக்கிறது. அக்டோபர் 31ந் தேதி முன்பதிவு நிறைவுபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மூன்று மாடல்களிலுமே அதிக சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அதிக பவரை அளிக்கும் விதத்தில் எஞ்சின் மாறுதல் செய்யப்பட்டிருப்பதே முக்கிய மாற்றமாக கூறலாம்.


Click it and Unblock the Notifications








