இந்திய வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் ராயல் என்பீல்டு.. மத்திய அரசு கேள்வி எழுப்புமா?

மத்திய அரசு விதித்த காலக்கெடு நெருங்கி வரும் சூழலில், இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ராயல் என்பீல்டு நிறுவனம் தொடர்ந்து ஓரவஞ்சனை செய்து வருகிறது.

மத்திய அரசு விதித்த காலக்கெடு நெருங்கி வரும் சூழலில், இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ராயல் என்பீல்டு நிறுவனம் தொடர்ந்து ஓரவஞ்சனை செய்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் ராயல் என்பீல்டு..

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதன்மையான தயாரிப்புகளில் ஒன்று கிளாசிக் 350. இந்தியாவில் கிளாசிக் 350 பைக்குகளின் விற்பனை கொடி கட்டி பறக்கிறது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும், 44,054 கிளாசிக் 350 பைக்குகளை, ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

இந்திய வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் ராயல் என்பீல்டு..

இதன்மூலம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் பிரீமியம் செக்மெண்ட் பைக் என்ற பெருமையை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பெறுகிறது. கிளாசிக் 350 பைக்கின் அனைத்து வேரியண்ட்களிலும் முன்னும், பின்னும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்திய வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் ராயல் என்பீல்டு..

ஆனால் கிளாசிக் 350 பைக்கின் பேஸ் வேரியண்ட்டின் (ஸ்டாண்டர்டு) பின்பகுதியில் ட்ரம் ப்ரேக் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்த சூழலில், ரியர் டிஸ்க் பிரேக் (Rear Disc Brake) உடன் கூடிய கிளாசிக் 350 பைக்கின் பேஸ் வேரியண்ட்டை ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.

இந்திய வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் ராயல் என்பீல்டு..

இதன்மூலம் இதர வேரியண்ட்களை போல் கிளாசிக் 350 பைக்கின் பேஸ் வேரியண்ட்டும் தற்போது பின் பகுதியில் டிஸ்க் பிரேக்கை பெற்றுள்ளது. கிளாசிக் 350 பைக்கின் பேஸ் வேரியண்ட்டின் முன் பகுதியில் ஏற்கனவே டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் ராயல் என்பீல்டு..

இதன் மும்பை எக்ஸ் ஷோரூம் விலை 1.47 லட்ச ரூபாய். எனினும் மிக முக்கிய பாதுகாப்பு அம்சமான ஏபிஎஸ் எனப்படும் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (Anti-lock braking system) வழங்கப்படாதது வாடிக்கையாளர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

இந்திய வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் ராயல் என்பீல்டு..

ராயல் என்பீல்டு நிறுவனமானது வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் பைக்குகளில் ஏபிஎஸ் வசதியை வழங்கி வருகிறது. ஆனால் இந்தியாவில் விற்பனையாகும் ராயல் என்பீல்டு பைக்குகளில் ஏபிஎஸ் வசதி வழங்கப்படுவது கிடையாது.

இந்திய வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் ராயல் என்பீல்டு..

இந்த குறையை போக்கும் விதமாக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன். இந்த பைக்கில் டியூயல் சேனல் ஏபிஎஸ் வசதி வழங்கப்பட்டிருந்தது. இந்தியாவில் ஏபிஎஸ் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ராயல் என்பீல்டு பைக் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் ராயல் என்பீல்டு..

எனினும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து ராயல் என்பீல்டு பைக்குகளிலும், இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக ஏபிஎஸ் வசதி வழங்கப்பட்டு விடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசின் உத்தரவானது, அதற்கு வழிவகை செய்துள்ளது.

இந்திய வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் ராயல் என்பீல்டு..

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 125 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட அனைத்து பைக்குகளிலும், ஏபிஎஸ் வசதி கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் என பைக் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவானது, 2019ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலாகிறது.

இந்திய வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் ராயல் என்பீல்டு..

எனவேதான் இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக அனைத்து ராயல் என்பீல்டு பைக்குகளும் ஏபிஎஸ் வசதியை பெற்றுவிடும் என கூறப்படுகிறது. ஆனால் இதன் காரணமாக ராயல் என்பீல்டு பைக்குகளின் விலை சற்று அதிகரிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் ராயல் என்பீல்டு..

முன்னதாக ரியர் டிஸ்க் பிரேக் தவிர, கிளாசிக் 350 பைக்கின் பேஸ் வேரியண்ட்டில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. அதே 346 சிசி, ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜினில் இருந்துதான், இந்த பைக் பவரை பெறுகிறது.

இந்திய வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் ராயல் என்பீல்டு..

இந்த இன்ஜின் அதிகபட்சமாக, 19.8 பிஎச்பி பவர் மற்றும் 28 என்எம் டார்க் திறனை வழங்கவல்லது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இந்த இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. கிளாசிக் 350 பைக்கின் பேஸ் வேரியண்ட்டில், ராயல் என்பீல்டு நிறுவனம் ஒரு வழியாக ரியர் டிஸ்க் பிரேக்கை வழங்கியுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் ராயல் என்பீல்டு..

முந்தைய ட்ரம் பிரேக் உடன் ஒப்பிடுகையில், தற்போது ரியர் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளதால், இந்த பைக்கின் ஒட்டுமொத்த பிரேக்கிங் பெர்ஃபார்மென்ஸ் மேம்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த அப்டேட்டில், ஏபிஎஸ் வசதி வழங்கப்படாதது வாடிக்கையாளர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது என்பதையும் மறுக்க முடியாது.

Most Read Articles

ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் பைக்கின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம். ஏபிஎஸ் வசதியுடன் இந்தியாவில் அறிமுகமான முதல் ராயல் என்பீல்டு பைக் இதுதான்.

English summary
New Royal Enfield Classic 350 Base Variant with Rear Disc Brake Launched. Read in Tamil
Story first published: Saturday, September 22, 2018, 12:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X