கூடுதல் சிறப்பம்சங்களுடன் சுஸுகி ஜிக்ஸெர் எஸ்பி மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் எஸ்பி பைக்குகள்!!

கூடுதல் சிறப்பம்சங்களுடடன் சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகளின் எஸ்பி மாடல்கள் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய மாடல்களில் மெஜெஸ்டிக் கோல்டு மற்றும் கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் என்ற தங்க- கருப்பு வண

By Saravana Rajan

கூடுதல் சிறப்பம்சங்களுடன் சுஸுகி ஜிக்ஸெர் பைக்கின் புதிய மாடல்கள் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இளைஞர்களின் மனம் கவர்ந்த சுஸுகி ஜிக்ஸெர் பைக்கின் புதிய மாடல்கள் குறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் சுஸுகி ஜிக்ஸெர் எஸ்பி மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் எஸ்பி பைக்குகள்!!

சுஸுகி ஜிக்ஸெர் பைக் இந்திய இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற மாடல்களாக விளங்குகின்றன. சுஸுகி ஜிக்ஸெர் பைக் நேக்கட் மாடலாகவும், ஜிக்ஸெர் எஸ்எஃப் என்ற முழுவதுமான ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்ட ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் சுஸுகி ஜிக்ஸெர் எஸ்பி மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் எஸ்பி பைக்குகள்!!

இந்த நிலையில், சந்தைப்போட்டி அதிகரித்துள்ளதால், கூடுதல் சிறப்பம்சங்களுடடன் சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகளின் எஸ்பி மாடல்கள் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 2018 மாடலாக வெளிவந்திருக்கும் புதிய சுஸுகி ஜிக்ஸெர் எஸ்பி மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் எஸ்பி ஆகிய இரண்டு பைக்குகளும் புதிய வண்ணங்களில் கிடைக்கும்.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் சுஸுகி ஜிக்ஸெர் எஸ்பி மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் எஸ்பி பைக்குகள்!!

இந்த புதிய மாடல்களில் மெஜெஸ்டிக் கோல்டு மற்றும் கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் என்ற தங்க- கருப்பு வண்ணக் கலவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு புதிய பைக் மாடல்களிலும் விசேஷ பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் மற்றும், எஸ்பி என்ற முத்திரைகள் முன்புற கவுல் பகுதியில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இது பைக்குகளின் கவர்ச்சியை கூட்டுவதாக அமைந்துள்ளன.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் சுஸுகி ஜிக்ஸெர் எஸ்பி மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் எஸ்பி பைக்குகள்!!

இதுதவிர, சுஸுகி ஜிக்ஸெர் எஸ்பி மற்றும் எஸ்எஃப் எஸ்பி மாடல்களில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர அம்சமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. சுஸுகி ஜிக்ஸெர் எஸ்பி பைக்கில் கார்புரேட்டர் எஞ்சினும், எஸ்எஃப் எஸ்பி மாடலில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் இணைக்கப்பட்ட எஞ்சினும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் சுஸுகி ஜிக்ஸெர் எஸ்பி மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் எஸ்பி பைக்குகள்!!

மற்றபடி, வேறு எந்த மாற்றங்களும் இல்லை. இந்த இரண்டு பைக் மாடல்களிலும் 155சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 14.6 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் சுஸுகி ஜிக்ஸெர் எஸ்பி மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் எஸ்பி பைக்குகள்!!

சுஸுகி ஜிக்ஸெர் எஸ்பி மற்றும் எஸ்எஃப் எஸ்பி பைக் மாடல்களில் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் சுஸுகி ஜிக்ஸெர் எஸ்பி மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் எஸ்பி பைக்குகள்!!

இந்த பைக் மாடல்களில் முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. எல்இடி டெயில் லைட்டுகள், ட்வின் போர்டு புகைப்போக்கி குழாய் அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக கூறலாம்.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் சுஸுகி ஜிக்ஸெர் எஸ்பி மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் எஸ்பி பைக்குகள்!!

இந்த புதிய சிறப்பு பதிப்பு மாடல்கள் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவத்துள்ளது. இந்த பைக் மாடல்களில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருப்பதும் மதிப்பை கூட்டுவதாக இருக்கிறது.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் சுஸுகி ஜிக்ஸெர் எஸ்பி மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் எஸ்பி பைக்குகள்!!

சுஸுகி ஜிக்ஸெர் பைக்கின் எஸ்பி மாடல்கள் விலை உயர்ந்த மாடலாக விற்பனை செய்யப்பட இருக்கின்றன. புதிய சுஸுகி ஜிக்ஸெர் எஸ்பி பைக் ரூ.87,250 எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஜிக்ஸெர் எஸ்எஃப் எஸ்பி பைக் ரூ.1 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். பஜாஜ் பல்சர் என்எஸ் 160, ஹோண்டா ஹார்னெட் 160ஆர், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 4வி ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Monday, July 9, 2018, 18:53 [IST]
English summary
Suzuki Motorcycle India has launched the 2018 editions of the Gixxer SP and the fully-faired SF SP. The Suzuki Gixxer SP is priced at Rs 87,250. While the Suzuki Gixxer SF SP has a price tag of Rs 1.00 lakh. Both prices are ex-showroom (Delhi).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+