புதுப்பொலிவுடன் கவாஸாகி இசட்650 பைக் விற்பனைக்கு அறிமுகம்!
வாடிக்கையாளர்களை கவரும் வகையில், புதுப்பொலிவு கொடுத்து பைக் மாடல்களை களமிறக்கி வருகிறது கவாஸாகி நிறுவனம். அண்மையில் கவாஸாகி வெர்சிஸ் 650 மற்றும் இசட்900 பைக் மாடல்கள் புதுப்பொலிவுடன் வந்தன. இதைத்தெ
புதுப்பொலிவுடன் கவாஸாகி இசட்650 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட முக்கிய விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

வாடிக்கையாளர்களை கவரும் வகையில், புதுப்பொலிவு கொடுத்து பைக் மாடல்களை களமிறக்கி வருகிறது கவாஸாகி நிறுவனம். அண்மையில் கவாஸாகி வெர்சிஸ் 650 மற்றும் இசட்900 பைக் மாடல்கள் புதுப்பொலிவுடன் வந்தன. இதைத்தொடர்ந்து, தற்போது 2019 மாடலாக புதிய கவாஸாகி இசட்650 பைக்கும் புதுப்பொலிவு பெற்று சந்தைக்கு வந்துள்ளது.

புதிய கவாஸாகி இசட்650 பைக்கில் புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்களுடன் மாற்றம் கண்டுள்ளது. இந்த புதிய மாடல் மெட்டாலிக் ஃப்ளாட் ஸ்பார்க் பிளாக் / மெட்டாலி் ஸ்பார்க் பிளாக் என்ற வண்ணக் கலவையில் வந்துள்ளது. புதிய வண்ணக் கலவை தவிர்த்து டிசைனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

கடந்த ஆண்டு கவாஸாகி ER-6n பைக்கிற்கு மாற்றாக இந்த கவாஸாகி இசட்650 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சுகோமி டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக் மிக மிரட்டலான டிசைனில் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. கவாஸாகி இசட்900 மற்றும் இசட்1000 ஆகிய மாடல்களின் டிசைன் தாத்பரியங்களும் கையாளப்பட்டிருக்கும் இந்த பைக்கின் சாஸி மிக சிறந்த கையாளுமையை வழங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய மாடலின் எஞ்சினில் கூட எந்த மாற்றமும் இல்லை. இந்த பைக்கில் இருக்கும் பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய 649சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 68 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பைக்கில் முன்புறத்தில் 41 மிமீ நீளமுடைய டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. முன்சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது.

இந்த புதிய மாடல் அறிமுகம் குறித்து கவாஸாகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் யுடகா யமஷிட்டா கூறுகையில்," இந்த பண்டிகை காலத்தையொட்டி, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தேர்வை அளிக்கும் விதத்தில் தொடர்ந்து பைக்குகளை புதுப்பொலிவு கொடுத்து அறிமுகம் செய்து வருகிறோம்.

இந்த இசட்650 பைக்கும் எங்களது சிறந்த பைக் மாடல்களில் ஒன்று. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள், பந்தய களங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்கள் என அனைத்திற்கும் மிகச் சிறந்த பயன்பாட்டை அளிக்கும் மாடலாக இருக்கும்," என்று கூறினார்.

ரூ.5.29 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. நடுத்தர வகை செயல்திறன் மிக்க பைக் மார்க்கெட்டில் புப்பொலிவுடன் வந்திருக்கும் புதிய கவாஸாகி இசட் 650 பைக் வழக்கம்போல் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். பெனெல்லி டிஎன்டி 600ஐ மற்றும் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மாடல்களுக்கு விலை அடிப்படையில் போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications